இடுகைகள்

அன்பரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீரெல்லாம் கங்கை - கடிதங்கள்- அன்பரசு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  இந்த வலைத்தளத்தில் வெளியான பல்வேறு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டுள்ள தொகுப்பு. இப்போது மின்னூலாக அமேசானில் வெளியாகியுள்ளது. உங்களுக்கு அமேசானில் கணக்கு இருந்தால், நூலை எளிதாக விலையின்றி வாசிக்க முடியும்.  நூலை வாசிக்க கிளிக் செய்யுங்க.... https://www.amazon.in/dp/B09QZR2NRT புகைப்படம் - வினோத் பாலுச்சாமி -Yaa studio அட்டை வடிவமைப்பு -WWW.Canva.com

குழந்தையின் கையில் வானவில்! - த.சீனிவாசன் - அன்பரசு கடிதங்கள்

படம்
  இதனை நூல் என்று முழுமையாக சொல்ல முடியாது. அன்பரசு, அவரது நண்பரான அல்லது அப்படி நினைத்துக்கொண்ட திரு. த.சீனிவாசன் அவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. இக்கோப்பை இன்டர்நெட் ஆர்ச்சீவ் வலைத்தளம் மூலம் அணுகி வாசிக்கலாம். இதனை தரவிறக்கம் செய்யக்கூட அவசியம் இல்லை என்பது வாசகர்களுக்கு சாதகமான அம்சம். கடிதங்களை ஸ்கேன் செய்து ஆவணப்படுத்தியவர் த.சீனிவாசன் என்பதை மறக்க முடியாது. இதனை அவர் ஆவணப்படுத்தியதால்தான் இப்போது வலைதளத்தில் சுலபமாக பதிவிட முடிகிறது. அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பேரிறையின் அருள் உரித்தாகுக!  இதை கிளிக் செய்து வலைத்தளத்திற்கு செல்லலாம்... https://archive.org/details/kuzhathaiyin-kaiyil-vanvil-letters இந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தும் நூலை வாசிக்கலாம்.. நன்றி https://www.qrcode-monkey.com/ www.canva.com

விலை பேசப்பட்ட கடவுள்- கட்டுரைகள்(அறிவியல், சமூகம், பொருளாதாரம், இயற்கை, தொழில்நுட்பம்) - மின்னூல் வெளியீடு

படம்
     இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி சார்ந்த பல்வேறு விஷயங்களை பேசுகின்றன. முடிந்தளவு ஆய்வுநோக்கில் எழுதப்பட்டுள்ளன. உலகளவில் பிரபலமான பல்வேறு ஊடகங்களில் வெளியான கட்டுரைகளை ஆதாரமாக கொண்டவை. ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்திகளை முதன்மைப்படுத்தும் நோக்கத்தை கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை வாசிக்கும் யாரொருவரும் உணர முடியும். எழுதப்பட்டும் கட்டுரைகளை எப்படி இருக்கவேண்டுமென பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இதன் காரணமாகவே கட்டுரைகளின் நோக்கம் பிடிபட்டது. அதற்கேற்ப நிறைய மாற்றங்களை செய்ய முடிந்தது. இதனை வெளியிட்டு உதவிய தினமலர்  நிறுவனத்திற்கும் நன்றிகள் கோடி.  நூலை வாசிக்கவும், வாங்கவும்..... https://www.amazon.in/dp/B095KTXV9X

சந்திப்போமா - அன்பரசு - சபாபதி கடிதங்கள்

படம்
3 அன்புத்தோழர் சபாபதிக்கு , வணக்கம் . கடிதம் எழுத தாமதம் ஆகிவிட்டது . அலுவலகம் , ஹாஸ்டல் என அலைந்து திரிகிறேன் . இந்த அவதிதான் பிரச்னை . தனி அறைக்கு வந்து சில பொருட்களை வாங்கி தனி ஆவர்த்தனம் செய்ய ரெடி ஆகிவிட்டேன் . வேறுவழி ஏதும் இல்லை . படிக்கின்ற மாணவர்களோடு சேர்ந்து இருப்பது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பெரும் அழுத்தமாக இருக்கிறது . இரவு முழுவதும் விளக்கு எரியவில்லையென்றால் , என் அருகிலுள்ள படுக்கைக்காரர் பதற்றமடைந்து விடுகிறார் . எப்படி இங்கே தங்கியிருப்பது என நினைத்தேன் . எப்படியோ நான் முதலில் வேலை செய்த பத்திரிகையில் இருந்த நண்பர் எனக்கு அறையைப் பிடித்து தந்துவிட்டார் . சிறிது நிம்மதியாக இருக்கிறது . கவச்சம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன் . வெகுளியான நாயகன் , பேராசை பிடித்த நாயகி என்ற ஒன்லைனில் கதை பயணிக்கிறது . டான்சையை எட்டி உதைப்பது ஆடி பீதியைக் கிளப்பியவர்தான் இந்தப் படத்தின் நாயகன் சாய் சீனிவாஸ் . அவரின் ரியாக்ஷன்களைப் பார்க்க சகிக்கவில்லை . சொத்துக்காக நடைபெறும் சதியும் , துரோகமும்தான் படத்தின் கதை . சில ட்விஸ்டுகள் நன்றாக இருக்கின்றன . ஆனால் அவை

மனமறிய ஆவல் - மின்நூலைத் தரவிறக்கும் முகவரி!

படம்
மனமறிய ஆவல் - கடிதங்களின் தொகுப்பை நீங்கள் கீழேயுள்ள மீடியாஃபயர் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கிப் படிக்கலாம். நன்றி. http://www.mediafire.com/file/xsnh69yhbmlq4ml/%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25AE%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AF_%25E0%25AE%2586%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2521.pdf/file

மனித உணர்ச்சிகள் ஒன்றுதானா? - கடிதங்கள்!

படம்
Wasafiri தாராபுரம் அருகே சந்தித்த ஜோதிட நண்பர், நிறைய நாவல்களை வாசிக்கிறவர். அவரிடம் நான் மண்ட்டோ பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அசுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர், என்ன மண்ட்டோ எழுத்து, மும்பைக்காரன் அழுதான்னா எனக்கு அழுகை வராது. அவன் வேற ஊர்ல இருக்கான். நான் வேற ஊர்ல இருக்கேன். எனக்கு அவனோட கலாசாரம் புரியாது. அவன் அழுதா நான் எதுக்கு அழணும். என்று பேசினார். எனக்கு இந்த வாதம் புதிதாக இருந்தது. கொல்கத்தா என்ற நகரில் இருப்பவனும் நம்மைப்போன்றவன்தான். அப்புறம் இதில் அவன் வேற ஆள் என்று சொல்வது வித்தியாசமாக இல்லையா? எனக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே சிறிதுநேரம் சமாளிப்பாக பேசிவிட்டு கிளம்பிவிட்டேன். அவர் நெசவு வேலைகள் செய்கிறார். அதற்கு இடையே எழுதுகிறார். ஜோதிடம் பார்ப்பதை கட்டண சேவையாக செய்கிறார். வாழ்வில் என்ன கசப்போ என்று நினைத்துக்கொண்டேன்.  ரைட். இந்த நேரத்தில் அந்த நினைவு எனக்கு வந்தது. அதற்காக கூறினேன். கடிதத்தை வாசியுங்கள். 2 23.2.2013 பிரிய நட்பிற்கு, வணக்கம். உடலும் மனமும் நலமாக இருக்க இறையை வேண்டுகிறேன். புதிதாக அம்ர