இடுகைகள்

பசுமைக்கட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத

சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் சமூகப் பகிரல் தத்துவம்!

படம்
முதலாளித்துவத்தில் அடிப்படையானது லாபம். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆப்பிள், கூகுள் தங்கள் அலுவலகங்களை திறப்பது குறைந்த கூலியில் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற கருத்தில்தான். தொழிலாளர் சங்கம் அமைத்து அடிப்படையான உரிமைகளை கேட்க முடிந்தால், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆசியா பக்கமே தலைவைத்து படுக்காது. ஒரு தொழிலில் முதலீடு செய்து கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்யவேண்டும். தொடர்ச்சியாக லாபம் வரவேண்டும். லாபம் வரவில்லையா? லாபம் கிடைக்கும் இடத்திற்கு முதலீட்டை மாற்றிக்கொள்ளவேண்டியதுதான். இப்படித்தான் வெளிநாட்டு முதலீடுகள் செயல்படுகின்றன. லாபத்தின் மூலமான பொருளாதார வளர்ச்சியை பல்வேறு நாடுகள் அடைய முயன்று வருகின்றன. இதன் மறுபுறம் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை அவலமான வறுமைக்குள் தள்ளப்படுகிறது. பணக்காரர்கள், தொழிலதிபர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். சாமானிய மக்கள் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கியாவது உயிர்பிழைக்க முடியுமா என அல்லாடுவார்கள். முதலாளித்துவத்திற்கு கருணை தெரியாது. இரக்கம் கிடையாது. மனிதநேயம் பார்க்காது. மக்களை தேவையற்ற ஏராளமான பொருட்களை வாங்க வைத்து க

ஈகோ சோசலிசம் - முதலாளித்துவத்ததிற்கு மாற்றா?

படம்
ஜனநாயகப் பாதை வழியாகவே சர்வாதிகாரம் உள்ளே நுழைகிறது. இதை தவறு என்று சொல்ல முடியாது. அந்தந்த காலகட்ட மக்கள் சர்வாதிகாரியை அவர்களாகவே வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். பின்னாளில் செய்த தவறின் விளைவை அனுபவிக்கிறார்கள். அரசும் அதன் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. இந்தியா போன்ற நாட்டில் என்ஜிஓ அரசு என்பது சற்று புதிது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்றை காங்கிரஸ் காலத்தில் வலதுசாரி ஆளுமைகள் நடத்தினர். அந்த போராட்டத்தின் வழியாக ஆம் ஆத்மி கட்சி தோன்றியது. இந்த கட்சியின் செயல்பாடு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒத்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தாலும் கூட அக்கட்சி தலைவர், தவறான குற்றச்சாட்டில் சிறைபடும்போதுகூட மக்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை, சாலையில் நின்று தாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வரை விடுவியுங்கள் என்று கோஷமிடமில்லை. அமைதியாக அரசு காரியங்கள் நடைபெறுகின்றன. இப்படிக்கூட அரசு செயல்பட முடியும் என்ற ஜனநாயக அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நாட்டில் எதற்கு போராட்டம் நடைபெறுகிறது? மக்களின், விவசாயிகளின், தொழில்துறையினரின், சிறுபான்மையினரின் கோரிக

பசுமைக்கட்சியின் எழுச்சி

படம்
ஐரோப்பாவில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜெர்மனியில் வலுவான அரசியல்கட்சியாக பசுமைக்கட்சி உள்ளது. அறுபது எழுபதுகளில் மாணவர்கள் போராட்டம், அணுசக்தி போராட்டம் ஆகியவற்றின் அடையாளமாகவே பசுமைக்கட்சியின் எழுச்சி அமைந்தது. வலதுசாரி கட்சிகளின் தாராளவாச, அணுக்க முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக, பாப்புலிச கொள்கைகளுக்கு எதிராக பசுமைக்கட்சி நிற்கிறது. இன்றுள்ள நிலையில் யாருமே சூழலைப் பற்றிய கவலையின்றி வாழ முடியாது. அரசியல்கட்சிகளும் அதை தங்களது தேர்தல் அறிக்கையில் புறக்கணிக்க முடியாது. அகிம்சை, சூழல் கவனம், பசுமைக் கொள்கைகள், தூய ஆற்றல் ஆகியவற்றை பசுமைக்கட்சி அடிப்படையாக கொண்டுள்ளது. பசுமைக் கட்சி கூட்டமைப்பில் மொத்தம் எண்பது பசுமைக் கட்சிகள் இணைந்ததுள்ளன. இவற்றின் கொள்கைகள் குறிப்பிட்ட வரையறையில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. நிலப்பரப்பு சார்ந்து பல்வேறு கொள்கைகள், லட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான கொள்கைகளைப் பார்ப்போம். சூழலைப் பாதிக்காதவாறு வாழ்க்கை அடிப்படையான ஜனநாயகத்தன்மை சமூக நீதி அகிம்சை ஆதரவு என்றால் எதிர்ப்பும் இருக்கத்தானே வேண்டும்? ஆயுத தொ

பசுமைக் கட்சியின் தொடக்கம், தேவை என்ன?

படம்
அரசியலில் சூழல் கொள்கைகளை பெரும்பாலான கட்சிகள் பேசுவதில்லை. இதற்கு காரணம், அப்படியெல்லாம் பேசினால் கட்சிக்கு நிதி, நன்கொடை கிடைக்காது. குறிப்பாக அந்நிய முதலீடு சுத்தமாக வராது. ஆனாலும் கூட உலகளவில் க்ரீன்ஸ் என்ற பசுமைக் கட்சி தனது சூழல் கருத்துகளை சொல்லி அரசில் பங்கு வகித்து தனது அதிகாரத்தை செல்வாக்க வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுக்க பசுமைக்கட்சி இயங்கி வருகிறது. இந்தியாவில் கூட பசுமைக்கட்சி உள்ளது. ஆனால், அதிகளவு பிரபலம் ஆகவில்லை. எனவே, வட இந்தியாவில் அந்த கட்சியை இப்படியொரு கட்சி உள்ளதா என்ற அளவில் மட்டும் பார்த்து வருகிறார்கள். சாதி, மதம் பார்த்து வாக்களிக்கும் பின்தங்கிய இந்தியா போன்ற நாட்டில் சூழல் கொள்கைகளை கருத்தில் கொண்டு அதற்கு வாக்களிக்க அதிக காலம் தேவை. கட்சியாக தன்னை பிரபலப்படுத்தவே பசுமைக்கட்சி இன்னும் மெனக்கெட வேண்டும். சூழல் என்று சொன்னால், பெருநிறுவனங்கள் அருகில் வரமாட்டார்கள். தேர்தல் நிதி கொடுக்கமாட்டார்கள். பொதுவாக வணிக நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைக்கும்? ஏனெனில் எந்த அளவுக்கு இயற்கை வளத்தை சுரண்ட முடியுமோ அப்படி செய்தால்தான் ஜிண்டால், டாடா, ரிலையன்ஸ் ஆக