இடுகைகள்

வியட்நாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வியட்நாம் சிறுமியின் பழிதீர்க்கும் வெறி! - தி புரோடேஜ் 2021

படம்
  முதல் காட்சி வியட்நாம் நாட்டில் விரிகிறது. மழை பெய்துகொண்டிருக்க, அதில் தலைக்கு சிறு முக்கோண தொப்பி அணிந்துகொண்டு மக்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ஒரு வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அங்குள்ளவர்கள் அனைவருமே இறந்துகிடக்கிறார்கள். அனைவருமே ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடமுள்ள பணத்தை அந்த நபர் எடுத்துக்கொள்கிறார். அப்போது, அவருக்கு ஏதோ சத்தம் கேட்க கைத்துப்பாக்கியை எடுத்து அதை சோதிக்கிறார். பீரோவில் சிறுமி ஒருத்தி தானியங்கி துப்பாக்கி ஒன்றுடன் இருக்கிறாள். அவளை அந்த நபர் அதாவது சாமுவேல் எல் ஜாக்சன் கொல்லவில்லை. அவளது பயம் போக்கி அவளை க் கூட்டிக்கொண்டு செல்கிறார். சாமுவேல் அவரே சொல்லிக்கொள்வது போல நல்லவர் கிடையாது. கூலிக்கொலையாளி.  தனக்குத் தெரிந்த வித்தையை வியட்நாம் சிறுமிக்கு, அதாவது அன்னாவுக்கு சொல்லித்தருகிறார். அவள் அவரே பிரமிக்கும்படி சூட்டிகையாக ஆபத்தானவளாக வளர்கிறாள். அவளுக்கு வளர்ப்பு அப்பா என மூடியை மட்டுமே நினைக்கிறாள். அன்னாவுக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, புத்தக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறாள். இந்

எலிகள் பற்றி நமக்கு என்ன தெரியும்?

படம்
தெரிஞ்சுக்கோ - எலிகள் எலிகள் என்றால் டிஸ்னியின் எலிகள் நினைவுக்கு வருகிறதா? அல்லது அறுவடை காலத்தில் நெற்கதிர்களை திருடி வைத்து பஞ்சத்தை உருவாக்குகிறது. பிளேக் போன்ற நோய்களை உருவாக்குகிறது. நாய்களைப் போலவே நம் காலுக்கடியில் குறுக்கும் மறுக்குமாக ஓடினாலும் எலிகளைப் பற்றி நாம் அறிந்தது மிக குறைவுதான். கஷ்டமோ நஷ்டமோ அத்தனை பிரச்னைகளையும் கடந்து குட்டி போட்டு ரேஷன் கார்டு வாங்காமல் அடுத்தவன் சோற்றில் கைவைத்து பிழைத்து வாழும் எலியை மக்கள் மறக்கவே முடியாது. ஜெனஸ் ராட்டுஸ் இனத்தில் பழுப்பு நிற எலிகள் உட்பட 51 இனங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றும் உடலில் செயலில் மாறுபட்டவை. பழுப்பு நிற எலியின் எடை 0.8 கி.கி என பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பௌண்டு எடை கொண்ட எலியை யாராவது பார்த்து பதிவு செய்தால் 500 டாலர்களை தான் பரிசளிப்பதாக ஆராய்ச்சியாளர் ராபர்ட் காரிகன் கூறியுள்ளார். சாதாரண எலி 2.5 செ.மீ. அளவுள்ள துளையை எலிகள் உருவாக்குகின்றன. எலிகள் பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் ஒரு மணிநேரத்திற்கு ஒன்று என்று என உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன. ஆப்பிரிக்க வயல்களில் எலிகள் ஏறத்தாழ 15 சதவ

எலிப் படுகொலை! - பிரெஞ்சு காலனி தேச காமெடி!

படம்
வியட்நாம் தலைநகரான ஹனோய் அப்போது பிரெஞ்சு வசம் இருந்தது. பொதுவாக காலனி ஆதிக்க சக்திகளுக்கு, மக்களின் வரிப்பணத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடிப் பார்க்க எப்போதுமே ஆசை உண்டு. ஓஷோ சொன்ன கோழியின் சிறகுகளைப் பிடுங்கிப்போட்ட கதை உதாரணம். இங்கும் அப்படி ஒரு ஆட்சியாளர் என்ன செய்தார், தெரியுமா? நகரமயமாக்கலுக்கு ஆசைப்பட்டார். ஆனால் செயல்படுத்தியதில் சின்ன சிக்கல் ஏற்பட்டுவிட்டது. விளைவு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். பால் டூமோர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். அவரை வியட்நாமின் ஹனோய் நகருக்கு நிர்வாக அதிகாரியாக நியமித்தனர். நாகரிக நகருக்கு முதல்படி என்ன கழிவறையும் சாக்கடையும்தானே! ஆம் உடனே ஆட்களைத் திரட்டி பதினான்கு கி.மீ. நீளத்திற்கு சாக்கடை ஒன்றை பிரமாதமாகக் கட்டினார். நகரை பிரமாதமான உயரத்திற்கு உயர்த்திவிட்டதாக நினைத்தார் பால் டூமோர். அவருக்கு மான்ஸ்டர் வில்லனாக வந்தது, வேறு யாருமில்லை எலிகள்தான். சிறப்பான வாழிடமாக சாக்கடைக் குழாய்களைத் தேர்ந்தெடுத்தன. ஒரு கட்டத்தில் உணவுப்பிரச்னை எழ, அதுதான் மாம்ஸ் இருக்கிறார்களென நேரடியாக மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்தன. உணவுக