இடுகைகள்

தியான்மென் சதுக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவமானச்சின்னத்தை அகற்ற முயலும் சீன அரசு!

படம்
  அவமானத்தின் தூண்- ஹாங்காங் சீன கம்யூனிஸ்ட் கட்சி, வரலாற்று ரீதியான களங்கத்தை மறைக்கும் முயற்சியை எப்போதும் செய்துவந்திருக்கிறது. அண்மையில்  ஹாங்காங் பல்கலைக்கழகத்தில்  டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கல்சியோட் தியான்மென் சதுக்க படுகொலைகளை சுட்டும் சிற்பத்தை வடிவமைத்தார். இப்போது சீன அரசு அந்த சிற்பத்தை அகற்ற வலியுறுத்தி வருகிறது.  சீனாவில் அனுமதிக்கப்படாத தியான்மென் அடையாளம், ஹாங்காங்கில் மட்டுமே உள்ளது. சீனாவில் இருக்கும் ஜனநாயகத்தை முடக்கும் பிரச்னைகள் ஹாங்காங்கில் எதிரொலிக்க, அங்கு போராட்டங்கள் தொடங்கின. இப்போராட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள்.  தியான்மென் சதுக்கத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அரசு ராணுவம் கொண்டு அடக்கியது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கின. இதனை நினைவுறுத்தவே சிற்பி அவமானத்தின் சின்னம் என்ற பெயரில் சிற்பத்தை உருவாக்கியிருக்கிறார்.  தியான்மென் சதுக்கத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் காயம்பட்டனர். இதில் போராட்டக்கார ர்கள், காவல்துறையினரும் உள்ளடங்குவார்கள்.  36 மாணவர்கள் கொல்லப்பட்டனர். பத்து ராணுவ வீர ர

சீனா மற்றுமொரு வடகொரியா நாடு போலத்தான் மாறும்!

படம்
தியான்மென் சதுக்கம் சூ யூயு அரசியல் அறிவியல் படித்த மாணவர். இவர், சீனாவில் கலாசார மாறுதல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 1989 ஆம் ஆண்டு தியான்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டம் குறித்து எழுதியிருப்பதோடு, அங்கு கலந்துகொண்டும் இருக்கிறார். சார்ட்டர் 08 எனும் சட்ட தீர்திருத்த தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். மே 2014 ஆம் ஆண்டு செமினார் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரிடம் பேசினோம். தியான்மென் சதுக்க படுகொலைகளுக்கு இன்றோடு 30 ஆவது ஆண்டு. இதுபற்றி உங்கள் கருத்து. எனக்கு சோகமாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இங்கிருந்து வெளியேறியவர்கள் திரும்ப தாய்நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது. தியான்மென் சதுக்க கொலைகளுக்கு எதிரான ஜனநாயகப் பேரணி  இயக்கத்தில் நீங்கள் பங்கெடுத்துள்ளீர்களா? ஆகஸ்ட் 15 -20 என்று நினைக்கிறேன். தேதி சரியான நினைவில்லை. அன்று படுகொலைகளுக்கு எதிரான அனைத்து கூட்டங்களிலும் நான் பங்கேற்றுள்ளேன். அரசு எங்களுடைய போராட்டங்களுக்கு செவி கொடுத்து நீதி கிடைக்கச்செய்யும் என

சீனாவில் சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகாரம் நிலவுகிறது

படம்
தியான்மென் சதுக்க படுகொலைகளை சீன அரசு பாடுபட்டு மறைக்க முயன்றும் அதனை பலர் இணையத்தில் அதைவிட தீவிரமாக வேலைபார்த்து வெளியிட்டு வருகின்றனர். 1989 ஆம் ஆண்டு சீன அரசு, ஒடுக்குமுறையை செய்தபோது சூ ஃபெங்சுவோ மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். தற்போது அமெரிக்காவில் வசிப்பவர் அன்றைய சூழ்நிலை குறித்து பேசுகிறார். ஜூலை 4 தேதி நடந்த நிகழ்ச்சிக்கான அரசின் பொறுப்பு ஏற்பு என்பதற்கே பெரும் கஷ்டப்படவேண்டி உள்ளது. சம்பவம் குறித்து உங்களது கருத்தைச் சொல்லுங்கள்.  சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் முழு பொறுப்பு. அதை நாம் முதலில் ஏற்பது அவசியம். நேரடியான தொடர்பு என்றால் முன்னாள் சீனத் தலைவர்களான டெங் ஜியாபிங் மற்றும் லீ பெங் ஆகியோரைச் சொல்லலாம். ஜனநாயக வழியில் இதற்கான பொறுப்பேற்று அரசு செயல்பட்டு மேற்சொன்ன இரு குடும்பங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவர்களின் தலைமுறைகளின் சொத்துக்களும் இதில் அடங்கும். பொறுப்பு என்பது நீதியோடு தொடர்புடையது. மேலும் இதன் தடத்தைப் பின்பற்றினால் உண்மையை நாம் சென்று அடையலாம். மக்களை ஏன் அவர்கள் கொன்றார்கள்? எப்படி அந்த முடிவை எடுத்தார்கள் என்ற கேள்விகளை நாம் ந