இரண்டாம் உலகப்போரை தொடங்கி வைத்த ஜெர்மனி!















இரண்டாம் உலகப்போர் 


இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது, ஜெர்மனி நாடு. இந்த நாடு ஆக்ரோஷமாக போலந்து நாட்டை ஆக்கிரமித்தது. இப்படி உலக நாடுகளுக்கு இடையில் தொடங்கிய போர் ஐந்து ஆண்டுகள் நீடித்தது. 

இந்தப் போரில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இவர்களுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிரே நின்றன. 

இரண்டாம் உலகப்போரில் 30 நாடுகள் கலந்துகொண்டன. இதன் விளைவாக இங்கு வாழ்ந்த 100 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஏராளமான மக்கள் தற்கொலை, மன அழுத்தம், ஆயுத தாக்குதல், நோய் பாதிப்பு என 85 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். மனிதகுல வரலாற்றில் இது மறக்கமுடியாத களங்கமாக மாறியது. 

செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி உலகை ஆட்சி செய்யும் வேகத்தில் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதன் எதிர்வினையாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தன.  1939ஆம் ஆண்டு ராணுவ பலத்தைப் பொறுத்தவரை நவீனமான ஆயுதங்களைக் கொண்டிருந்தது ஜெர்மனிதான். இதன் காரணமாக போரின் தொடக்கத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள் தடுமாறின. ஆனால் இதனை ஜெர்மனி முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது. 

1941ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று ஜெர்மனி, நாம் இனி எல்லாமே என நினைத்து சோவியத் யூனியன் மீது போர் தொடுத்தது. இந்த நேரத்தில் ஜெர்மனியின் நட்பு நாடாக இருந்த ஜப்பான் சீனாவின் மீது தாக்குதல் தொடுத்தது. அமெரிக்காவின் பேர்ல் துறைமுகம் மீதும் நினைத்து பார்க்க முடியாத தாக்குதலை நடத்தி அதிர்ச்சியூட்டியது. இதனால் அமெரிக்கா, ஜப்பான் மீது போர் செய்வதாக அறிவித்தது. அதற்குப் பிறகு நடந்த பாதிப்பை உலகமே அறியும். 

சோவியத்தின் நிலப்பரப்பை ஜெர்மனி சரியாக புரிந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக திறமையான ராணுவப்படை இருந்தாலும் அவர்களால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லை. மெல்ல ராணுவம் அங்கு எதிரிகளோடும் இயற்கையான உறைபனியோடும் போராடிக் கொண்டிருந்தது. இதன் விளைவாக ராணுவம் மெல்ல வீழத் தொடங்கியது. போர் என்றால் வேகமாக போரிட்டு அதனை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம். மாதங்கள், ஆண்டுகள் என போரிட்டுக்கொண்டிருப்பது வீரர்களை  மனத்தளவில் தளர்ச்சியை உருவாக்கும். இதனை ஜெர்மனி அதிபர் ஹிட்லர் புரிந்துகொள்ளவில்லை. 

1945ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி,ஜெர்மனி நாடு தோல்வியுற்றது உறுதியானது. ராணுவப்படைகளும் இங்கிலாந்து,சோவியத் படைகளிடம் சரண் அடைந்தன. இது முதல் பகுதிதான். அடுத்தபகுதியான போர் ஜப்பான் அமெரிக்காவிடம் சரண் அடைந்ததும் முடிவுக்கு வந்தது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று, ஜப்பான் அமெரிக்காவிடம் சரண் அடைந்தது. இதற்கு முக்கியமான காரணம், ஹிரோஷிமா, நாகஷாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதுதான். ஜப்பான் பணிந்ததும் இரண்டாவது உலகப்போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. 

டெல் மீ வொய் 

 





கருத்துகள்