நோயில்லாத ஒருவருக்கு செய்யப்படும் மருந்து சோதனை!
மருந்து = நஞ்சு
ஓமியோபதி மருத்துவமுறை
ஓமியோபதி மருத்துவமுறையை உருவாக்கிய சாமுவேல், பல்வேறு மருந்துகளை தன்னுடைய உடலில் செலுத்தி அதன் அறிகுறிகளை குறித்து வைத்துக்கொண்டே பல்வேறு நூல்களை எழுதினார். இந்த மருத்துவமுறையில் உள்ள அனைத்து மருந்துகளுமே நோயில்லாத ஒருவரின் உடலில் செலுத்தி, அதன் அறிகுறிகளை பார்த்து, கேட்டு எழுதிய பிறகே நோயுள்ளவருக்கு வழங்கப்படுகிறது. இப்படியான சோதனைகள் நடைபெறாமல் மருந்துகளை நேரடியாக நோயாளிக்கு பரிந்துரைக்க கூடாது.
மருத்துவர் சாமுவேல் கூடுதலாக ஒரு நிபந்தனையையும் கூறுகிறார். அதாவது, ஓமியோபதி மருத்துவர் தனக்கு தேவையான மருந்துகளை தானே தயாரித்துக்கொள்ளவேண்டும் என்கிறார். நவீன காலத்தில் அவரின் அறிவுரை எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. மருத்துவர், நோயாளிக்கான மருந்தை தானே தயாரிக்கவேண்டும். அதன் தரம், தூய்மை, வீரியம் பற்றிய கவலைகள் காரணமாக இருக்கலாம்.
ஒவ்வாமைக்கு எனக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அனைத்துமே உள்மருந்துகள்தான். வெளியே பூச ஏதுமில்லை. எனக்கு தொடக்கத்தில் குழப்பமாக இருந்தது. மருத்துவர் அதைப்பற்றி தெளிவாக எதையும் கூறவில்லை. நானும் மருந்துகளை ஏதாவது கொடுங்கள் என்றேன். ஆனால், அப்படி பூசுவதற்கு தைலம் போன்ற மருந்து ஏதும் ஓமியோபதியில் இல்லை என்று சாதித்தார். அவர் கூறாத உண்மை என்னவென்றால், தோலில் மருந்தை பூசி குணப்படுத்திவிட்டால், நோய் தீர்ந்ததா இல்லையா என்று எப்படி தெரியும். சித்தம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருந்துகள் குறிப்பிட்ட கொள்கையைக் கொண்டுள்ளன. நான் சித்த மருத்துவ கொள்கையை கொண்டு வந்து ஓமியோபதிக்கு பொருத்திப் பார்த்தேன். அதனால்தான் குழப்பம் விளைந்தது.
நோயாளிக்கு மருந்துகள் பற்றி எப்படி சாப்பிடவேண்டும், எதை செய்யலாம், செய்யக்கூடாது என தெளிவாக கூறுவது முக்கியம். அரசு மருத்துவராக எனக்கு கிடைத்தவர், அந்தளவு பேசுவதற்கு நேரமில்லாதவர். அவருக்கு பல்வேறு நோயாளிகளுக்கு போன் வழியாக ஆலோசனை சொல்வதற்கே நேரம் சரியாக இருந்தது. ஓமியோபதி மருந்து எடுத்துக்கொண்ட காலம் தொடங்கி, சில ஆங்கில நூல்களை படித்தும், இணையத்தில் படித்தும் அதன் அடிப்படையை அறிந்துகொண்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக