அப்பாவை அம்மா காதலிக்க வைக்க போராடும் மகனின் போராட்டம்! - பேக் டூ தி ப்யூச்சர்
பேக் டூ தி ப்யூச்சர்
முதல்பாகம்.
இதில் மார்டி தனது நண்பரும் ஆராய்ச்சியாளருமான எம்மட் தயாரித்த கால எந்திரத்தில் விபத்தாக பயணிக்கிறார். அதுவும் கூட தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்கத்தான். இந்த கால எந்திரம் சிறப்பாக பயன்பட்டிருக்கிறது. எப்படியென்றால், குறிப்பிட்ட மெஷின் என்றால் அதனை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். ஆனால் படத்தில் அதனை காராக பயன்படுத்தி விட்டார்கள். இதனால் வேறு காலத்திற்கும் அதனால் பயணிக்க முடியும். இதனால் லாஜிக் பெரிதாக இடிக்கவில்லை.
மார்ட்டியின் அப்பா கோழையாக இருக்கிறார். அவரை அவரது உடன் படித்த நண்பர் பல்வேறு வகையில் ஏமாற்றுகிறார். மார்டிக்கு தனது அம்மா எப்படி அப்பாவை திருமணம் செய்தார் என்பதே புரியமாட்டேன்கிறது. அந்தளவு அசடாக இருக்கிறார் அவரது அப்பா. 1985லிருந்து ்1955ஆம் ஆண்டுக்கு செல்லும்போது அப்பா, அம்மாவுக்கு இடையிலான காதலை கண்டுபிடிக்கிறார். இவர் அவர்களது காதல் நடைபெறும் காலகட்டத்திற்கு முன்னரே சென்று விடுகிறார். அங்கு சென்றுவிட்டால் திரும்ப வர அதிக மின்சாரம் தேவை. அதாவது கால எந்திரத்திற்கு.. இதற்காக.. எம்மட்டின் முகவரியை தேடிப்போகும்போது விபத்தாக அவரது அப்பா ஜார்ஜை கார் விபத்திலிருந்து காப்பாற்றுகிறார். விபத்தில் மார்டி சிக்குவதால், அவரை லோரைன் எனும் அவரது அம்மா காதலிக்கத் தொடங்குகிறார். ஏன் என்று எல்லாம் கேட்கப்படாது. அந்த விபத்தில் முதலில் ஜார்ஜ் அடிபடுகிறார். அதனால் அவரை லோரைன் காதலித்தார். இப்போது மார்டி அடிபட்டதால் தானியங்காக அவரை காதலிக்கிறார்
மார்ட்டி அம்மாவின் காதலிலிருந்து தப்பி அப்பாவின் வில்லன்களை அடித்து நொறுக்கி அவரது காதலை எப்படி அம்மாவுக்கு சொல்லுகிறார். தனது கால எந்திரத்திற்கான சக்தியை எப்படி பெற்றார் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
படம் நிறைய இடங்களில் எல்லை மீறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் என்ன நோக்கமோ அதற்கேற்ப செல்வதால் கவலைப்படாமல் படத்தை பார்க்கலாம். கால எந்திரத்தில் செல்வது அங்கு நம்மை உருவாக்கியவர்களைப் பார்ப்பவது, பெரிய தலைவர்களாக மாறுபவர்களின் எளிய வாழ்க்கை என பல்வேறு ஆச்சரியங்களை படம் நெடுக பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
கால எந்திரம் பற்றி படங்களுக்கு இந்த படம் தொடக்கம் என்றே சொல்லலாம். சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். இதில் இன்னும் இரண்டு பாகங்கள் உள்ளன.
இறந்தகால பயணம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக