உங்களால் முடிந்த பெஸ்டை கிடைக்கின்ற வாய்ப்புகளில் கொடுத்தால் போதும் ஜெயித்துவிடலாம்! சசி தரூர் - அரசியல்வாதி, எழுத்தாளர், அறிவுஜீவி

 

 

 

 

ராமர் கோயில் பூமி பூஜை... காங்கிரஸ் தலைவர் கபில் சிபலின் ...

 

 

சசிதரூர்


பிரபல எழுத்தாளர், காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர்.


2009இல் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் தரூர். அதற்கு முன்னர் 1997-2007 வரை ஐ.நாவில் தகவல்தொடர்பு தொடர்பான பணியில் இருந்தார். கேரளத்தை பூர்விகமாக கொண்டவர், திருவனந்தபுரத்தில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார்.


சசி தரூர் வெளிநாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி || Delhi ...
 

வெளிநாடுகளைப் பற்றிய கட்டுரை நூல்கள், நாவல், தத்துவம் என டஜன் கணக்கிலான நூல்களை எழுதி குவித்துள்ளார். டிவிட்டர் இவர் எழுதும் பல்வேறு கருத்துகளை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படிக்கின்றனர். விவாதிக்கின்றனர். 2006இல் சசி தரூரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐ.நா தலைவராக்க பரிந்துரைத்தது. ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை. 22 வயதில் ஐ.நாவில் அதிகாரியாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தில், .நா தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். இந்த பதவி முழுக்க பல்வேறு நாடுகளின் அரசியல்போட்டியை உள்ளடக்கியது என்று கூறினார். 50 வயதில் அடுத்து நான் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு வேலையைத் தேடுவது என்பது சரியான முடிவல்ல. நான் எடுத்த முடிவு சரிதான் என்றே நினைக்கிறேன். காரணம் ஒருமுறை முயற்சித்து பார்த்திருக்கலாமே என்று நான் எப்போதுமே நினைக்கவேண்டியதில்லை. அரசு என்னிடம் தேர்தலுக்காக முயல கூறியது. என்னுடைய முயற்சிகளை நான் செய்தேன். ஆனால் இறுதியில் தோற்றுப்போனேன்.


பிறகு அரசியலில் இறங்க தீர்மானித்தவுடன் இவரை பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் அணுகின. இந்தியாவில் பன்மைத்தன்மையைப் பற்றி பெருமை கொண்டவரான தரூர், பாஜவின் கோரிக்கையை தவிர்த்தார். இடதுசாரிகளின் பொருளாதாரம் சார்ந்த வேறுபட்ட எண்ணங்கள் கொண்டிருந்த தால் காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்றார். தனது வாழ்க்கையை திரும்பி பார்த்து தரூர் சொல்வது இதுதான். யாரும் உங்களை விட சிறப்பாக செயல்பட்டுவிட முடியாது. எனவே உங்களுடைய பெஸ்டை எப்போது யோசியுங்கள். அதனை உங்களின் செயல்பாடுகளில் காட்டுங்கள் என்கிறார்.


கௌசிக் தேகா


இந்தியா டுடே


கருத்துகள்