பத்துலட்சம் ரசிகர்களை பெற்ற யூட்யூப் ஸ்டார்!


பத்து லட்சம் ரசிகர்களைத் தொட்ட இந்தியர்! – 


யூட்யூபில் பத்து லட்சம் ரசிகர்களை ஈர்த்த இந்தியராக வெற்றிவாகை சூடியுள்ளார் டெல்லியைச் சேர்ந்த புவன் பாம்.  BB ki Vines 


Image result for bb ki vines


சேனலைச் சேர்ந்தவரான புவன், 2015 ஆம் ஆண்டிலிருந்து வீடியோக்களை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார்.

டிட்டு மாமா என்ற கேரக்டரை பிரபலப்படுத்தியவர் இந்தி மொழி வீடியோக்களை ஸ்மார்ட்போன் மூலம் தன் வீட்டிலேயே தயாரிக்கிறார். குடும்பத்திலுள்ள உறுப்பினர்களை மையப்படுத்திய இவரின் அசகாய கிண்டல் வீடியோக்களை உலகெங்கும் 1.3 பில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
கான்செப்ட் யோசித்து ஷூட்டிங் எடுக்க 4 மணிநேரம், எடிட்டிங்குக்கு 3 மணிநேரம் என ஷெட்யூல் போட்டு உழைக்கும் புவன், யூட்யூப் மூலம் மாதம் 3 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார். இவர் முதலில் யூட்யூபில் போட்ட வீடியோவுக்கு பதினைந்து லைக்குகள்தான் விழுந்தன. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக மூளையை சுழற்றி கான்செப்ட் பிடித்த புவன் இன்று யூட்யூப்  டாப் ஸ்டாராக மாறியுள்ளார். “மக்களுக்கு தினசரி புதுமைகள் தேவை. அதைப்புரிந்துகொண்டால் நீங்களும் ஹீரோதான்” என புன்னகைக்கிறார் புவன் பாம்.