இடுகைகள்

பற்றாக்குறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.  சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது.  பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர்.  சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள

மலமள்ளும் தொழிலாளர்களை அதிகரித்த ஸ்வட்ச் பாரத் அபியான்!

படம்
sanrangindia பாதாளச் சாக்கடைகளை மனிதர்கள் சுத்தம் செய்வது இந்தியாவில் இன்னும் முக்கியப் பிரச்னையாகவே இருக்கிறது. இத்தொழிலை செய்பவர்கள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அரசும் கண்டுகொள்வதில்லை. இதற்கான இயந்திரங்களை பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் கண்டுபிடித்தாலும் அதனை வாங்குவதற்கு அரசு முன்வருவதில்லை. 1993இல் சாக்கடைகளை மனிதர்கள் வைத்து சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். ஆனால் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவெங்கும் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 119 பேர் இறந்துள்ளனர். ஆனால் இச்சட்டம் இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2013ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் மனிதக்கழிவுகளை அகற்றுவது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்

பட்ஜெட் 2020 - மக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

படம்
பட்ஜெட்டை இரண்டு மணிநேரம் வாசித்து சாதனை செய்திருக்கிறார் நிதி அமைச்சர். புதிய அறிவிப்புகள் பெரும்பாலும் பற்றாக்குறையை சரிசெய்வதற்கான அம்சங்களாகவே இருக்கின்றன. இந்த பட்ஜெட்டில் சில விஷயங்கள் விலை குறையும். சில விலை ஏறும். அவை பற்றி பார்ப்போம். மதிப்பிற்குரிய பெற்றோர்களே, குழந்தைகளுக்கு இறக்கமதி டின் உணவுகள், பொம்மைகள் வாங்கிக் கொடுத்துத்தான் வளர்ப்போம் என நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் நெஸ்லே நான் புரோ உணவு ரூ.1,200 லிருந்து ரூ.1,340 ஆக விலை உயர்கிறது. பார்பி பொம்மையுஉம் கூட 800 ரூபாய் விலை கூடுகிறது. உடல் ஆரோக்கியத்தை உயிராக கருதுகிறீர்களா? அப்படி உடலைப் பராமரிக்க நீங்கள் சாப்பிடும் பருப்பு வகைகளும், ஷூ, செருப்புகளும் விலை ஏறுகின்றன. கலிஃபோர்னியா வால்நட் பருப்புகள் 850 லிருந்து 1280 ரூபாயாக விலை எகிறுகிறது. நைக் ஷூக்கள் 8,999 ரூபாயிலிருந்து 9,749 ரூபாயாக விலை உயர்கிறது. உள்நாட்டு வரி பர்னிச்சர் பொருட்களுக்கு கூடுகிறது. இதனால் சோபா, மெத்தை, எல்இடி விளக்குகளுக்கு நீங்கள் காசு அதிகம் செலவழித்தால்தான் உங்கள் வீட்டுக்கு வரும். நீங்கள் ஐகியா இறக்குமதி படுக்கை ஒன்றை வாங்க 5

ஊட்டச்சத்து பற்றிய கவனத்தை இந்திய அரசு கைவிட்டுவிட்டது! - சுமன்த்ரா ரே!

படம்
வலதுபுறம் சுமன்த்ரா ரே இந்தியாவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. அதேசமயம் சில மாநிலங்கள் மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர். அதில் தமிழ்நாடும் ஒன்று. போஷன் அபியான் எனும் ஊட்டச்சத்து திட்டத்தை நிறைவேற்றி அண்மையில் மத்திய அமைச்சரிடம் பரிசும் பெற்றாயிற்று. இதன் பொருள், இந்தியா இத்திட்டத்தில் வெற்றிபெற்றது என்பதல்ல. இதுபற்றி இங்கிலாந்திலுள்ள சுமன்த்ரா ரேயிடம் பேசினோம். இவர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையம் எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் மூன்றில் ஒருபங்கு குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு என்ன? ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பது தனிப்பிரச்னையல்ல. நிறைய பிரச்னைகள் இதில் ஒன்றாக இழைகளாகப் பின்னிப்பிணைந்துள்ளன. பொதுவாக ஊட்டச்சத்துப் பற்றாக்குறை என்பதை புரதப்போதாமை என குறிப்பிடலாம். பல்வேறு வைட்டமின்கள் பற்றாக்குறை எனலாம். இதற்கு குழந்தைகள் பிறக்கும் குடும்பத்தின் வறுமையும் முக்கியக்காரணம். அங்கு சாப்பிட ஏதுமே கிடைப்பதில்லை. எனவேதான் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஒற்றைப் பிரச