இடுகைகள்

வலிநிவாரணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2021ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூல்கள்! - டைம் வார இதழின் பரிந்துரை

படம்
 2021இல் சிறந்த கட்டுரை நூல்கள் எ லிட்டில் டெவில் இன் அமெரிக்கா நேஷனல் புக் அவார்ட் பட்டியலில் இடம்பெற்ற நூல் இது. ஹனிப் அப்துராகிப் கருப்பர்கள் பற்றியும் கலாசார வேறுபாடுகளையும் எழுதியுள்ளார். கவிதையும் கட்டுரையும் சேர்ந்த வடிவமாக கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. நூலில் அமெரிக்காவின் வரலாறும் பேசப்பட்டது.  கிரையிங் என் ஹெச் மார்ட் மிச்செல் ஸானர், ஜப்பானிஸ் பிரேக்ஃபாஸ்ட் எனும் இசைக்குழுவை நடத்தி வந்தவர். தனது 25 வயதில் அவரது அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதற்குப்பிறகு அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நூலாக எழுதியிருக்கிறார். கொரிய கலாசாரத்துடனான தொடர்பு, அடையாளம் ஆகியவற்றைப் பற்றி தேடி அவர் அடையும் விஷயங்களை நூலாக மாற்றியிருக்கிறார்.  இன்விசிபிள் சைல்ட் ஆண்ட்ரியா எலியட் என்ற நிருபர், தசானி என்ற சிறுமியைப் பார்க்கிறார். நியூயார்க் நகர காப்பகத்தில் அந்த சிறுமி வாழ்கிறார். அமெரிக்காவில் நிலவும் பாகுபாடு, வீடு இல்லாத நிலை, இனவெறி ஆகியவற்றை தசானி என்ற சிறுமியின் வாழ்க்கை வழியே ஆண்ட்ரியா பிரமாதமாக எழுதியுள்ளார்.  ஆப்டர்ஷாக்ஸ் நாடியா ஆவுசு எழுதிய சுயசரிதை இது. தான்சானியா

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் நுண்ணுயிரிகள்!

படம்
giphy.com நகரங்களில் பரவும் நுண்ணுயிரிகள்! பெருமளவு வலிநிவாரணிகளை மக்கள் பயன்படுத்தும்போது, நிலம், நீராதாரங்கள் அனைத்திலும் மாசுபாடு  ஏற்படுகிறது. அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை இந்த மாசுபாடுகளுக்கு முக்கியக் காரணிகள். கழிவுநீர் கலப்பதால், நகரிலுள்ள ஏரி, குளம் ஆகிய நீராதாரங்களில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளிலுள்ள நுண்ணுயிரிகள் தொடர்பான ஆய்வு அசாமின் கௌகாத்தியில் நடைபெற்றது. இந்த ஆய்வில் நீர்நிலைகளில் வைரஸ்கள் மற்றும் மருந்துகளை எதிர்க்கும் ஈ_கோலி பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து மாதிரிகள் எடுத்து ஆராயப்பட்டு இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.  நீர்நிலைகளில் சேரும் வேதிப்பொருட்கள், உலோகம், மலக்கழிவுகள் ஆகியவை நீர்நிலையின் இயல்பான வெப்பத்தை மாற்றுகின்றன. மேலும் இவை லெவோஃபிளாக்ஸாசின் (levofloxacin), சிப்ரோஃபிளாக்ஸாசின் (ciprofloxacin), நார்ஃபிளாக்ஸாசின் (norfloxacin), கனாமைசின் (kanamycin), மோனோசல்பேட் (monosulphate), சல்ஃபாமீதோஆக்சோல் (sulfamethoxazole)  ஆகிய ஆன்டிபயாடிக் மருந்துகளை, நீர்நிலையிலுள்ள நுண்ணுயிரி

சிபிடி ஆயில் நன்மை என்ன?

சிபிடி ஆயில்(CBD Oil) கஞ்சா பயிரிலிருந்து எடுக்கும் எண்ணெயைப் பல்வேறு நாடுகள் பயன்படுத்த தடை விதித்துள்ளன. அப்படி பயன்படுத்தினாலும் அதில் டிஹெச்சி - டெட்ரா ஹைட்ரோ கன்னபினோல் எனும் பொருள் இருக்க கூடாது. இதன் அளவு அரசு சொல்லும் அளவில் இருப்பது அவசியம். மற்றபடி மருத்துவப்பயன்பாடுகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதித்துள்ளது. சிபிடி எண்ணெய் , கஞ்சா விதைகளிலிருந்து பெறப்படுகிறது. இதனை உடலில் எப்படி எடுத்துக்கொண்டாலும் அது உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இந்த எண்ணெய் உணவுப் பொருட்களிலும் குளிர்பானங்களிலும் கூட சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் மருத்துவத் துறையில் எரிச்சலைத் தவிர்க்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. அல்சீமர் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிபிசி சயின்ஸ் போகஸ்