இடுகைகள்

ஹிட்லர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மனி!

படம்
இரண்டாம் உலகப்போர்  இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, ஜெர்மனி நாடு. இந்த நாடு ஆக்ரோஷமாக போலந்து நாட்டை ஆக்கிரமித்தது. இப்படி உலக நாடுகளுக்கு இடையில் தொடங்கிய போர் ஐந்து ஆண்டுகள் நீடித்தது.  இந்தப் போரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இவர்களுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிரே நின்றன.  இரண்டாம் உலகப்போரில் 30 நாடுகள் கலந்துகொண்டன. இதன் விளைவாக இங்கு வாழ்ந்த 100 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஏராளமான மக்கள் தற்கொலை, மன அழுத்தம், ஆயுத தாக்குதல், நோய் பாதிப்பு என 85 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். மனிதகுல வரலாற்றில் இது மறக்கமுடியாத களங்கமாக மாறியது.  செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி உலகை ஆட்சி செய்யும் வேகத்தில் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் எதிர்வினையாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன.  1939ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பொறுத்தவரை நவீனமான ஆயுதங்களைக் கொண்டிருந்தது ஜெர்மனிதான். இதன் காரணமாக போரின் தொடக்கத்தில் இ

ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன நினைத்தார் என்று அறிய உதவும் நூல்! - நூல் அறிமுகம்

படம்
  சொல்லப்படாத கதை ஹிட்லர் அண்ட் இந்தியா வைபர் புரந்தாரே ரூ.399 வெஸ்ட்லேண்ட் இந்தியாவில் ஹிட்லர் இந்தியாவைப் பற்றி என்ன கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறியாமலேயே அவரை ஆராதித்து கொடி பிடிக்கும் ஆட்கள் அதிகம். ஹிட்லரின் எஸ்எஸ் படையை அடியொற்றியே ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை மையமாக வைத்து நூல் எழுதப்பட்டுள்ளது. ஹிட்லர் இந்தியாவை பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் என்ன கருத்துகளை கொண்டிருந்தார் என தெளிவுபடுத்துகிற நூல் இது.  --------------------------------- இந்தியன் பொட்டானிக்கல் ஆர்ட் மார்ட்டின் ரிக்ஸ்  ரூ.1495 ரோல் புக்ஸ்  பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாவரங்களை ஆவணப்படுத்துகிற நூல். இதிலுள்ள நிறைய படங்களை வேறு எங்குமே நீங்கள் பார்க்க முடியாது. தற்போது உயிரியல் சார்ந்து இயங்கும் கலைஞர்களின் பல்வேறு படைப்புகளோடு நூல் நிறைவடைகிறது.  -------------------------------------------------------------- வாட்டர்  எலிமெண்ட் ஆப் லைஃப் யுத்திகா அகர்வால், கோபால் கிருஷ்ண அகர்வால் 599, ப்ளூம்ஸ்பரி அரசியலமைப்புச் சட்டப்

பனிரெண்டு ஆண்டுகளில் நாட்டையே அதிரடி சட்டங்களால் மாற்றியமைத்த ஆட்சியாளர் ! ஹிட்லர் - பா.ராகவன்

படம்
                ஹிட்லர் பா . ராகவன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பனிரெண்டுகள் ஆண்ட ஆட்சியை , வளர்ச்சியை , அழிவை , மனநிலையை , பழக்க வழக்கங்களை வாசிக்க எளிமையான முறையில் சுவாரசியமாக சொல்லுகிற நூல்தான் இது . மருதன் எழுதிய ஹிட்லர் என்ற நூலும் , பா . ராகவனின் நூலும் வேறுபடுகிற இடம் ஆய்வுத்தன்மைதான் . மருதனின் நூல் ஹிட்லரின் பல்வேறு பரிணாமங்கள் , அவரின் சிந்திக்கும் திறன் , பேச்சு ஆகியவற்றை ஆய்வு நோக்கில் எது சரியாக இருக்க முடியும் என்ற கோணத்தில் பார்க்கிறது . பா . ராகவனின் இந்த நூல் அந்தளவு தொலைவாக செல்லவில்லை . ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளை சந்தர்ப்பவாதி ஒருவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதை ஹிட்லர் நூல் மூலம் காட்டியுள்ளார் . பலரும் இன அழிப்பு , யூதர்களின் துன்பம் என்பதை மட்டும் முக்கியப்படுத்தும்போது பொருளாதார வளர்ச்சி சார்ந்து நாடு என்ன நிலையில் இருந்தது என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார் . இது ஆச்சரியகரமான ஒன்று என கூறலாம் . ஹிட்லரின் செயல்திறனுக்கும் கனவுக்க்கும் உழைக்கும் திறனுக்கும் அவர் வேறு வழியில் சென்றிருந்

ஜெர்மனியில் இன அழிப்பை செய்த ஹிட்லர் பற்றிய ஆய்வு உண்மைகள்! ஹிட்லர் - மருதன்

படம்
                  ஹிட்லர் மருதன் கிழக்கு பதிப்பகம் ஹிட்லர் பற்றி பல்வேறு யூகங்கள் இதுவரை எழுந்துள்ளன . அவரின் இளமைப்பருவம் , வளர்ச்சி , அரசியல் கட்சியில் சேர்வது , பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் , நாஜி கட்சி தொடங்கப்படுவது , இரண்டாம் உலகப்போரை அவர் தொடங்குவது , முதலில் கிடைக்கும் வெற்றி பின்னர் தலைகீழாகி அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மாறுவது என நூல்கள் எழுதப்பட்டுள்ளன . ஆனால் இதில் உள்ள வேறுபாடு , அவரைப் பற்றி பிறர் எழுதியுள்ள பல்வேறு கருத்துகளையும் ஆசிரியர் கூறியுள்ளார் . இதனால் ஹிட்லர் பற்றி முன்னர் நமக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களும் உண்மையா , பொய்யா என சந்தேகம் ஏற்படுகிறது . இனவெறியுடன் யூதர்களை அழித்தவர் என்று ஹிட்லர் கூறப்பட்டாலும் , அவரின் இளமைக்காலம் , அரசியல் நுழைவு , வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது , இன அழிப்பைத் தொடங்குவது என பல்வேறு விஷயங்களை பேசுபவர்கள் மெல்ல அவரை ஆதரிக்கத் தொடங்குவது நடைபெறுகிறது . இதற்கு காரணம் , இன்றும் அவர் தொடங்கிய இன ஒழிப்பு என்பது ஏதோ ஒரு வகையில் நடந்து வருகிறது என்பதால்தான் . ஹிட்லர் என்பவர் அனைத்து வ

81 ஆண்டுகள் புகழ்பெற்ற பீட்டில் கார்!

படம்
பீட்டில் கார் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற கார். ஹிட்லரை வெறுத்தாலும் அவர் உருவாக்கிய இந்த ஃபோக்ஸவேகன் பீட்டில் கார், அதன் சிக்கனத்திற்காக பெரிதும் மக்களால் விரும்ப ப்பட்டது. 1960களில் இக்கார்தான் அதிகம் வாங்கப்பட்ட கார். சுமார் 23 மில்லியன் கார்கள் இதுவரை விற்கப்பட்டு இருக்கின்றன. கடந்த மாதம் பீட்டில் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டது. காலம்தோறும் மாறிவரும் கார்களின் பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களை கிளாசிக் காரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?   ஆனால் தயாரிப்பாளர்கள் சுலபமாக பீட்டில் என்ற காரை விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள் என்றே தெரிகிறது. காரணம். இக்காரின் எலக்ட்ரிக் வெர்ஷனைக் கொண்டுவரப்போகிறோம் என்று நிறுவனம் அறிவித்திருக்கிறது. 1933 ஆம்ஆண்டு ஹிட்லர் அமெரிக்காவின் ஃபோர்டு டி மாடல் காரை காரசாரமாக விமர்சித்தார். டிமாடல் கார் மக்களின் வர்க்கவேறுபாடுகளை அதிகரித்த து தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று பேசினார். இதனை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பிரசுரித்தது. பீட்டில் கார் உருவாக்கப்பட என்ன காரணம், ஐந்துபேர் பயணிக்கும்படியான எளிமையான கார். பாகங்கள் எளிதில்

தீவிரவாத அமைப்பைச் சந்திப்பது பெருமையா? -ஜெர்மன் தூதர்

படம்
யா ஆர்எஸ்எஸ், கோல்வால்கர், சாவர்கர் காலத்திலிருந்தே ஜெர்மனியின் நாஜிக் கொள்கையை புகழ்ந்து பேசிவருகிறவர்கள். அவர்கள் நாஜி படையினரைப் போலவே ஷாக்கா எனும் பயிற்சி முறைகளை செய்து வருகிறவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசு அமைப்புகளுக்குள் ஊடுருவ முயன்று தோற்றவர்களுக்கு, 2014 ஆம் ஆண்டு மோடி ஆதரவு தர இன்று அனைத்து அமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் நம்பகத்தன்மையை தூள் தூளாக்கி வருகின்றனர். அண்மையில் ஜூலை 17 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியாவிற்கான தூதர், ஆர்எஸ்எஸ் தலைமையகத்தை சுற்றிப்பார்த்து அதனை பெருமையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதுவே இணையத்தில் மிகவேகமாக பரவி வரும் செய்தி. ஆர்எஸ்எஸ், கலாசாரத் தளத்தில் முக்கியப் பங்காற்றும் அமைப்பு. கலை, அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் என அனைத்து தளத்திலும் இதற்கு கிளை அமைப்புகள் உண்டு. ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைத்து அமைப்புகளிலும் கிளைபரப்பி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் ஜனநாயகத் தன்மையை வற்றச்ச்செய்து அதனை மற்றொரு ஆர்எஸ்எஸ் போல ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டதாக மாற்றி வருகிறார்கள். 2002 ஆம்ஆண்டு  குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டத

ஹிட்லரைப் பற்றி எழுதி உலகை எச்சரித்த முதல் பத்திரிகையாளர்!

படம்
டோரத்தி தாம்சன் டோரத்திக்கு நிறைய எதிரிகள் உண்டு. ஆனால் அவரே ஹிட்லருக்கும் முக்கியமான எதிரியாக மாறும் சூழலும் வந்தது. ரேடியோ மற்றும் நாளிதழ் வழியாக அமெரிக்கர்களுக்கு ஹிட்லரின் பாசிச வேகத்தை உணர்த்திய பத்திரிகையாளர் இவரே. 1893  ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று பிறந்தவர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர். குடும்பமே தீவிரமான மதாபிமானிகள். தாம்சனுக்கு ஏழுவயது இருக்கும்போது, இவரின் தாய் இறந்துபோனார். மூன்று குழந்தைகளை பார்த்துக்கொள்ள அவரது தந்தை இரண்டாவது மணத்தைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் வரும் பெண் எப்படி மூன்று குழந்தைகளுக்கு தாயாக இருக்க முடியும்? பிரச்னை தலைதூக்க தாம்சன் தன் அத்தைகளின் வீடுகளில் வளர்ந்தார். குடும்ப துக்கம் தொண்டையை அடைக்கவில்லை. படிப்பில் அத்தனை வேகத்தையும் காட்டி 1914 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். பின் பெண்களுக்கான உரிமைகளுக்காக சில ஆண்டுகள் போராடினார். போராட்டம், உரிமை, பெண்களைக் குறித்த அக்கறை எல்லாம் சரிதான். ஆனால் சோறு முக்கியம்தானே? நியூயார்க், சின்சினாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினாலும் காசு கிடைக்கவில்லை. வாழ்வதே போராட்டமாக மாறியது. தன்

ஹிட்லர், சதாம் உசேன், காஸ்ட்ரோ குணங்கள் எப்படி?

படம்
தலைவர்களின் குணங்கள் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டவர்களைப் பற்றிய அறிக்கை பெரிய ஆச்சரியம் தராது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குணங்களை ஆராய்ந்து அதனைப் பற்றிய முடிவுகளை கூறுவது நிச்சயம் பலருக்கும் ஆர்வமூட்டும்தானே? ஹிட்லர், பிடல் காஸ்ட்ரோ, சதாம் உசேன் ஆகியோரைப் பற்றி உளவியலாளர்கள் ஆராய்ந்து என்ன கூறியுள்ளனர் தெரியுமா ஹிட்லர் வேதனை, வலிகளை ரசித்து அனுபவிப்பவர். தன்னைப் பற்றிய மிகையான எண்ணங்களைக் கொண்டவர் என்று 1943 ஆம்ஆண்டு ஹென்றி ஏ முர்ரே என்ற ஆய்வாளர் அறிக்கையை எழுதி வெளியிட்டார். பிடல் காஸ்ட்ரோ 1961 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் உளவியல்துறை மருத்துவர் செய்த ஆய்வில், காஸ்ட்ரோ மக்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கிய மனச்சமநிலை இல்லாத தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் க்யூபாவுக்கு இடையிலான பிரச்னைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அறிக்கை அடிபட்டு போகும் அபாயம் உள்ளது. சதாம் உசேன் அதிகாரத்தை நோக்கிச் சென்ற சதாம் உசேன் அமெரிக்க அரசால் தூக்கிலிடப்பட்டார். இவர் தனது லட்சியத்தை அடைய யாரையும் பணயம் வைக்குமளவு துணிந்தார். வன்முறை, ஆயு