சிவப்பு இறைச்சி இதய நோய்களை அதிகரிக்கிறது! - பேராசிரியர் வால்டர் சி வில்லெட்
வால்டர் சி வில்லெட்
நோயியல் துறை பேராசிரியர்
இறைச்சி சாப்பிடுவது பற்றி ஈட் லான்செட் ஆய்வு வெளியாகியுள்ளது. அது எந்த வகையில் உலகிற்கு ஆபத்தானது?
2050இல் உலக மக்கள் தொகை பத்து பில்லியனாக உயரவிருக்கிறது. நாம் தற்போது சாப்பிடும் அளவுக்கு இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டால், காடுகள் நிறைய அழிக்கப்படும் விலங்குகளுக்கான உணவுக்காக நிறைய தொழில்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படும் ஆபத்து உள்ளது. பசுமை இல்ல வாயுக்களும் அதிகரிப்பதால் பருவச்சூழல் மாறுபாடுகளும் ஏற்படும். நாம் இறைச்சியை விட்டு தானியங்கள், பருப்புகள், காய்கறிகளை சாப்பிடுவது இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அணுகுமுறை. மக்கள் தங்கள் உடல்நலனுக்கு பொருத்தமான உணவுமுறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு நாங்கள் காய்கறி சார்ந்த உணவுமுறையை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம்.
காய்கறிகள் சார்ந்த உணவு எப்படி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் போதுமானவையாகும்?
நீங்கள் உங்கள் உணவுகளை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு பின்னர் அவற்றை உணவாக கொள்வதை விட பயனளிக்க கூடியதுதான். தினசரி விலங்குகளை அடிப்படையாக கொண்ட உணவுகளை இருமுறையும், பண்ணை விலங்குகள், மீன்கள், முட்டைகளை வாரத்திற்கு இருமுறையும், சிவப்பு இறைச்சியை வாரத்திற்கு ஒருமுறையும் சாப்பிடலாம். இந்த எண்ணிக்கை மாறும்போது அது சூழலுக்கு ஆபத்தானதாக மாறும். இதன்விளைவாக காடுகள் அழிவதோடு, உணவு உற்பத்தியும் மாறுபடும்.
தாவரவகை சார்ந்த உணவுகளில் ஊட்டச்சத்துகள் போதுமானவையாக இருக்குமா?
தாவர உணவுகளில் இறைச்சியில் உள்ள அனைத்து வகை சத்துகளும் உண்டு. விட்டமின் பி 12 மட்டும் தாவர உணவுகளில் கிடையாது. இதனை நீங்கள் சப்ளிமெண்ட் முறையில் எடுத்துக்கொள்ளலாம். சிவப்பு இறைச்சியை நீங்கள் அதிகமாக சாப்பிடும்போது இதயநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
எந்த நாடுகளில் சரியான உணவுமுறையைக் கடைபிடிக்கிறார்கள்?
இஸ்ரேல், துருக்கி, மத்திய ஆசிய நாடுகள், வியட்நாம், ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த வகையில் முன்னணியில் உள்ளனர். இந்தியா இந்த வகையில் 50ஆவது இடத்தில் உள்ளது.
சீனாவிலும் இந்தியாவிலும் உணவுமுறை எப்படி கடைபிடிக்கப்படுகிறது?
சீனாவில் சிவப்பு இறைச்சி பயன்பாடு அமெரிக்காவில் உள்ளதைப் போலவே அதிகமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை மெல்ல குறைந்துவருகிறது. அமெரிக்காவில் தாவரவகை சார்ந்த உணவுகளுக்கான விழிப்புணர்வை அவர்கள் பெற்று வருகிறார்கள். எனவே, இத்துறை சார்ந்த வளர்ச்சி அங்கு மெல்ல வளர்ந்து வருகிறது. சோயா வகை சார்ந்த உணவுப்பழக்கம் மெல்ல நடைமுறைப்படுத்தி வருகிறது.
வளர்ந்த நாடுகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?
அமெரிக்கா சிவப்பு இறைச்சி, ஸ்டார்ச், சர்க்கரை, உருளைக்கிழங்கு, சால்ட் ஆகியவற்றை முடிந்தவளவு உணவில் தவிர்த்துக்கொள்வது நல்லது. வசதி படைத்தவர்கள் உணவுமுறையை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். வசதி இல்லாத மக்கள் உணவுமுறையை மாற்றிக்கொள்வது எளிதல்ல. உடல்பருமன், சர்க்கரை நோய், இதயநோய் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை அவர்கள் பெறவேண்டும்.
இதில் அரசு தலையிடவேண்டுமென நினைக்கிறீர்களா?
உலகம் முழுக்க அரசு கொடுக்கும் மானியம், உணவுக்கொள்கை, ஆராய்ச்சிகள் ஆகியவை உணவுப்பழக்கத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அனைத்து நாடுகளும் மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப்பழகத்தை ஏற்படுத்துவதில் கவனமாக செயல்படவேண்டும்.
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக