இடுகைகள்

பாலியல் வல்லுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் வல்லுறவை அறிந்து தடுக்க முயன்ற கன்னியாஸ்த்ரீக்கு நேர்ந்த கொடூரம்!

படம்
  சிஸ்டர் கேத்தி பாதிரி ஜோசப் மாஸ்கெல் பாலியல் வல்லுறவை அறிந்து தடுக்க முயன்ற கன்னியாஸ்த்ரீ- மர்மமாக இறந்துபோனவரை ஐம்பது ஆண்டுகளாக தேடும் காவல்துறை   குங்குமத்தில் ஆசிரியர் கே என் சிவராமன் வைக்கும் பெரிய தலைப்பு போல இருக்கிறதா? விஷயம் அந்தளவு நீளமானது.   1969ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று கன்னியாஸ்தரீ கேத்தரன் செஸ்னிக் சுருக்கமாக கேத்தி தனது அபார்ட்மென்டில் இருந்து கடத்தப்பட்டார். பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 1970ஆம்ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி, இரண்டு வேட்டைக்காரர்கள் குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் கடந்த கேத்தியின் உடலை கண்டுபிடித்தனர். காவல்துறையும் உடலைப் பெற்றது. கேத்தியின் சகோதரி, தனது சகோதரி இன்னும் உயிரோடு இருக்கிறாள். அவள் திரும்ப வந்துவிடுவதாக எண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகிறார். கேத்தி, பெண்கள் படிக்கும் ஆர்ச்பிஷப் கியோஹ் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் மர்மமாக கொல்லப்பட்ட காரணம், அங்கு பெண் மாணவிகள் மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவை, சீண்டல்களை அடையாளம் கண்டதுதான் என்று கேத்தியின் சகோதரி மர்லின் செஸ்னிக் ராடாகோவிக் கூறுகிறார். மாணவிகளுக்கு இழை

நீலப்பட நடிகையின் சுயசரிதை- நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  நீலப்படம் - லஷ்மி சரவணக்குமார் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் நீலப்படம் நாவல் லஷ்மி சரவணக்குமார் அமேசான்.காம்   இந்த நாவலில் நீலப்பட நடிகையான ஆனந்தி தன்னுடைய வாழ்க்கையை சொல்கிறாள். அவள் தனது வாழ்க்கையில் சந்திக்கிற மனிதர்கள் அவளை எப்படி மாற்றுகிறார்கள், சிந்தனையில், செயலில் மாற்றம் ஏற்படுத்துகிறார்கள் என்பதை, எழுத்தாளர் ல ச கு விவரித்து எழுதியிருக்கிறார். ல ச குவின் பிற நாவல்களைப் போலவே இதிலும் வலி நிறைந்த பால்ய வாழ்க்கை நீக்கமற உள்ளது. ஆனந்தி, விலைமாதுவின் மகள். அவளது தாய் காரணமாக, ஆனந்தி எப்படி சுரண்டப்படுகிறாள் என்பதை படிக்கும்போது நமக்கு ஏற்படும் வேதனை உணர்வு அளவில்லாத ஒன்று.   நீலப்பட நடிகை என்றாலும் கூட பொதுவான சமூகத்தில் நடிகையின் உடல் எப்படி ஆண், பெண் மனங்களை ஈர்க்கிறது. அதேசமயம் சங்கடப்படுத்தும்படியாகவும் மாறுகிறது. மனதில் உருவாகும் காமத்தின் வரம்புதான் என்ன, ஒரு பெண்ணை ஆண் ஏன் உடலாக மட்டும் பார்க்கிறான், அப்படி பார்ப்பவன் மனதில் உருவாகியுள்ள எண்ணம் என்ன என நிறைய கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் ல ச கு.   இதன் காரணமாகவே, நீலப்படம் நாவல் முக்கியமான படைப்பாகிறது

போலீஸ் இன்ஸ்பெக்டர், ரௌடி, ஓட்டுநர் என மூவருக்கும் இடையிலான ஈகோ மோதல் - கோர மீனு - ஆனந்த் ரவி, கிஷோரி, ஷத்ரு, ஹரீஷ் உத்தமன்

படம்
  கோரமீனு தெலுங்கு ஷத்ரு, ஹரீஷ் உத்தமன், ஆனந்த் ரவி கதை, திரைக்கதை, வசனம் ஆனந்த் ரவி இயக்கம் ஶ்ரீபதி   விசாகப்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் ஊர். அங்கு மீசை ராஜூ என்பவர் பணி மாறுதலில் வருகிறார். வந்த உடனே அவரை புகாரின் பேரில் அழைக்கிற சிலர், பலவந்தமாக அவரின் அடையாளமான மீசையை மழித்து எடுக்கிறார்கள். இதனால் மீசை ராஜூ தனது வெளியுலக   அடையாளமான மீசையை இழந்து ஊனமாகிறார். அவரின் ஈகோ காயப்படுகிறது. இதற்கு காரணம் யார் என தேடும்போது, அங்குள்ள மீன் வணிகம் செய்யும் அதன் வழியாக போதைப்பொருட்களை கடத்தும் தாதாவான கருணா கிடைக்கிறார். அவரைக் குறி வைக்கிறார். உண்மையில் கருணா யார், அவர் ஏன் போலீஸ் அதிகாரி ராஜூவை மீசையை மழித்து அவமானப்படுத்துகிறார் என்பதற்கான விடை படத்தைப் பார்க்கும்போது கிடைக்கிறது. தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். ஆனால், படம் எடுக்கப்பட்டது மலையாளப் படத்தின் இயல்பில் என்பதால் நிதானமாகவே பார்வையாளர்ளுக்கு யார், எதற்கு, ஏன், எப்படி என்பதற்கான விடைகள் கிடைக்கிறது. மீனவ மக்கள் வாழும் சேரிப்பகுதி. அங்குள்ள மக்களைப் பயன்படுத்தி ஏமாற்றி தொழில் செய்யும் இருவர். அப்பா, மகன். அப்பா,