இடுகைகள்

வல்லரசு நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழை நாடுகளில் மேற்கு நாடுகள் செய்யும் மாசுபாட்டு யுத்தம்! - பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் அபாயம்

படம்
      பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ! அமெரிக்கா , ஜப்பான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாடுகள் ஏழை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன . வல்லரசு நாடுகளான அமெரிக்கா , ஜப்பான் , ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தப்பட்ட அதிக மாசுபடுதல் கொண்ட கார்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு விற்பது அதிகரித்து வருகிறது . இதுதொடர்பான ஐ . நா அமைப்பின் சூழல் திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது . இதன்மூலம் வளர்ந்துவரும் நாடுகள் அதிக மாசுபாட்டையும் , பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும் . ஐ . நா அறிக்கைப்படி , 2015-2018 காலகட்டத்தில் 1.4 கோடி பயன்படுத்தப்பட்ட கார்கள் வல்லரசு நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன . வளர்ந்து வரும் நாடுகளுக்கும் , ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதியாகியுள்ளன . இந்த நாடுகளில் பாதுகாப்பு , மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் வலிமையாக இல்லாததால் , பழைய கார்களை எளிதாக விற்க முடிகிறது . அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , ஏழை , மத்த