தடுப்பூசி பற்றிய தகவல்களை முறைப்படி மக்களுக்கு தெரிவிப்பதே அரசின் கடமை! - வைரஸ் ஆராய்ச்சியாளர் ஷாகித் தமீல்
ஷாகீத் தமீல்
நோய் தடுப்பியலாளர், அசோகா பல்கலைக்கழகம்
எதற்காக தடுப்பூசியை தேசவிரோதம் என்று கூறுகிறார்கள்?
நான் தேசவிரோதி என்று கூறப்பட்டு வருபவர்களில் ஒருவன். நான் இதற்கு என்ன பதில் சொல்லுவது? எங்களை தேசவிரோதிகள் என்று கூறுபவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல தகுதியானவர்கள். நாங்கள் சில எச்சரிக்கைகளை சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் நீங்கள் இதனை கருத்தில் கொள்ளவில்லையென்றால் அதனால் ஆபத்துதான் நேரும்.
நோய்தடுப்பியலாளராக பறவைக்காய்ச்சலை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பறவைக்காய்ச்சல் எப்போதும் பனிக்காலத்தில்தான் ஏற்படும். 2006 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மட்டும் 25 முறை பறவைக்காய்ச்சல் 15 மாநிலங்களைத் தாக்கியது. அது வானிலிருந்து விழவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கோவிட் காலம் என்பதால் மக்கள் பதற்றமாக இருக்கிறார்கள். பறவைக்காய்ச்சல் என்பது மிகவும் அரிதாகவே மனிதர்களைத் தாக்குகிறது. இந்த பாதிப்பை நம்மால் தீர்க்க முடியும். இதற்கான மருந்துகள் உள்ளன.
தடுப்பூசியை இவ்வளவு வேகமாக கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் என்ன?
உண்மைதான். சோதனைகளை விதிமுறைகளை பின்பற்றி செய்தால் போதுமானது. பெருந்தொற்று பரவி வருகிறது. அதனைத் தடுக்க நாம் தடுப்பூசியை உருவாக்கவேண்டும் என்பது உண்மை. ஆனால் அந்த தடுப்பூசியை பயன்படுத்திய தகவல்களை மக்களுக்கு கூறவேண்டும் என்பது முக்கியம் அல்லவா? தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் மக்களுக்கு இத்தகவல்களை மறைத்து வைத்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வற்புறுத்துவது தவறு.
தடுப்பூசியை பற்றிய முழுமையான தகவல்கள் வெளியாகும் முன்னரே அதனை மக்களுக்கு செலுத்த தொடங்கிவிட்டனரே?
நான் கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரு தனியார் மருந்து நிறுவனங்களின் தடுப்பூசிகள் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. எனக்கு இந்த நிறுவனங்களில் எந்த பங்குகளும் கிடையாது. கிருஷ்ணா எல்லா என்ற பாரத் பயோடெக் நிறுவனர் எனக்கு முப்பது ஆண்டுகால நண்பர். ஆனால் இங்கு நான் கேட்பது, தடுப்பூசியின் திறன் பற்றிய அறிவியல் தகவல்கள், உண்மையை மட்டுமே. எனது தனிப்பட்ட உறவுகளை இதில் ஊடே கொண்டு வர விரும்பவில்லை.
சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி முதலில் போடப்படுகிறது. ஏறத்தாழ பரிசோதனைச்சாலை பன்றிகள் போல. அவர்களுக்கும் இதுபற்றிய பயம் இருக்குமே?
சுகாதார பணியாளர்கள் நீங்கள் பன்றிகள் என்று சொல்வதை பாதி மட்டுமே நான் ஏற்பேன். பாரத் பயோடெக் நிறுவனம் மூன்று நிலை சோதனைகள் செய்யப்பட்டுவிட்டன என்று கூறுகிறது. ஆனால் சீரம் இன்ஸ்டிடியூட்டின் மருந்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. சீரம் இன்ஸ்டிடியூட்டின் மருந்து பற்றி பிரேசில், இங்கிலாந்து நாட்டிலிருந்துதான் நாம் தகவல்களைப் பெறவேண்டும். நான் புள்ளியியலாளர் இல்லை என்பதால், ஒருங்கிணைந்த தகவல்களை இணைத்துப் பார்த்து அதன் திறனைப் பற்றி முடிவெடுக்க முடியவில்லை. ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு அதன் திறன் பற்றிய தன்மையைக் கூறிவிட்டால் அவர்களுக்கு பயம் இருக்காது.
பொதுத்தளத்தில் இதுபற்றிய தகவல்கள் இருக்கிறதாழ
இரண்டு நிலைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. மூன்றாவது நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. தடுப்பூசி என்பது அறிவியலின் பாற்பட்டது. அதற்கு தகவல்கள், நிரூபணங்கள்தான் தேவை. மதமோ, இனமோ தேவையில்லை. இதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியா
ரீமா நாகராஜன்
கருத்துகள்
கருத்துரையிடுக