சோலார் எதிர்காலம்! - ஆராய்ச்சிகளும் நடைமுறை நிஜங்களும்!
உலகின் எதிர்காலம் சூரியனின் கையில்!
ஆம்! இந்தியா
மட்டுமல்ல, உலகின் எதிர்காலமும் சூரியனின்
வெப்பத்தை நம்பியே இருக்கிறது. சூழலை
மாசுபடுத்தாத ஆற்றல்களான வெப்பம்,காற்று,நீர்
உள்ளிட்டவைதான் இனி நாம் பயன்படுத்தும்
அனைத்து டிஜிட்டல் பொருட்களின்
மின்சாரத்திற்கு அடிப்படை. நம் டாபிக்
ஆற்றல்களின் டைப்களைப் பற்றியதல்ல;
அதனை
எப்படி சேமிக்கிறோம் என்பதுதான். நம் கைகளின்
கைரேகை போலவே மாறிவிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு உயிரூட்டும் லித்தியம் அயான் பேட்டரி இனி
கார்,பைக்,வீடு
என சகல இடங்களிலும் ஆல் இன் ஆல் இடம்பெறப்போவது ப்யூச்சர் நிஜம்.
கார்,பைக்
என வாகனங்களை இயக்க இந்தியா பெருமளவு நம்பியிருப்பது இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்
வளத்தையே. 2015 ஆம் ஆண்டு
தீர்மானப்படி, 2030 க்குள் முழுமையாக எலக்ட்ரிக்
வாகனங்களுக்கு மாறுவதோடு, பெட்ரோல்,டீசல்
கார்களை தடை செய்வது நிதி ஆயோக்கின் அதிரடி
பிளான். பாரீஸ் சூழல் ஒப்பந்தப்படி2005
- 2030 க்குள் 35%
கார்பன்
மாசுபாட்டைக் குறைக்கும் திட்டத்திற்கு எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி உதவக்கூடும்.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் மஹிந்திரா
முன்னணியிலும், அதன் பின்னால் டாடா,
டொயோட்டா,
பிஎம்டபிள்யூ,
மாருதி
சுசூகி ஆகியவை அணிவகுக்கின்றன.
சேமிக்க பிளான் ரெடி!
சோலாரில்
100GW,காற்றில் 60GW,;நீர்
மற்றும் உயிரி எரிபொருட்கள் மூலம் 15GW என மின்தேவையில்
40% உருவாக்குவது அரசின் மெகாமைண்ட் பிளான்.
இதன்
மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் அபார
சான்ஸ்
உண்டு. "சூரியன்
மற்றும் காற்று ஆகியவற்றில் பெறும் மின்சாரம் குறித்த கவனம் உருவாகியுள்ளது.
எதிர்காலத்தில்
இவை வீணாக்கப்படாமல் பயன்படுத்தப்படுவதற்கு
இதுவே
கேரண்டி" என்கிறார் சீமென்ஸ் கமீஸா
நிறுவன இயக்குநர் ரமேஷ் கைமல்.
175GW மின்சாரத்தை(2022க்குள்) புதுப்பிக்கும் ஆதாரங்களிலிருந்து
பெறுவது அரசின் லட்சியம். இதற்காக மத்திய பிரதேசத்தில் ரேவா சோலார் பிளான்ட்டை அரசு,
சோலார் எனர்ஜி கார்ப்பரேஷனோடு, ம.பியின் உர்ஜா விகாஸ் நிகாம் என இரு நிறுவனங்களும்
இணைந்து உருவாக்கி வருகின்றன. 2.97 காசுக்கு சோலார் மின்சாரம் பெறுமாறு மூன்று நிறுவனங்களுக்கு
டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேவா பிளான்டின் மின்சாரத்திற்கு டெல்லி மெட்ரோ, தரும் விலை
ரூ.4.30(1 யூனிட்) ராஜஸ்தானின் பாட்லா சோலார் பிளான்ட் விலை ரூ.2.90 என கிடைக்கிறது.
