இடுகைகள்

சிவப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்துபோன விலங்குகளை பதப்படுத்தியது போல வைத்திருக்கும் நார்டன் ஏரி!

படம்
தி வாட் இஃப் ஷோ நாட்ரான் ஏரி கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி ( ). உலகிலுள்ள வினோதமான தன்மை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  ஏரியிலுள்ள நீர் வெப்பம் கொண்டதோடு, உப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த நீர்நிலையிலுள்ள சிறிய பாக்டீரியாவகை, உப்பை  உட்கொள்கிறது.  மோசமான சூழ்நிலை இருந்தாலும் கூட இங்கு இனப்பெருக்கம் செய்ய ஃபிளாமிங்கோ  (flamingo)பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. எவாசோ என்கிரோ (Ewaso ng'iro)ஆறு மூலம் ஏரி நீர்வளத்தைப் பெறுகிறது. நாட்ரான் ஏரி, 60 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்தது. இதன் ஆழம் 3 மீட்டர்தான். நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உள்ளது. நாட்ரான் ஏரியிலுள்ள நீர், கடலுக்கோ செல்வதில்லை. வெப்பநிலை காரணமாக ஆவியாகிறது. மிஞ்சுவது உப்பும், பிற கனிமங்களும்தான்.  ஏரியின் வெப்பத்திற்கு காரணம், அதன் கீழுள்ள ஆல் டோயினோ லெங்காய் (ol doinyo lengai)எரிமலைதான். இதன்  எரிமலைக் குழம்பு, ஏரி நீரை சூடாக்குகிறது. இதன் காரணமாக நீர், ஆவியாகிறது. ஏரி அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கா ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் புவித்தட்டுகள் சந்திக்கின்றன. இதன் விளைவாக, இங்கு 

எச்சரிக்கை பலகைகளில் சிவப்பு ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? எச்சரிக்கைப் பலகைகள் ஏன் சிவப்பு நிறத்திலேயே இருக்கின்றன? உயிரியல் அடிப்படையில் சிவப்பு என்பதை நெருப்பு, அபாயம் என நம் நினைவுகளில் பதிந்து வைத்திருக்கிறோம். எனவே சிவப்பு நிறம் என்றால் சடக்கென ஆதிநினைவான நெருப்பின் நிறத்திலிருந்து நிகழுக்கு மீண்டு வண்டி பிரேக்கை இழுத்துப்பிடித்து நிற்போம். அதேசமயம் சில நாடுகளில் நீலநிற விளக்கு போன்ற பரிசோதனைகளையும் செய்கிறார்கள். இயற்பியல் காரணத்தைப்  பார்த்தால், சிவப்பு பனியோ மழையோ அனைத்து கண்டிஷன்களிலும் பளிச்சென அனைவரையும் ரீச்சாகும். அதேநேரம் சீனாவில் மஞ்சள் பின்னணியில் கறுப்பு கோடுகள் பயன்படுகின்றன.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்