அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

 




தியோடர் ஸ்க்வான்




தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882)


1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார். 

நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.   

லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறார். 1839ஆம் ஆண்டு நுண்ணோக்கி வழியாக விலங்கு, தாவரங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்த அமைப்பு பற்றிய ஆய்வு, தியோடரை புகழ்பெறச் செய்தது.

தகவல்

the biology book 

big ideas simply explained




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்