அடேங்கப்பான்னு சில உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்! வாங்க பார்ப்போம்!
பென்சிலின்
1928
பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் முக்கியமான மருந்து இது. அலெக்ஸாண்டர் பிளெமிங் விபத்தாக கண்டுபிடித்த கண்டுபிடிப்பு பல லட்சம் உயிர்களை காப்பாற்ற உதவியது. இதற்காக அவருக்கு 1945ஆம் ஆண்டு நோபல் விருது வழங்கப்பட்டது. இன்று பென்சிலின் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
கிரடிட் கார்டு
1958
அமெரிக்காவில் பேங்க் ஆப் அமெரிக்கா வங்கி கிரடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் இதனை சிலர் ஏமாற்ற பயன்படுத்தினாலும் பின்னாளில் கிரடிட் கார்டு வெற்றிபெற்றது. 1976ஆம் ஆண்டு இதன் பெயர் விசா என மாற்றப்பட்டது. இன்று உலகம் முழுக்க பயன்படும் முக்கியமான பணப்பரிமாற்ற கார்டுகளில் இதற்கு முக்கிய இடமுண்டு.
ஸ்கேன்
1953
ஸ்வீடனிலுள்ள லண்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் அல்ட்ராசோனோகிராபி கண்டறியப்பட்டது. இதன்மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் உடலை எளிதாக அறிய முடிந்தது. இதன்மூலம் கர்ப்ப பையில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் எளிதாக அறிய முடிந்தது.
ரேடார்
1935
டெத் ரே என்று பெயரில் பிரிட்டிஸ் அரசு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் வாட்சன் என்பவருக்கு பணி ஒன்றைக் கொடுத்தது. இரண்டாம் உலகப்போர் காலகட்டம் அது. எதிரிகளின் கப்பல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் சாதனம்தான் தேவை. ஆனால் இவர் கண்டுபிடித்த கருவி மூலம் அழிக்கமுடியவில்லை. ஆனால் எதிரிகள் வருவரை எளிதாக முன்னரே கண்டுபிடிக்க முடிந்தது.
மைக்ரோவேவ் ஓவன்
இன்று இந்த சமையல் சாதனம் இல்லாத வீடே கிடையாது. ஏராளமான பேக்கிங் சமாச்சாரங்களை இந்த சாதனம் கொண்டு சுடச்சுட வேகமாக சமைத்து விடலாம். 1947ஆம்ஆண்டு இதனை ரேதியன் என்ற நிறுவனம் தயாரித்தது. அப்போது இச்சாதனம் ஆறு அடியில் இருந்தது. எடை 750 பவுண்டுகள். வலை 5 ஆயிரம் டாலர்கள்.
ரோம் கண்டுபிடிப்புகள்
ரோம் நாட்டிலுள்ள வசதி படைத்தவர்களின் வீடுகள் பெரும்பாலும் பல்வேறு அறைகளைக் கொண்டதாக இருந்தன. வீடுகளுக்கான ஓடுகள் பெரும் கற்களை செம்மைப்படுத்தி உருவாக்கினர்.இதனை மரங்களை குறுக்காக பொறுத்தி அதன்மேல் ஓடுகளை வேய்ந்தனர். இந்த நாகரிக வீடு கட்டும் முறை கிரீஸ் நாட்டிலிருந்து பெற்றதுதான். கற்களையும் சிமெண்டையும் பயன்படுத்தி அழகான தரைப்பரப்பை உருவாக்கினர். இதற்கு பயன்பட்ட கற்களை மொசைக் கற்கள் என்று கூறுவர். வீட்டுச்சுவர்கள் களிமண் கற்களால் உருவாக்கப்பட்டன. இவறைற நெருப்பில் சுட்டு எடுத்து வந்து பயன்படுத்தினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக