மறுசுழற்சி செய்யப்பட்ட நைலான் இழையால் தயாரிக்கப்படும் ஆடைகள்!

 











சூழலைப் பாதிக்காத உடைகள்


2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டனுக்கு லஷ்மி சத்யநாராயணன் இடம்பெயர்ந்துவிட்டார். இவர், அதுவரை கைத்தறி ஆடைகளை மட்டுமே அணிந்து வந்தார். ஆனால் அமெரிக்காவிற்கு சென்றபிறகு அதுபோன்ற ஆடைகளை தொடர்ச்சியாக வாங்க முடியவில்லை. அப்போதுதான் அவருக்கு மறுசுழற்சி செய்த பாலிஸ்டர் ஆடைகளைப் பற்றி தெரிய வந்தது.  இவற்றை ஆன்லைனில் வாங்கத் தொடங்கினார். 

செயற்கை இழைகள் என்பது உண்மை என்றாலும் இதனை கழிவாக எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து மறுசுழற்சி எடுத்து சேலையாக நெய்கிறார்கள் என்பது அவரை ஈர்த்திருக்கிறது. 

உலகளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட நைலான் பொருட்களை இத்தாலி நிறுவனமான அக்வாஃபில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம், மறுசுழற்சி நைலானில் செய்யப்பட்ட உடைகளை சந்தையில் விற்கிறது. இதில் குப்பைகளாக எஞ்சுவதை மீன்பிடிக்கும் வலைகளாக மாற்றி விற்கிறது. அதற்கும் மேல் கழிவுகளாக மிஞ்சுவதை, உடைத்து இழைகளாக மாற்றுகிறது. இதைத்தான் இகோநைல் இழை என்கிறார்கள். 

 

இந்திய தலைநகரான டெல்லியில் ப்ளோனி என்ற நிறுவனம் இப்படி மறுசுழற்சி செய்த ஆடைகளை விற்கிறது. உலகில் ஃபேஷன் துறையில்தான் அதிகளவு நுகர்வு இருக்கிறது. இதில் வீணாகும் உடைகளை மறுசுழற்சி செய்தாலே இயற்கையைக் காக்க முடியும் என இதன் நிறுவனரான அக்ஷத் பன்சால் சொல்லுகிறார். ப்ளோனி நிறுவனம் வெளியில் இதுபோல மறுசுழற்சி செய்த நைலான் உடைகளை வாங்குவதோடு, இவர்களும் பருத்தியோடு நைலானை இணைந்து பல்வேறு பொருட்களை தயாரித்து வருகிறார்கள். 

சூழலைக் காப்பாற்றுவது முக்கியம். அதோடு இதுபோல செயற்கை இழைகளை அணிபவர்களின் உடல் என்னாகும் என்ற கேள்வியை நாம் யாருமே கேட்பதில்லை. இதற்கு என்ன பதில் கிடைக்கும் என்பது முக்கியமானது. எனவே, செயற்கை இழைகளை அணிபவர்கள் தயவு செய்து உடல் அதிகளவு வெப்பமடைவதை கவனியுங்கள். உடலுக்கு அது ஒத்துப்போனால் அணிவதைப் பற்றி எந்த பிரச்னையுமில்லை. 

சரண்யா சக்ரபாணி

டைம்ஸ் ஆப் இந்தியா

https://bloni.in/bloni-world/

https://www.econyl.com/





  


கருத்துகள்