கோடைக்கால டூரில் டிராகுலா குடும்பத்தை தீர்த்துக்கட்ட பிளான் போடும் வான்ஹெல்சிங் குடும்ப வாரிசு! - ஹோட்டல் டிரான்சில்வேனியா 3

 

 

 

Hotel Transylvania 3: Summer Vacation DVD Release Date ...

 

 

 

 

ஹோட்டல் டிரான்சில்வேனியா 3

 

Director:Genndy Tartakovsky
Produced by:Michelle Murdocca
Writer(s):Genndy Tartakovsky, Michael McCullers

டிராகுலா இம்முறை பஸ்சில் மனிதர்களுடன் தன்னை மறைத்து சென்றுகொண்டிருக்கிறார். அவரைத் தவிர்த்து பிற நண்பர்கள் எல்லோருமே வேறுபட்ட உடல் வடிவைக் கொண்டவர்கள். இதனால் மக்கள் பயந்துவிடுவார்கள் என தங்களை மறைத்து பயணிக்கிறார்கள். அப்போது அங்கு வரும் வான்ஹெல்சிங் குடும்பத்தின் தாத்தா, அவர்களை பழிகொண்டு குடும்பத்தின் பெருமையை நிலைநாட்ட நினைக்கிறார். ஆனால் மனிதர்களால் டிராகுலாக்களை கொல்ல முடியாது என்பதை ஏற்காமல் அவர்களை வேட்டையாடத் துடிக்கிறார். இதனால் டிராகுலா தன் நண்பர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் தள்ளிவிட்டு அவரை எதிர்கொண்டு வெல்கிறார். அதாவது அப்படி நினைத்துக்கொண்டு தனது ஹோட்டலுக்கு நண்பர்களுடன் செல்கிறார்

 

Hotel Transylvania 3: Sony Confirms September 2018 Release ...

பல நூறு ஆண்டுகளாக மனைவி இல்லாமல் வாழ்ந்துவிட்டதால் அவருக்கு தனிமை விரக்தியைத் தருகிறது. இதைக் கவனித்த அவரது மகள் அவருக்கு கோடை கால டூர் ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அவர் என்றால் அவரது ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்திற்கும்தான். அங்கு செல்வது அவரது மகள் திட்டம் என்றாலும் செல்லும் கப்பலின் கேப்டன் இளம்பெண்ணுக்கு டிராகுலா கூட்டத்தை அழிக்கும் வன்மம் மனதில் ஏற்படுகிறது. எதனால் அந்த இளம்பெண் அவரை கொல்ல நினைக்கிறார், அவரது முயற்சி பலித்ததா என்பதுதான் இறுதிக்காட்சி

 

'Hotel Transylvania 3: A Monster Vacation' review: Adam ...

படம் முழுக்க டிராகுலாவின் குடும்ப நண்பர்களை ரசித்தாலே போதும். அதைவிட இன்பம் என்ன வேண்டிக்கிடக்கிறது? சோனி அனிமேஷன் குழுவினர் பிரமாதமாக வேலை பார்த்திருக்கிறார்கள். காதல் வரும்போது டிராகுலா ஆடும் டான்ஸ் அட்டகாசம். அதிலும் அதனை நீங்கள் தமிழில் பார்க்கும்போது அடடா.. அப்பா, மகளுக்கான பாசம், குடும்பத்தின் அவசியம், தனக்கான துணை தேடி டிராகுலா செய்யும் கோக்குமாக்கு முயற்சிகள், மகளின் பொறாமை, ஜிங் இருவரின் மனதிலும் வந்த பிறகு நடக்கும் மாயம் என பின்னியிருக்கிறார்கள்

 

'Hotel Transylvania 3': Meet the Van Helsings in 'Summer ...

இறுதியில் வில்லன் தன்னோடு தன் குடும்பத்தாரையே கொல்ல முயல்கிறான் என்றாலும் கூட காதலியின் தாத்தாவை டிராகுலா காப்பாற்றுவது நெகிழ்ச்சி. டிராகுலாவின் நண்பர்கள் அனைவருமே விதவித வடிவங்களில் வந்து காமெடியில் அசத்தியிருக்கிறார்கள்.


கொண்டாட்டம்!

கோமாளிமேடை டீம்


கருத்துகள்