பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தாலே குற்றங்கள் குறைந்துவிடும்! - ஆனந்த்பென் படேல், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர்

 

 

 

 

 

 

Several BJP-ruled states like UP are enacting ‘Love Jihad’ laws.

 

 

 

 

ஆனந்த்பென் படேல்

உத்தரப்பிரதேச ஆளுநர்


நீங்கள் பதவியேற்றபிறகு பல்கலைக்கழக கல்வி தொடர்பான உறுதியான முடிவுகளை எடுத்திருக்கிறீர்கள். பெருந்தொற்று தொடங்கியபிறகு அனைத்து விஷயங்களும் மாறியுள்ளன என்று கூறலாமா?


நான் பொறுப்பேற்ற பிறகு பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி விசாரணை செய்தேன். 2014ஆம் ஆண்டு தொடங்கி 260 கோப்புகள் தேங்கி கிடப்பதை அறிந்தேன். அவற்றை சரிசெய்யத்தொடங்கியுள்ளேன். நாம் எதிர்பார்த்த முடிவுகள் இன்னும் இந்த விவகாரத்தில் கிடைக்கவில்லை. பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு இம்முறையில் முடிவுக்கு வந்துள்ளது.


நீங்கள் பெருந்தொற்று தொடங்கியபிறகு நிறைய இடங்களை சென்று பார்வையிட்டு உள்ளீர்கள். சட்டம் ஒழுங்கு பற்றி உங்கள் பார்வை என்ன?


நான் கிராமத்திலுள்ள பெண்களை விசிட்டின் போது சந்தித்தேன். முன்னர் இருந்த நிலைக்கு இப்போது சட்டம் ஒழுங்கு பரவாயில்லை என்று கூறுகிறார்கள். தொழில்துறைகளும் நிறைய வாய்ப்புகளை வழங்குவதாகும் தெரியவந்துள்ளது.


பெண்களுக்கு எதிராக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறதே?


இந்த சமூகத்தில் நிறைய பிரச்னைகள் உள்ளன. இவை குடும்பம், சமூகம், தனிநபர் என உள்ளதால் நீங்கள் கூறியதுபோல சில பிரச்னைகள் உருவாகின்றன. நான் இதற்கு சரியான முறையில் நீதி வழங்குவது என்பதை தீர்வாக முன்வைக்கிறேன். அதேசமயம், குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை கவனமாக வளர்க்கவேண்டும். பெற்றோர் தங்கள் பையன், பெண் வெளியில் என்ன செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்.


மதமாற்ற தடைச்சட்டம் உங்கள் மாநிலத்தில் அமலாகியுள்ளது. பெண்கள் தாங்கள் தாங்கள் விரும்பித்தான் திருமணம் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.இந்த விவகாரம் உங்கள் கவனத்திற்கு வந்ததா?


எந்த மசோதா உருவானாலும் இந்த முறையில் அது வெளிவரக்கூடாது. முதலில் எத்தனை பெண்கள் திருமணம் செய்துகொண்டனர், அவர்களில் யாருக்கு மதமாற்ற பிரச்னை உள்ளது, எத்தனை பெண்கள் திரும்பி வந்துள்ளனர், எத்தனை பெண்கள் புகார் கொடுத்துள்ளனர், பையனின் பெயர் இப்படி மாற்றப்பட்டுள்ளது என பெற்றோர் புகார் கொடுத்துள்ளனரா என்பதை ஆராய வேண்டும். பெண்கள் கூட என்னிடம் பல்வேறுவிதமான புகார்களோடு வந்துள்ளனர். நான் இதைப்பற்றி அரசுக்கு தெரிவித்துள்ளேன். ஆனால் அதிக புகார்கள் வரவில்லை.


விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது?


விவசாயிகள் புத்திசாலிகள். இந்தியாவின் வேறு எந்த பகுதியிலாவது போராட்டம் நடைபெறுகிறதா? பஞ்சாப் விவசாயிகள் மட்டும்தான் போராடி வருகிறார்கள். விவசாய மசோதா விவாதிக்கப்பட்டபோது இதுபோன்ற எத்தகைய பிரச்னைகளும் எழுப்பப்படவில்லை. சட்டங்களை திரும்ப பெற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.



போராட்டத்தின்போது பொருட்கள் சேதமானால் அதற்கு தொடர்புடையவரிடமிருந்து இழப்பீடு வசூலிக்கும் சட்டம் உத்தரபிரதேசத்தில் உள்ளது. அதை பயன்படுத்தி யாராவது உங்களிடம் உதவி கோரினார்களா?


தவறு செய்தவர்கள் எங்கு சென்றாலும் தப்பிக்கவே முடியாது. ஆனால் இந்த சட்டப்படி யாரும் என்னை அணுகவில்லை.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


மௌல்ஶ்ரீ சேத்




கருத்துகள்