மனிதநேயத்தை ஒட்டியதே கலை! - அனாதைப் பிணங்களை எரிக்கும் திண்ணைநிலாவாசிகள் நாடககுழு தலைவர் பக்ருதீன்

 

 

 

 Mannequin, Lying Down, Street, Dead, Ignoring, Uncaring

 

 

அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு!


சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு, தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது. இக்குழுவினர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர். இதனை செய்யும் குழுவின் தலைவர் எம்.பக்ருதீன்.


சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம். அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன். இங்கு யாரும் அனாதைகள் இல்லை. நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை. உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம் என்றார் பக்ருதீன்.


பொதுமுடக்க காலத்திலும் கூட நாறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு. கோவில்படியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன். 2015ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனந்தி அம்மாள், அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார். அதோடு குடிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க உதவி வந்தார். இச்செயல்களே பக்ருதீனுக்கு சென்னை வர முக்கியமான காரணமாக இருந்துள்ளது.


நான் திண்ணை நிலாவாசிகள் குழுவைத் தொடங்கியபோது சமூக செயல்பாடுகளை நடிப்பு பயிற்சியாகவே கருதினோம். கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் நாங்கள் பயிற்சிகொடுத்து நாடகங்களில் பங்கேற்க வைக்கிறோம். பல்வேறு சமூக வர்க்கங்களைக்கொண்டவர்களாக நாடக குழுவினர் உள்ளனர். அனாதைப் பிணங்களை இவர்கள் பெறுவது அழுகிய நிலையில்தான் என்பதை பலரும் உணருவதில்லை. அதனை எடுத்து அடக்கம் செய்வது எளிதானது அல்ல.


நாடக ஒத்திகளை அரசு மைதானங்களில் செய்கின்றனர். நான் சொல்லுவது நமது கலைச்செயல்பாடு மனிதநேயத்தை ஒட்டி அமையவேண்டும் என்பதுதான் என்கிறார் பக்ருதீன்.




கருத்துகள்