இந்திய கிராமங்களை வாழவைக்கும் சீனா!


இந்திய கிராமங்களுக்கு உதவும் சீனா!


உத்தர்காண்டின் மாநிலத்திலுள்ள ஏழு மாநிலங்கள் சீனாவில் விளையும் பொருட்களால் உயிர்வாழ்ந்து வருகின்றன.
உத்தர்காண்டின் தார்சுலா பகுதியிலுள்ள நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சீனாவிலிருந்து நேபாளம் வழியாக வரும் அரிசி, எண்ணெய், உப்பு, கோதுமை ஆகியவற்றை நம்பியே வாழ்கின்றனர்.

இங்கு அரசின் ரேஷன் கடைகளில் தேவையான அளவு உணவுப்பொருட்கள் வழங்கப்படாததுதான் மக்களின் அவலநிலைக்கு காரணம். புண்டி, கன்ஜி, குடி, நபால்சு, நபி, ரோன்காங், கார்பியாங் உள்ளிட்ட ஏழு கிராமங்களும் பற்றாக்குறையான ரேஷன் முறையால் சீனாவின் உணவுப்பொருட்களை நம்பியே காலந்தள்ளி வருகின்றன. “மாதம்தோறும் அரசு, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்குகிறது. இப்பொருட்களும் எங்கள் கிராமத்திற்கு வந்துசேர சாலை வசதிகள் இல்லாததால் அதிக காலதாமதம் ஆகிறது. இதனால் வேறுவழியின்றி நேபாளத்தின் டிங்கர், சாங்குரு ஆகிய இடங்களிலிருந்து உணவுப்பொருட்களை அதிகவிலைக்கு வாங்கும் நிலையில் உள்ளோம்” என்கிறார் நபி கிராமத்தவரான அசோக் நபியல். “அரசிடம் பற்றாக்குறை விளக்கப்பட்டும் ரேஷன் அதிகரிக்க அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் தார்சுலா பொதுவழங்குதல் அதிகாரியான ஆர்.கே. பாண்டே.