இடுகைகள்

கந்தர்வன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கந்தர்வனை பல ஜென்மங்களாக துரத்தி பலிகொள்ளத் துடிக்கும் யட்சிணி! - குபேரவனக்காவல் - காலச்சக்கரம் நரசிம்மா

படம்
                குபேர வனக்காவல் காலச்சக்கரம் நரசிம்மா அமுதன் என்ற சிறுவனை அவனது தாய்மாமா குடும்பத்தினர் கிண்டல்செய்வது முதல் நாவல் தொடங்குகிறது . தந்தையும் , தாயும் காணாமல் போன சூழலில் அவன் தன் தாய்மாமா குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறான் . ஆனால் அவனது அத்தை , அவரது அம்மா என அனைவரும் அவனது நிறம் , அவனது காணாமல் போன அம்மாவின் நடத்தை ஆகியவற்றை மனதை வருத்தும்படி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் . அதனை நம்பாடுவான் என்ற சிவ பக்தர் மட்டும் கோபத்தோடு பார்க்கிறார் . அமுதன் யார் , அவனது அப்பா , அம்மா யார் என்ற ரகசியங்களை நம்பாடுவான் என்ற கிழவர் அவனுக்கு சொல்லுகிறார் . அதிர்ச்சியளிக்கும் அந்த சம்பவங்களின் முன்னொட்டாக புருஷாமிருகம் என்ற கதை நாவல் தொடங்கும் முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது . அதை படித்து விட்டு நாவலுக்குள் வந்தால் எல்லாம் சுலபமாக புரியும் . அமானுஷ்யம் கலந்த திகில் கதைதான் . புருஷோத்தமன் என்ற குழந்தை ஶ்ரீவாத்சாங்கம் என்ற வைணவரின் வீட்டு பெண்ணுக்கு மகனாக பிறக்கிறது . அந்த குழந்தையின் எதிர்காலம் என்னவென்று சகடவாக்கி ஒருவர் நாடிச்சக்கரங்களை தொட்டு சொல்கிறார் . அது ப