புவிஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்கும் ரேடியோ தொலைநோக்கிகள்! - எட்ஜெஸ் ஆர்கேட் 2 தொலைநோக்கிகளின் மற்றொரு பயன் இதுவே!
புவிஈர்ப்பு அலைகளைப் பற்றி ஆராய உதவும் ரேடியோ தொலைநோக்கிகள்!
உலகில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ரேடியோ தொலைநோக்கிகள், காஸ்மிக் கதிர்களை பதிவு செய்து வருகின்றன. இதன் மூலம் உலகம் தோன்றியது எப்படி என்ற ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. கூடுதலாக அதிக அலைநீளம் கொண்ட ஈர்ப்பு அலைகளையும் பதிவு செய்யமுடியும் என்பது அறியப்பட்டுள்ளது. ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் இதனை சோதித்து வருகின்றனர்.
2015ஆம் ஆண்டு ஈர்ப்பு அலைகள் இன்டர்ஃபெரோமெட்டரி அளவீடு மூலம் கண்டறியப்பட்டன. லீகோ(LIGO) மற்றும் பிற கண்காணிப்பகங்கள் மூலம் லேசர் ஒளிக்கற்றைகள் பல கி.மீ.தூரம் குழாய் வழியாக சென்று வருவதை அளவிட்டன. பூமி வழியாக ஈர்ப்பு அலைகள் செல்வதால், ஒளி அலைகளைப் போலவே இவையும் சிற்சில மாற்றங்களுக்கு உட்பட்டன.
புவியீர்ப்பு அலைகளின் அலைநீள அளவு 10 Hzமுதல் 10 Khz வரை என இன்பெரோமீட்டர் மூலம் லீகோ கண்காணிப்பகம் அளவிட்டுள்ளது. இதன் பொருள், இந்த அலைகளை முழுமையான நாம் இன்னும் அறியவில்லை என்பதாகும். விண்ணிலுள்ள லிசா கண்காணிப்பகம் (LISA) மூலம் பெரும் கருந்துளைகளிலிருந்து குறைந்த அலைநீளமான மில்லிஹெர்ட்ஸ் முதல் மெகாஹெர்ட்ஸ், ஜிகாஹெர்ட்ஸ் வரை அலைகளை கண்டுபிடிக்க முடிந்தால் உலகம் தோன்றியது பற்றி அறிவதற்கான வாசல் திறக்கும். இதன் மூலம் அணு இயற்பியல் துறையில் உள்ள ஆற்றல் வாய்ந்த துகள்கள் பற்றியும் நாம் அறிவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அதிக அலைநீளம் கொண்ட அலைகளை அறிய இயற்பியலாளர்கள் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றனர். தற்போது ஜெர்ட்ஸென்ஷெய்டன்(The Gertsenshtein effect) எனும் முறையைப் பயன்படுத்துகின்றனர். இதில் மின்காந்தப்புலத்தில் புவியீர்ப்பு அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி அளவிடுகின்றனர். அனைத்து ஆராய்ச்சியாளர்களும் இதேபோன்ற வழிமுறையை பின்பற்றவில்லை. ஜெனீவாவிலுள்ள செர்ன் ஆய்வக ஆராய்ச்சியாளர் வாலேரி டாம்கே, ஹாம்பர்க்கைச் சேர்ந்த கமிலோ கார்சியா சிலி ஆகியோர் காஸ்மிக் அளவீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். காஸ்மிக் கதிர்களை ஆராய்வதன் மூலம் 4 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெடிப்பால் உருவான எலக்ட்ரான்களும், புரோட்டான்களும் இணைந்து நியூட்ரல் ஹைட்ரஜனை உருவாக்கின. இப்படி உருவான வானியல் மாதிரியில் காஸ்மிக் கதிர்கள் வாயிலாக பல்வேறு அலைநீளம் கொண்ட புவிஈர்ப்பு அலைகளை மின்காந்த கதிர்வீச்சாக மாற்ற முடிந்தது.
காஸ்மிக் கதிர்களில் சிதைவுகள் ஏற்படும் முன்னரே ஹைட்ரஜனில் உள்ள அணுக்கள் மறு அயனியாக்கம் அடைந்தன. இதற்குப்பிறகு 15 கோடி ஆண்டுகள் கழித்தே உலகம் உருவாகியிருக்கவேண்டும். இந்த கருப்பு காலகட்டம் என அழைக்கப்டடும் இக்காலத்தில் எலக்ட்ரான்களும் புரோட்டான்களும் ஒன்றையொன்று மோதி சிதறடித்துக்கொண்டிருந்தன. அப்போது, ஈர்ப்பு அலைகள், மின்காந்த அலைகள் ஆகியவற்றின் வெளியீட்டில் எது அதிகம் என்ற ஊசலாட்டம் இருந்தது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எட்ஜெஸ், அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஆர்கேட் 2 என்ற இரு ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் ஈர்ப்பு அலைகளை பெறும் அளவுகளை வாலேரி டாம்கே, கார்சியா ஆகிய ஆராய்ச்சிகள் ஆராய்ந்தனர். இதில் காஸ்மிக் கதிர்களை பெறும் அதிகளவு அளவு, எட்ஜெஸ்(70மெகாஹெர்ட்ஸ் ), ஆர்கேட்2 (3-30 ஜிகாஹெர்ட்ஸ்) எனும் அளவில் உள்ளது. இதனை 10 12,1014 என்று குறிப்பிடலாம். 10 ஜிகாஹெர்ட்சுக்கு குறைவான அளவில் உள்ள போட்டான் துகள்களை மேற்சொன்ன இரு ரேடியோ தொலைநோக்கிகளும் கண்டறிய முடியும் என இரு ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
https://physicsworld.com/a/radio-telescopes-could-give-us-a-new-view-of-gravitational-waves/
dont say it you are write in physics articles என எடிட்டரால் நிராகரிக்கப்பட்ட கட்டுரை
நன்றி
ஜிபி.காம்
கருத்துகள்
கருத்துரையிடுக