வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

 



 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

வெடிமருந்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

ஐரோப்பாவில் ரோஜர் பாகோன் என்பவர் வெடிமருந்துக்காக சூத்திரத்தை எழுதினார். ஜெர்மனைச் சேர்ந்த துறவி பெர்த்தோல்ட் ஸ்வார்ட்ஸ் என்பவர், வெடிமருந்தை உருவாக்கினார். போரில்லாத காலங்களில் வெடிமருந்தை சுரங்கம் கட்டுமான பொறியியலுக்கும் பயன்படுத்தினர். பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர், கரி ஆகியவை வெடிமருந்தை தயாரிக்க உதவுகின்றன. இந்த சூத்திரத்தில் வெடிமருந்தை சீனர்கள் தயாரித்தனர். வெடிமருந்தை மூங்கிலில் நிரப்பி, மூங்கில் தோட்டா என்ற பெயரில் போரில் பயன்படுத்தி புத்திசாலிகள் சீனர்கள்.

டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?

ஆய்வாளர் ஆல்பிரட் நோபல். இவரது பெயரில்தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நைட்ரோ கிளிசரினை இத்தாலி நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் அஸ்கனியோ சோபிரிரோ கண்டுபிடித்தார். ஆனால், இதை பராமரிப்பது கடினமாக இருந்தது. நைட்ரோகிளிசரினை போரசுடன் சேர்த்தால், அதை கட்டுப்படுத்தலாம் என ஆல்பிரட் நோபல் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் கட்டுப்படுத்தும் இயல்பு கொண்ட டைனமைட்டை தயாரித்தார். டைனமைட் காரணமாக ஏராளமான மக்கள் இறந்துபோனதை குற்றவுணர்வுடன் கவனித்தார். பிறகுதான், தான் சேர்ந்த சொத்துகள் வழியே நோபல் பரிசை வழங்கத் தொடங்கினார்.

டிஎன்டி யின் இயல்பு என்ன?

ட்ரைநைட்ரோடோலுன் என்பதே டிஎன்டியின் உண்மையான பெயர். ஒருமுறை வெடிக்கத் தொடங்கினால், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். 1863ஆம் ஆண்டு ஜோசப் வில்பிராண்ட் என்பவர் டிஎன்டியை கண்டுபிடித்தார். டோலுன், நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து டிஎன்டி உருவாக்கினார். இம்முறையில் டிஎன்டியை கையாள்வது எளிதாக இருந்தது.

உலோகங்களை மைக்ரோவேவ் ஓவனில் பயன்படுத்துவதை தவிர்ப்பது ஏன்?

உலோகங்களை பயன்படுத்தினால், அது மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தும் சிற்றலைகளை தடுத்து பிரதிபலிக்கிறது. இதனால் உணவு எளிதில் சூடுபடுத்த முடியாது. மேலும் அடுப்பும் விரைவில் பழுதாகிவிடும்.

மனிதர்கள் உருவாக்கிய செயற்கை இழைகளை கூற முடியுமா?

அசிடேட், அக்ரைலிக், மெட்டாலிக், மோடகிரைலிக், நைலான், ரேயான், சரன், ஸ்பான்டெக்ஸ், டிரைஅசிடேட், வினைல் ஆகிய இழைகளை குறிப்பிடலாம்.

கெவ்லர் என்றால் என்ன?
இது ஒரு செயற்கை இழை. மெலிதாக ஆனால் வலிமையாக இருக்கும். இதை குண்டு துளைக்காத உடைகளில் பயன்படுத்துகிறார்கள்.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றை படிம எரிபொருட்கள் என கூறுவதேன்?
மேற்சொன்ன அனைத்து பொருட்களும் பூமியில் புதையுண்டு கிடந்தவை ஏறத்தாழ 500 மில்லியன் ஆண்டுகள், பூமிக்குள் புதைந்து அழுத்தப்பட்டு உருவானவை. எனவே, அவற்றை படிம எரிபொருட்கள் என்கிறோம். தாவரங்கள், மரங்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரியாக மாறுகிறது. கரிம எரிபொருட்களான இவை அனைத்துமே தீர்ந்துவிடக்கூடியவை. அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும். இவற்றால் ஏற்படும் சூழல் மாசுபாடுகளும் அதிகம். அவற்றை சரிபடுத்த முடியாது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, சீனா ஆகியவை அதிகளவு கரிம எரிபொருட்களை நம்பியுள்ளன.

நிலக்கரியை அதிகம் கொண்டுள்ள நாடுகள் எவை?

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலக்கரி வளத்தை அதிகம் கொண்டுள்ளன.

சோலார் பேனல்களை அமெரிக்க அதிபர் மாளிகை பயன்படுத்தியதா?
அதிபர் ஜிம்மி கார்டர் காலத்தில் சோலார் பேனல்களை, மாளிகையின் கூரையில் பதித்தனர். பிறகு, ரொனால்ட் ரீகன் காலத்தில் அவை அகற்றப்பட்டுவிட்டது.

காற்று மூலம் மின்னாற்றல் பெறும் நாடுகள் ஏதேனும் உள்ளதா?

டென்மார்க் நாடு, காற்று மூலம் மின்னாற்றலை பெறுவதில் முந்துகிறது. இதற்கடுத்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் பட்டியலில் இடம்பெறுகின்றன.

அணு உலைகளின் செயல்பாட்டு காலம் எவ்வளவு?

தோராயமாக நாற்பது ஆண்டுகள்.







 

 

 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்