இந்தியாவில் குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா,
உத்தராகண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சோலார் ஆற்றலை மேம்படுத்துவதில் முனைப்பாக
செயல்படுகின்றன. கேரளா நீரில் மிதக்கும் சோலார் தகடுகளை உருவாக்கி பனாசுராசாகர்,வயநாட்டில்
சோதனை செய்து வருகின்றன.
பேட்டரி தேவை!
எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதுமை படைத்த டெஸ்லா,
வீட்டு மின்தேவைக்கான ஸ்பெஷல் பேட்டரிகளை தயாரித்துள்ளது. சூரியன் மறைந்தாலும் டெஸ்லாவின்
பவர்வால் மூலம் வீட்டுக்கு விளக்கேற்றலாம். "மின்சாரத்தை பற்றி ஒருவாரத்திற்கு
நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை" என்கிறது சாட்சாத் டெஸ்லாவின் விளம்பரமேதான்.
அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் பரவலாக வீடுகளில்
டெஸ்லாவின் பவர்வால் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
எலக்ட்ரிக் கார்களின் பெரிய பலவீனம், பற்றாக்குறையான
அதன் பேட்டரிதான். ஒருமுறை சார்ஜ் செய்தால், சராசரியாக 120 கி.மீ மட்டுமே செல்லும்
திறன் கொண்டதால், லாங் ட்ரைவுக்கு இவை உதவாது. இன்று இந்தியாவிலுள்ள கார்களின் சராசரி
வேகம் 85 கி.மீ. பேட்டரிகளின் கிறுகிறு விலை,சார்ஜிங்
பாய்ன்டுகளின் தட்டுப்பாடு ஆகியவை எலக்ட்ரிக் கார்கள் ஃபேமஸ் ஆகாததற்கு முக்கிய காரணங்கள்.
இஸ்ரோ தனது சாட்டிலைட்டுகளுக்கு பேட்டரி தயாரித்த
அனுபவம் கொண்டிருப்பதால், விலை மலிவான லித்தியம் அயான் பேட்டரிகளை கார்,பைக் உள்ளிட்ட
பொருட்களுக்கு தயாரிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது. "விண்வெளியில் எளிதில் சிதைந்துவிடாத
பேரளவு ஆற்றலைத் தேக்கி வைக்கும் தன்மையிலான லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்துகிறோம்.
பேட்டரியின் ஆதாரமான லித்தியம் கோபால்ட் இந்தியாவில் கிடைக்காத கனிமம் என்பதால் விலை
மிக அதிகம். 150KW/h சக்தியுள்ள பேட்டரியை 140 டாலர் விலையில் நாம் இதனை இந்தியாவில்
BHEL மூலம் உருவாக்க முடியும்" என தன்னம்பிக்கையாக பேசுகிறார் விக்ரம் சாராபாய்
மையத்தின் தலைவரான டாக்டர் கே.சிவன்.
இஸ்ரோ மட்டுமல்லாது சுசூகி, குஜராத்திலும் ,பானாசோனிக்,
ஹரியானாவிலும் பேட்டரிகளை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை 1500 கோடி ரூபாய் மதிப்பில்
அமைக்கவுள்ளது புதுப்பிக்கும் ஆற்றலை சரியானபடி சேமிப்பதற்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மலிவாகும் பேட்டரிதொகை!
2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல்
எலக்ட்ரிக் கார் நிறுவனமான ரேவா முதலில் லெட் ஆசிட் பேட்டரிகளை முதலில் தன் கார்களில்
பயன்படுத்தியது. எட்டுமணி நேரம் சார்ஜ் செய்தால்,80 கி.மீ செல்லலாம். ஆனால் இன்று பேட்டரியை
ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால், தரமான லித்தியம் அயான் பேட்டரி மூலம் 600 கி.மீ. பயணிக்கலாம்.
"தொடக்கத்தில் ஒரு கிலோவாட்டுக்கு 500 டாலர்கள் செலவானது. இன்று செலவு 250 டாலர்கள்தான்.
5 ஆண்டுகளில் உருவான மாற்றம் இது" என்கிறார் அமெரிக்காவின் ஆர்கன் லேபைச்சேர்ந்த
வெங்கட் சீனிவாசன். அண்மையில் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள டெஸ்லா பேட்டரி தொழிற்சாலையில்
20 மெகாவாட் மின்சாரம் தயாரித்து சேமிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இங்குள்ள டெஸ்லா
பவர் பேக்ஸ் 7 அடி நீளம்,3 அடி அகலம், 1.6 டன்கள் எடையில் 1.5 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக
அமைந்துள்ளது. இந்த பேட்டரிகளின் மூலம் 2500 வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கலாம்.
லித்தியத்தின் சக்தி! 1980 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம்
மெட்டல் பேட்டரியை பழைய கைகடிகாரங்கள், கேமராக்களில் பயன்படுத்தினார்கள். முன்பிருந்த
லித்தியம் -அயான் பேட்டரியை விட இன்றைய பேட்டரிகளின் திறன் இன்று மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.
இந்த பேட்டரியின் திறனை அதிகரிக்க சல்பர் மற்றும் ஆக்சிஜனை பயன்படுத்தும் ஆராய்ச்சிகள்
நடைபெற்று வருகின்றன. பேட்டரியில் எலக்ட்ரான்களை எவ்வளவு தேக்கி வைக்கிறோமே அதுதான்
அதன் உச்ச திறன். எனவே தற்போது பயன்படுத்தப்படும் கிராபைட்டைவிட சிலிகானை பேட்டரியில்
பயன்படுத்தினால் பத்து மடங்கு லித்தியம் எலக்ட்ரான் அணுக்களை தேக்க முடியும். ஆனால்
எப்படி என்பதற்கான விடைதேடி ஆராய்ச்சிகள் பரபரக்கின்றன.
"பேட்டரிகள் அப்டேட் ஆக
நாம் பத்து ஆண்டுகள் காத்திருக்க முடியாது. இன்று கார்களின் பேட்டரிகளை தனியாக கழற்றி
தேவையான மாற்றங்களைச் செய்யலாம். டெக்னாலஜி அந்தளவு வேகமெடுத்துள்ளது. ஸ்மார்ட் பேட்டரிகளை
எங்களது சென்டரில் வாங்கிப் பொருத்தி, வண்டிக்கு பெட்ரோல் போடும் நேரத்தில் மின்னலாக
பறக்கலாம். எனவே எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை உலகளவில் உருவாக்குவது கடினமல்ல"
என்கிறார் ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரும், சன் மொபைலிட்டியின்
இயக்குநருமான சேட்டன் மைனி.
நாம் நினைப்பதைவிட சூழல் வேகமாக மாறுகின்றன!
-நிதின்கட்கரி,சாலைப்போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
உங்களது கனவுத்திட்டமான எலக்ட்ரிக் வாகனங்களின்
நிலைமை என்ன?
நாக்பூரில் 55 பஸ்களை எத்தனாலில் இயக்குவதோடு,
20 சார்ஜிங் பாய்ன்டுகளை உருவாக்கியுள்ளோம். அதோடு எலக்ட்ரிக் டாக்சிகளையும் டெஸ்ட்
செய்து வருகிறோம். அதோடு இதன் எண்ணிக்கையையும் 1000 மாக அதிகரிக்க முயற்சித்து வருகிறோம்.
எலக்ட்ரிக் பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் 12%தான். இதிலுள்ள லித்தியம் அயான் பேட்டரியின்
விலையைத்தான் ரூ.50அளவுக்கு குறைக்க வேண்டியுள்ளது.
