காஃபி தின பிட்ஸ்!
மனம் மயக்கும் காஃபி!
ஆப்பிரிக்க பழங்குடிகள் காபி கொட்டைகளை
பழங்கள், விலங்குகளின் கொழுப்போடு சேர்த்து சாப்பிட்டு வந்தனர் என்கின்றனர் வரலாற்று
ஆராய்ச்சியாளர்கள். காஃபீன் சோடா மற்றும் மருந்து நிறுவனங்களில் பயன்படுகிறது.
இன்ஸ்டன்ட் காபி இங்கிலாந்தில்
1771 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகமானது. அமெரிக்காவில் 1910 ஆம் ஆண்டு காப்புரிமை
பெற்று பெருமளவு உற்பத்தி தொடங்கியது. உலகின் 40 சதவிகித காஃபி கொலம்பியா மற்றும் பிரேசிலில்
உற்பத்தியாகிறது.
இசைமேதை பீத்தோவன் 60 காபிக்கொட்டைகளை
எண்ணி அரைத்து காபி தயாரித்து பருகுவது வழக்கம். உலகிலேயே காஃபிக்கு 1092 டாலர்களை
அமெரிக்கர்கள் செலவழிப்பது யார் தெரியுமா? அமெரிக்கர்கள்.
1746 ஆம் ஆண்டு ஸ்வீடன் அரசு,
காஃபி தீவிரவாத எண்ணத்தை அதிகரிக்கிறது என்று கூறி காஃபியை மட்டுமல்ல அதனை அருந்தும்
காஃபி குவளைகளையும் தடை செய்ய உத்தரவிட்டது.
இத்தாலியின் ரோமிலுள்ள காபுசின்
துறவிகளின் உடையிலிருந்த ஒற்றுமை காரணமாகவே, காஃபேசீனோ காபியின் பெயர் பிறந்தது.