பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது!
வினோதரச மஞ்சரி பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது! சில வாரங்களாகவே தனியார் செல்போன் நிறுவனங்களின் தடாலடி விலையேற்றம் பற்றி செய்தி ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனங்களின் விலையேற்றத்தில் சிறுபான்மை ஒன்றிய அரசு தலையிட முடியாது என கைவிரித்தது. இது அகண்ட பாரதத்தில் புதிய காட்சியல்ல. நாட்டின் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான நண்பர்தான் விலையேற்றிய செல்போன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாங்கிய நிதிக்கான விசுவாசம் இருப்பதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர், அம்பானியின் செல்போன் நிறுவனத்திற்கு இலவசமாக டேட்டா கொடுக்கிறார்கள் என்று மாறிய பெருங்கூட்டம், இப்போது விலையேற்றத்தால் புலம்பி புகார்களை வாசித்தபடி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், மகிழ்ச்சியுடன் கூறிய தகவல்படி வாடிக்கையாளர் எண்ணிக்கை இருபத்தெட்டு லட்சம் என கொள்வோம். இத்தனை பேர்களுக்கு பிஎஸ்என்எல் என்ன வசதிகளை செய்துதரும்? இப்போது உள்ள பெரும்பகுதி செல்போன் டவர்களை, அம்பானி நிறுவனத்திற்கு கட்டாய வாடகைக்கு தரவ...