ஸ்டார்ட்அப் மந்திரம் 10: தன்னம்பிக்கை தவறுகள்
அத்தியாயம் 10!
தன்னம்பிக்கை தவறுகள்!
ஸ்டார்ட்அப் ஐடியா
பிரமாதமாக இருந்தாலும் அது தரும் உத்வேகம், பரவசத்தில் அதீத தன்னம்பிக்கையில் செய்யும்
தவறுகளை பார்த்துவிடுவோம்.
தனியே தன்னந்தனியே…
ஸ்டார்ட்அப்பை தொடங்குவது,
அதற்கான
நிதி சேகரிப்பது, மார்க்கெட்டிங் என அனைத்துக்கும்
கடும் உழைப்பு தேவை. இந்நிலையில் ஒற்றையாளாக
நிற்பது பெரும் பலவீனம்.
முடிந்தவரை
கல்லூரியில் படித்தவர்கள், டெக்
நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்களை உடனழைத்து ஐடியாவை செயல்படுத்துங்கள்.
வெற்றிக்கு நெட்வொர்க் மிக அவசியம். உடனே ஆரகிள்ளின் லாரி எலிசன்
தனி ஓனர் என விவாதம் வேண்டாம். விதிவிலக்கான
திறன்களைப் பெற்றவர்களில் அவரும் ஒருவர். இது அனைவருக்கும் பொருந்தாது.
நோக்கம் முக்கியம்!
வியாபாரம் யாருக்கானது? நிறுவனத்தின்
நோக்கமென்ன? வெறும் பணம் சம்பாதிப்பது கடந்து
நிறுவனமாக வளர்த்தெடுப்பது லட்சியமா? என்ற
கேள்வியை மக்களிடம் கேட்ககூடாது. கண்ணாடியின்
முன் நின்று அதில் பிம்பமாக தெரிபவரிடம்
கேள்வியைக் கேளுங்கள். பதிலின் நேர்மை முக்கியம்.
கையைக் கடிக்கும் பணம்!
ஸ்டார்ட்அப் தொடங்கும் வேகத்தில் நிறைய ஆட்களை வேலைக்கு
சேர்ப்பீர்கள். முதலீட்டாளர் விலகினால்,
சரியானபடி
வேலை முடிந்து பணம் கைவராதபோது நிலைமை என்னாகும்? ரணகளமாகும்.
எனவே
தொழில் முதலீட்டு பணத்தை செலவழிக்கும்போது
நெருப்பாயிருங்கள்.
அனைத்தும்
கணக்கில் வருவது மிகமுக்கியம்.
பெரிதினும் பெரிதாய் யோசி!
"மிகச்சிறந்த ஐடியாக்களை
தவிர்த்தால் போட்டிகளையும் தவிர்த்துவிடலாம"
என்கிறார்
முதலீட்டாளர் பால் கிரகாம். எனவே
ஐடியாவை தனித்துவமாக யோசித்து மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வைத் தந்தால் ஸ்டார்ட்அப்
ஜெயிப்பது நிஜம்.
உருமாறுவது தேவை!
செல்போன் கம்பெனியான நோக்கியா,
முதலில் காகித மில் நடத்தி
ரப்பர் ஷூக்களை விற்றது என்பதை மறந்துவிடாதீர்கள். ஸ்டார்ட்அப்
ஹிட்டோ, ஃபிளாப்போ அடுத்த பிளானை ரெடியாக
வைத்திருங்கள். இது தோல்வி பயமல்ல;
உங்களை
பாதுகாப்பதற்கான அவசரத்திட்டம் இது. இந்தியாவில் சைக்கிள் என்பது
காலாவதியான வாகனம் போல பார்த்தாலும் உலகளவில் சைக்கிள்களை வாடகைக்கு அளிக்கும் தொழில்
ஜரூராக வளர்ந்து வருகிறது. தொழிலோடு சமூகம் பற்றிய கவனமும் இத்தொழிலிலுள்ளவர்கள் சமூகத்தில்
முக்கிய ஐகானாக மாற்றிவருகிறது. எப்படி?யார்? அடுத்தவாரம் பார்ப்போம்.