பொதுப்போக்குவரத்து பஸ்கள் எப்போது எலக்ட்ரிக்
மயமாகும்?
பொருளாதார அடிப்படையில் பஸ்கள் ஹிட்டானால் பஸ்களுக்கான
டிமாண்ட் உருவாகும். பேட்டரி,கெபாசிட்டர் என இருமுறையில் டெண்டர்கள் கேட்கப்படுகின்றன.
பயணிகளின் நிறுத்தங்களில் பஸ்ஸை சார்ஜ் செய்து செல்வது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
போட்டிகள் அதிகரித்தால் பேட்டரிகளின் விலை குறையும். தற்போது இந்தியாவில் 25 நிறுவனங்கள்
பேட்டரிகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது நம்பிக்கை தருகிறது.
லித்தியம் -அயான் ஹிஸ்டரி!
1990
ஜான் பி குட்எனஃப் மற்றும் கொய்சி மிசுஷிமா லித்தியம்
கோபால்ட் ஆக்ஸைடை பேட்டரியில் கேத்தோடாக பயன்படுத்தலாம் என கண்டுபிடித்தார்கள்.
1991
சோனி நிறுவனம் வணிகரீதியில் உலகின் முதல் லித்தியம்
அயான் பேட்டரியை உருவாக்கியது. முந்தைய நிக்கல் மெட்டல் பேட்டரியைவிட லித்தியம் அயான்
அளவில் சிறியது. எக்ஸ்ட்ரா ஆற்றலைத் தேக்குவதில் சாம்பியன்.
1994
லித்தியம் அயான் பேட்டரியை முதன்முதலில் தனது
MicroTAC எலைட் போனில் பயன்படுத்திய நிறுவனம் மோட்டரோலா.
2006
தனது லித்தியம் அயான் பேட்டரிகள் அதிக சூடாகிறது
என புகார்கள் ஏராளமாக கிளம்பியதால் அவற்றை திரும்ப பெறுவதாக சோனி நிறுவனம் அறிவித்தது.
2008
எலன் மஸ்கின் நிறுவனமான டெஸ்லா Roadster கார்களில்
லித்தியம் அயான் பேட்டரிகளைப் பயன்படுத்தியது.
2017
டெஸ்லா நிறுவனம் ஆஸ்திரேலியாவில் 100MW திறன் கொண்ட
சேமிப்பு வசதியைத் தொடங்கியது. மெகா சேமிப்பு திட்டமான இதன் மூலம் 30 ஆயிரம் வீடுகளுக்கு
மின்சாரம் அளிக்கலாம்.
பேட்டரி வேலை செய்வது எப்படி?
சோலார் பேனலில் இருந்து மின்தொடர்பு கிடைக்காத போது
அல்லது துண்டிக்கப்பட்டவுடன் லித்தியம் அயான் பேட்டரிகள் தன் ஆற்றலை ஆட்டோமேடிக்காக
சேமிக்கத் தொடங்கிவிடுகின்றன.
பகலில் சோலார் பேனலில் சேமிக்கப்படும் ஆற்றல், வீட்டுப்பயன்பாட்டுக்கு
போக, மிஞ்சுவது பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. சூரியன் மறைந்தபின் இந்த ஆற்றல் பயன்படுகிறது.
சோலார் பேனல், பேட்டரியை ஸ்மார்ட் போனிலிருந்தே
இயக்க முடியும்.
பவர்வால்(13.5kWh)- ரூ.3,58,046. , வன்பொருட்கள்-
ரூ.45,569, மொத்த செலவு ரூ. 4,03,615
டாலர்கள். 10 ஆண்டுகள் வாரண்டி. எடை 125 கி.கி. சூரிய ஆற்றல் உச்சத்தில் 7kW, ஆற்றல்
குறைந்தால் 5kW. நான்கு பெட்ரூம்களைக் கொண்ட வீட்டிற்கு ஏற்ற பவர்வால் இது.