உலகில் ஜோம்பிகள் உருவாக வாய்ப்புள்ளதா? உண்மையும் உடான்ஸூம்
உலகில் ஜோம்பிகள் உருவாவது சாத்தியம்தான்!
ரியல்: 1968ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில திரைப்படங்கள் வழியாக ஜோம்பிகள் பற்றி சிந்தனைகள் பேசப்படத் தொடங்கின. சாபம் அல்லது நுண்ணுயிரிகளின் தாக்குதல் காரணமாக ஜோம்பிகள் எனும் சதை தின்னும் கொடூர மனிதர்கள் உருவானதாக காமிக்ஸ்கள், சாகச நாவல்கள் கூறின. பூமியில் நிலவும் கடும் குளிர், அனல் வெயில், மழை, புயலுக்கு இவர்கள் தாக்குப்பிடித்து வாழ முடியாது. மூளை செயல்படாதபோது, உடல் உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படாது. ஜோம்பிகள் பெரும்பாலும் தலையில் அதிகம் காயங்களோடு இருப்பதால், அவர்கள் நடந்துவருவது, ஒருவரைத் தாக்குவது சாத்தியமில்லை. நுண்ணுயிரிகள் தாங்கள் தாக்கும் உயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை இருக்கும். ஜோம்பிகள் நுண்ணுயிரி தாக்குதலால் இறப்பதற்கே வாய்ப்பு அதிகம். ஐம்புலன்கள் வேலை செய்யாது, செரிமானத் திறன்கள் இல்லை என்பதால் ஜோம்பிகள் பூமியில் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை.
நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது
ரியல்: உண்மை. இங்கு நம்மை சுமந்து பல்வேறு நகரங்களுக்கு இடையில் பறக்கும் விமானங்களின் எந்திர விசிறி சுழற்சிக்கு ஆதாரமாக காற்று உள்ளது. ஆனால் விண்வெளியில் காற்று இல்லையே! அமெரிக்காவில் 1950ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட எக்ஸ்-15 என்ற விண்வெளி விமானம், 1959ஆம் ஆண்டு விண்வெளியைத் தொட்டது. ஒலியின் வேகத்தில் பயணிக்கும் இதில் சாதாரண விமான எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக எக்ஸ் -15 என்ற விமானம் விண்வெளி தொடங்குவதாக கூறப்படும் நூறு கி.மீ தொலைவை எட்டிவிட்டு திரும்பியது. இந்த விமானம் ஆக்சிஜன் மற்றும் எத்தில் ஆல்கஹாலால் இயங்கியது.
காதலுக்கும் இதயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!
ரியல்: உணர்ச்சிகள், கருத்துகள் இரண்டுக்கும் அடிப்படை மூளைதான். காதலின் அடையாளமாக இதயம் மாறியதற்கு தொன்மை எகிப்தியர்களே காரணம். இதயத்திலிருந்து பல்வேறு ரத்த நாளங்களுக்கு ரத்தம் அனுப்பப்படுவதால், அனைத்து உணர்ச்சிகளுக்கும் மையம் இதயம்தான் என முடிவுக்கு வந்துவிட்டனர். பின்னாளில் இந்த கருத்துகளில் மாற்றம் வந்தாலும் மக்களின் மனதிலுள்ள நம்பிக்கையை மாற்ற முடியவில்லை. அட்ரினலின் சுரப்பால் நமக்கு ஏற்படும் எந்த வகை வலிமையான உணர்ச்சியானாலும் அதற்கு இதயம் லப்டப் என துடிப்பை அதிகரிக்கிறது. எனவே, காதல் என்றால் இதயம் என உலகத்தினரே ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
இடதுகை பழக்கம் கொண்டவர்கள் புதுமைத்திறன் கொண்டவர்கள்.
ரியல்: பொய். உலகில் உள்ள பெரும்பாலான பொருட்கள் வலதுகைப் பழக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. எண்ணிக்கையில் குறைவானவர்கள் எனபதால் இடதுகைப்பழக்கம் கொண்டவர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவது போல் தோன்றுகிறது. நமது மூளையின் வலதுபக்கம் உடலின் இடது பக்க செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. மூளையின் இடது பக்கம் வலது பக்க உறுப்புகளை செயல்பட வைக்கிறது. ஒருவர் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வேகம், செயல்படுத்துவது அடிப்படையில் புதுமைத்திறன் கொண்டவர் எனலாம். இடதுகையைப் பயன்படுத்துகிறார் என்பதன் அடிப்படையில் அல்ல.
நமது மூளையால் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்க முடியும்.
ரியல்: நிஜமல்ல. நமது மூளை ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் கொள்ள முடியும். வேறு வேறு விஷயங்களை யோசிப்பது போல தோன்றினால், ஒன்றை முடித்துவிட்டு மற்றொன்றை வேகமாக யோசிக்கிறது என்று அர்த்தம். சிலர் வேகமாக யோசித்து முடிவெடுத்து செயல்படுவார்கள். சிலர் அதனை மெதுவாக செய்வார்கள் என்கிறார்கள் மூளை ஆராய்ச்சியாளர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக