நீண்டகால நோய்களுக்கு தீர்வு!
மருந்து = நஞ்சு
ஓமியோபதி மருத்துவமுறை
ஓமியோபதியின் மருந்து வீரியமுறை சற்று சிக்கலானது. இதில் இடம்பெறும் மூலிகைகள் அனைத்தும் பச்சையாக இருக்கும்போது அரைத்து சாறு எடுக்கப்பட்டு அதை சர்க்கரை அல்லது சாராயத்தில் கலக்கிறார்கள். ஓமியோபதி மருந்துகள் பலவும் சர்க்கரை அல்லது சாராயத்தில் கரைக்கப்பட்டவையாகவே இருக்கும். சில மருந்துகளை கொடுக்கும்போது சாராயத்தில் நனைத்துக் கொடுப்பார்கள். மருந்தை வீரியமாக்கவே இந்த முயற்சி.
சர்க்கரை, சாராயம் என இரண்டுமே மருந்துகள் வீரியமிழப்பதை கட்டுப்படுத்துகின்றன. பெரும்பாலான மூலிகைகள் பச்சையாக இருக்கும்போது சாறு எடுக்கப்படுவதற்கு, காரணம் அதில்தான் சாரம் இருக்கும். வலிமை இருக்கும் என்பதே. காய்ந்த மூலிகையில் வலிமை கிடையாது. அது பொடியாக இருந்தாலும் அல்லது வேறு வகையாக இருந்தாலும் சரி.
மருந்துகளை நீர்த்துப்போன வடிவமாக்கி தாய் திராவகம் தயாரிக்கிறார்கள். சாராயத்தில் உள்ள மூலிகைச் சாறின் அளவு நீர்த்துப்போன அளவு கூடும்போது குறையும். 0 எனும்போது உள்ள மூலிகைச்சாறு மூலக்கூறு அளவு, 30சி, 200சி எனும்போது இருக்காது. இப்படி இருக்கும்போது கொடுக்கப்படும் மருந்து நோயைத் தீர்க்குமா என ஓமியோபதி எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஓமியோபதி மருந்துகள் உடல் வெப்பத்தில் கூட பாதிக்கப்படக்கூடியவை. எனவே, அதை பாதுகாப்பாக வாங்கி வந்து வைத்து பயன்படுத்த வேண்டும். மரப்பெட்டி, கண்ணாடி, காகித பாக்கெட் ஆகியவற்றில் மருந்துகளை வைத்து பயன்படுத்தலாம். கிருமிகள் கோட்பாடுபடி, மருந்துகளை நீர்த்துப்போன வடிவமாக்கி பயன்படுத்துவதால் உடலுக்கு கேடு ஏதும் நடைபெறுவதில்லை. ஓமியோபதி மூலம் நோய்கள் தீர்ந்தாலும் அறிவியல் சமூகம், இம்மருத்துவ முறையை நோயை தீர்ப்பதை சந்தேகமாகவே பார்க்கிறது. உடலிலுள்ள உயிர்சக்தி, நோயை எதிர்த்து போராடும்படி ஓமியோபதி மருந்துகள் தூண்டுகின்றன. இதன் விளைவாக நோய் தீர்க்கப்படுகிறது.
நீண்டகால நோய்களுக்கு சோரா, சைகோசிஸ், சிப்ளிஸ் ஆகியவையே முக்கிய காரணம். இவற்றுக்கு ஓமியோபதியில் மருந்துகள் உண்டு. சோரா என்பது, தோலில் வரும் அரிப்பு தொடர்பானது. சொரியாசிஸ் நோய் கூட இந்த வகையைச் சேர்ந்தது. ஆனால், எதனால் இந்த நோய் ஏற்படுகிறது என்பதை அறிய முடியவில்லை. உளவியல் ரீதியாக காரணங்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள். சோரா, ரத்த அணுக்கள், கல்லீரல், தோலை தாக்குகிறது. நோய்களை உருவாக்குகிறது. சைகோசிஸ், உடலிலுள்ள மென்மையான திசுக்களை தாக்கி நோய்களை ஏற்படுத்துகிறது. சைபிளிஸ் மென்மையான திசுக்கள் எலும்புகளை தாக்கி நோய்களை விளைவிக்கிறது.
ஓமியோபதி மருந்துகளை உண்ணும்போது புகையிலையைப் பயன்படுத்துவது, தேநீர், காபி அருந்துவது நோய் குணமாவதை தாமதப்படுத்தும் அல்லது முற்றாக நிறுத்தும்.
கருத்துகள்
கருத்துரையிடுக