கட்டற்றஅறிவு 4: கட்டற்ற திறமூல என்ன வேறுபாடு?


கட்டற்ற அறிவு! – வின்சென்ட் காபோ


4




1980 ஆம் ஆண்டு XGP வகையிலான லேசர் பிரிண்டரை ஆதார நிரல்களை மாற்றி பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். பிரிண்டிங் நிறைவடைந்தால் அல்லது பேப்பர் ஜாம் ஆனால் உடனே சம்பந்தப்பட்டவரின் கணினிக்கு செய்தி வரும்படி செட்டிங் அமைத்து அசத்தினார். ஆனால் புதிதாக மாற்றிய XEROX 9700 ஆதார நிரல்களை இப்படி மாற்ற முடியாத  சிக்கல் அவர்களை கட்டற்ற மென்பொருள் செயல்பாடுகளை தூண்டியது. 

1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்ஐடி வேலையை விட்டு விலகி ஜிஎன்யு திட்டத்தில் மூழ்கினார் ஸ்டால்மன். 1983 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜிஎன்யு திட்டத்தை அறிவித்தவர், 1985 ஆம் ஆண்டு இதற்கான அறிக்கையை தயாரித்து வெளியிட்டார். “புரோகிராம்களை நம் விருப்பபடி மாற்றி இயங்க செய்வதை உலகம் கொள்ளையர் என்ற அர்த்தத்தில் புரிந்துகொண்டது. ஆனால் புரோகிராம்களின் செயல்பாட்டு எல்லையை தகர்ப்பது என நான் நம்பினேன்” என்கிறார் ஸ்டால்மன்(Free Software Free Society).

இந்த நேரத்தில் நாம் அறிவுசார் சொத்துரிமையை பற்றி பேசுவது சரியாக இருக்கும். பொருட்களுக்கு புவிசார் குறியீடு போலிகளை தவிர்க்கிறது அல்லவா? காப்பிரைட் ஒரு பொருளை கண்டுபிடித்தவருக்கு அதற்கான பயன்களை கிடைக்க வைக்கிறது. ஆனால் புரோகிராம் விஷயத்தில் இது சீரழிவாக மாறுகிறது. புரோகிராம் ஒன்றை கண்டுபிடிப்பவர், தான் மட்டுமே அதற்கு உரிமையாளர்(Copyright) என சொந்தம் கொண்டாடி விற்பனை செய்து அதனை ஒரு பயனர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே  பயன்படுத்தலாம் என ரூல்ஸ் போடும்போது அறிவைக் கட்டுப்படுத்தக்கூடியதாக மாறுகிறது. 

1977 ஆம் ஆண்டு வெளியான VAX -11 கணினி மூடிய புரோகிராம்களை கொண்டிருந்தது. 1970 ஆம் ஆண்டிலேயே ஸ்டால்மன் யூனிக்ஸ் போன்ற ஓஎஸ்ஸை அன்றைக்கிருந்த அசெம்ளர், இன்டர்பிரெட்டர் ஆகிய அம்சங்களுடன் உருவாக்க நினைத்தார். ஜிஎன்யூ(GNU NOT UNIX) என அனைத்தும் ரெடி. இங்கு குறுக்கே நின்றது இதனை எப்படி குறிப்பிடுவது என்ற பிரச்னைதான். சுதந்திரமான மென்பொருள் என்பதை கட்டற்ற என்று குறிக்கலாம். எளிமையாக குறிக்க பயன்படும் ஃப்ரீ(Free) என்ற சொல் தவறான பொருளை மக்களுக்கு உணர்த்தும்.



பிரபலமான இடுகைகள்