இடுகைகள்

ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டார்ட்அப் மந்திரம் 10: தன்னம்பிக்கை தவறுகள்

படம்
அத்தியாயம் 10! தன்னம்பிக்கை தவறுகள்! ஸ் டார்ட்அப் ஐடியா பிரமாதமாக இருந்தாலும் அது தரும் உத்வேகம், பரவசத்தில் அதீத தன்னம்பிக்கையில் செய்யும் தவறுகளை பார்த்துவிடுவோம் . தனியே தன்னந்தனியே … ஸ்டார்ட்அப்பை தொடங்குவது , அதற்கான நிதி சேகரிப்பது , மார்க்கெட்டிங் என அனைத்துக்கும் கடும் உழைப்பு தேவை . இந்நிலையில் ஒற்றையாளாக நிற்பது பெரும் பலவீனம் . முடிந்தவரை கல்லூரியில் படித்தவர்கள் , டெக் நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்களை உடனழைத்து ஐடியாவை செயல்படுத்துங்கள் . வெற்றிக்கு நெட்வொர்க் மிக அவசியம். உடனே ஆரகிள்ளின் லாரி எலிசன் தனி ஓனர் என விவாதம் வேண்டாம் . விதிவிலக் கான திறன்களைப் பெற்றவர்களில் அவரும் ஒருவர். இது அனைவருக்கும் பொருந்தாது.   நோக்கம் முக்கியம் ! வியாபாரம் யாருக்கானது ? நிறுவனத்தின் நோக்கமென்ன ? வெறும் பணம் சம்பாதிப்பது கடந்து நிறுவனமாக வளர்த்தெடுப்பது லட்சியமா ? என்ற கேள்வியை மக்களிடம் கேட்ககூடாது . கண்ணாடியின் முன் நின்று அதில் பிம்பமாக தெரிபவரிடம் கேள்வியைக் கேளுங்கள் . பதிலின் நேர்மை முக்கியம்.   கையைக் கடிக்கும் பணம் ! ஸ்டார்ட்

ஸ்டார்ட்அப் மந்திரம் 19-21: பங்குச்சந்தை

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் -19   -கா.சி.வின்சென்ட்   பங்குச்சந்தையில் இறங்குவதில் நிறுவனத்திற்கு பிளஸ்ஸும் உண்டு மைனஸூம் உண்டு.   பிளஸ்   வாடிக்கையாளர்கள் , முதலீட்டாளர்கள் , மக்கள் ஆகியோரின் மனதில் பிராண்டாக அடையாளம் கிடைக்கும் . நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு வட்டியில்லாமல் கடன்களைப் பெ றுவதோடு, புதிய திறமைகளை ஈர்க்கலாம் .   மைனஸ்   நிறுவனம் குறிப்பிட்ட வணிக வெற்றிகளைப் பெற்று பெரியதாக இருக்கவேண்டும் . சரியான தலைமை இல்லாதபோது நிறுவனத்தின் பங்குகள் தள்ளாடி கீழிறங்கத்தொடங்கும் . வளர்ச்சி மற்றும் லாபத்திட்டம் கச்சிதாக செயல்படுத்தாதபோது பிராண்டின் நம்பிக்கை குலையும் .   " பங்குச்சந்தையில் பெறும் முதலீடு , சப்ளிமெண்ட்டுகள் போல . பெறும் லாபத்தில் முதலீட்டாளர்கள் டிவிடெண்டுகள் வழங்கி பிராண்ட்டை மேம்படுத்த லாம் " என்கிறார் மைண்ட் ட்ரீ , ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவன இயக்குநரான அசோக் சூதா . நிறுவனம் முறையான வளர்ச்சி , லாபதிட்டங்கள் இன்றி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது ஆபத்து என எச்சரிக்கிறார் எக்ஸ்ஃபினிட்டி வென்ச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்

ஸ்டார்ட்அப் மந்திரம் - 16-18

படம்
16 ஸ்டார்ட்அப் மந்திரம்   கா.சி.வின்சென்ட்   ஸ்டார்ட்அப்பின் தொழில்முயற்சிகளின் தொடக்கத்திலேயே நிதியைப் பெறுவது விற்பனை முயற்சியை அதிகரிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் .     இ - வணிக தளங்களாக இருப்பது நிதியைப் பெறுவதோடு அதனை எளிதில் லாபமாக மாற்றவும் உதவும் . ஆனால் இது அனைத்து ஸ்டார்ட்அப்களுக்கும் பொருந்தாது . ஓலா , உபர் , பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் சில இலவசங்களை அள்ளி வழங்குவது எதிர்காலத்தில் குறையும் என்கிறார்கள் மார்க்கெட் வல்லுநர்கள் .   மார்க்கெட்டை கவனமான கவனித்தாலே எந்தவித தொழிலை தொடங்கலாம் என்று புரிந்துவிடும் ஜாஸிவ் சலுஜா போல . ஹார்லி டேவிட்ஸன் பைக்கை அசெம்பிள் செய்வதற்கான செய்தி பரவியிருந்த நேரத்தில் மெக்கின்சி நிறுவனத்தில் செய்து வந்த வேலையை விட்டு ஹைநோட் பர்ஃபாமன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார் . பைக்குகளுக்கான பொருட்கள் , சர்வீஸ் ஆகியவற்றை இவர் தருவதோடு தாராளமான விலைகொண்ட பைக்குகளையும் விற்கிறார் . " தொழிலில் முக்கிய சவால் , சந்தையை இணைப்பதுதான் . டெல்லியின் தொடங்கியுள்ள கடை மூலம் விற்பனை , மார்க்கெட்டிங் , ஆன்லைன் விஷயங்களை செய்கிறோம் &