இடுகைகள்

நுண்ணுயிரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

படம்
  பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ.... காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா? இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும்.  பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா? நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை மேம்படுத்தினால் செ

பாறைகள் மண்துகள்களாக மாறும் செயல்பாடு! - ஆர்கானிக் வெதரிங்

படம்
  பாறைகளில் ஏற்படும் மாற்றம்! நடக்கும்போது, விளையாடும்போது காலில் ஒட்டியுள்ள மண்ணைப் பார்த்திருப்பீர்கள். இந்த மண் எப்படி உருவாகிறது என அறிவீர்களா? பாறைகள் மெல்ல உடைந்து துண்டுகளாகி, சிறு துகள்களாகி மண்ணாகிறது. இயற்கையாக நடைபெறும் இச்செயல்பாட்டிற்கு, வெதரிங் (weathering) என்று பெயர்.  பாறைகள் உடைந்து சிறு துண்டுகளாகி மண் துகள்களாக மாறுவதற்கு மரம், விலங்குகள், நுண்ணுயிரிகள், மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக உள்ளன. இதனை  சூழலியல் வல்லுநர்கள், பயாலஜிகல் வெதரிங் (Biological weathering)என்று குறிப்பிடுகின்றனர். ஷ்ரூஸ் (Shrews), மோல்ஸ் (Moles), மண்புழுக்கள், எறும்புகள்  ஆகியவை பாறையில் துளைகளையும், விரிசல்களையும் ஏற்படுத்துகின்றன. இவற்றில், பறவைகள் தம் எச்சம் மூலமாக  விதைகளை விதைக்கின்றன. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகும்போது பாறை மெல்ல உடைபடுகிறது.  சயனோபாக்டீரியா (Cyanobacteria),  பாறையில் வளரும் செடிவகை (Lichens), பாசி, பூஞ்சை ஆகியவையும் பாறைகளைத் துளையிடுகின்றன. இதற்கு, வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக பாறையிலிருந்து, தனக்குத் தேவையான கனிமங்களைப் பெறுகின்றன. பிட்டாக் ஷ

வினோதரச மஞ்சரி - சிவப்புநிற பனி, டைனோசர் தூக்கம்

படம்
  தெரியுமா? சிவப்புநிற பனி! துருவப்பகுதிகளில் உள்ள மலைகளில் சிவப்பு நிற பனியைப் பார்க்கலாம். இதற்கு வாட்டர்மெலன் ஸ்னோ (Watermelon snow) என்று பெயர். இந்த பனி உள்ள இடத்தில் பழவாசனையை உணரலாம். வாசனையை உணர்ந்து, ஆவலோடு உடனே பனியை எடுத்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்.  பனியின் சிவப்பு நிறத்திற்கு காரணம், அதிலுள்ள க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்ற பாசிதான். கோடைக்காலத்தில் பாசி தன்னை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிவப்பு நிறத்தை உற்பத்தி செய்கிறது. சிவப்புநிறத்திற்கு கரோட்டினாய்ட் வேதிப்பொருளே காரணம்.  க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் பாசி உருவாக்கும்  சிவப்பு நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டதல்ல. இதன் காரணமாக, வெப்பத்திலிருந்து பாசி தன்னைக்காத்துக் கொண்டாலும் அங்குள்ள பனி உருகுவதை தடுக்க முடிவதில்லை.  டைனோசர் தூக்கம் டைனோசர் எப்படி தூங்கியிருக்கும்? தரையில்  அல்லது உட்கார்ந்தபடியே தூங்குமா என யோசித்தால் வினோதமாக இருக்கிறது. இதற்கு உறுதியான பதில்களை சொல்லுவது கடினம்.  12 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் தொன்மையான பறவைகளுக்கு நெருங்கிய தொடர்புகொண்ட உயிரின படிமம

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை சிறியது! - ராபர்டோ கோல்டர், பேராசிரியர்

படம்
  ராபர்ட்டோ கோல்ட்டர் நுண்ணுயிரியல் துறை, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சியின் அடிப்படை எது? நான் பாக்டீரியா பற்றி 35 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதாவது நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு வரை. மூலக்கூறுகளை ஆராய்ந்து எப்படி பல்வேறு அழுத்தங்களுக்கு எதிர்வினைகளை அளிக்கிறது என ஆய்வு செய்தோம். பாக்டீரியா பாசிகளோடு புரியும் வினைகள் பற்றிய எனது ஆர்வம் அதிகரித்து வந்தது. பூமியின் சல்பர் சுழற்சி மற்றும் காலநிலை மாற்றம், மேகம் உருவாகும் விதம் ஆகியவற்றில் பாக்டீரியாவின் பங்களிப்பு அதிகம்.  பூமியின் செயல்பாட்டிற்கு நுண்ணுயிரிகள் முக்கியமெனில் அதனை எப்படி காப்பாற்றுவது? நுண்ணுயிரிகளை தனியாக காப்பாற்றுவது என்பது எளிதல்ல. அதனை தனியாக சூழலில் விட்டாலே போதும். அதுவே சுயமாக வளர்ந்துகொள்ளும். நுண்ணுயிரிகளின் மீதான மனிதர்களின் செயல்பாடு, தாக்கம் குறைந்தாலே அவை பூமியில் சிறப்பாக இயங்கும்.  காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா? ஆமாம். காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதை அறிவியல் ஆய்வுகள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளன. கடல் மற்றும் நிலப்பரப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம

பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்ய தயங்குகிறார்கள்! - ரேச்சல் இ கிராஸ்

படம்
  ரேச்சல் இ கிராஸ்  பத்திரிகையாளர் எழுத்தாளர் ரேச்சல், ஸ்மித்சோனியன் வலைத்தளத்தில் அறிவியல் பகுதி ஆசிரியராக பணியாற்றுகிறார். அண்மையில் இவருக்கு பிறப்பு உறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருக்கு தன்னுடைய உடலை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுபற்றி வஜினா அப்ஸ்குரா - அனாடாமிகல் வாயேஜ் என்ற நூலை எழுதியுள்ளார். பெண் உடல் பற்றிய பல்வேறு தவறான கருத்துகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.  இப்படி ஒரு நூலை எழுத உங்களைத் தூண்டியது எது? அறிவியல் வரலாறு தொடர்பான நான் பல்வேறு விஷயங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது. அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை பெண்கள் சில வரம்புகளுக்குள்தான் இருந்திருக்கின்றனர். அதற்குமேல் அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் பெண்களின் பிறப்புறுப்பு, கருப்பை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளும் எனக்குள் உருவானது. பெண்களின் செயல்பாட்டிற்கும் அவர்களின் உடல் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. இதுபற்றிய கேள்விகளை பெண்களிடம் கேட்கலாம். ஆனால் அவர்கள் அதுபோ

பதப்படுத்துதல் முறையைக் கண்டுபிடித்து 160 ஆண்டுகள்!

படம்
  லூயிஸ் பாஸ்டர் அமுல் தாஸா என்ற பால் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகிறது. 200 மி.லி. பதினைந்து ரூபாய்தான். இதனை காய்ச்சாமலேயே கடையில் வாங்கியவுடனே குடிக்கலாம். மொத்தம் 180 நாட்கள் கெடாது என கம்பெனியினர் சொல்லுகிறார்கள். எப்படி இந்த செயல்பாடு சாத்தியமானது.?  பதப்படுத்துதல்தான். அதன் முன்னேற்றம்தான் இந்த சாதனைக்கு காரணம். பாலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லவே அதனை கொதிக்க வைக்கிறார்கள். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாலை கொதிக்க வேண்டுமென யாருக்கும் தெரியாது.  பாலை 60 முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்தால் அதிலுள்ள நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையை கண்டுபிடித்தவர், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் லூயிஸ் பாஸ்டர். இவர், 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். ஈகோல் நார்மலே சுப்பீரியர் எனும் இடத்தில் படித்தார். படித்து முடித்து தொடக்க பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார்.  1856ஆம் ஆண்டு லூயிஸைப் பார்க்க, உள்ளூர் மனிதர் ஒருவர் வந்தார். அவர் தான் தயாரித்த பீட்ரூட் ஜூஸ்  கெட்டுப்போனதைப் பற்றி சொன்னார். அதனை ஆராய்ந்த லூயிஸ், அதில

கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!

படம்
  கடல் வைரஸ்கள்!  கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக  ஆய்வாளர் குழு கூறியுள்ளது.  நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.  அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.  இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.  தாரா ஓசேன் ப்ராஜெக்ட்ட