இடுகைகள்

உடல் பருமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிலிட்டிரி மாமனாரை வசீகரித்து டாக்டர் பெண்ணை கல்யாணம் செய்ய குண்டு மாப்பிள்ளை செய்யும் களேபர காரியங்கள்!

படம்
          வில்லேஜிலோ விநாயகுடு கிருஷ்ணா, சரண்யா மோகன், ராவ் ரமேஷ் தெலுங்கு தான் பார்க்கும் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு சரியாக இருப்பாள் என அடம்பிடிக்கும் மிலிட்டரி அப்பா. அவரை சமாளித்து குண்டான காதலனை கணவராக ஏற்கச் செய்யும் மருத்துவராக உள்ள மகள். இந்த பாசம் எனும் கோட்டிங்கில் உள்ள மேலாதிக்க போட்டியில் யார் வென்றது, தோற்றது எந்த தரப்பு என்பதே கதை. தெலுங்கில் இதுபோல கதைகள் வருவது புதிதல்ல. மாமனாரின் ஒப்புதலைப் பெற மருமகன் பல டாஸ்க்குகளை செய்து நிரூபித்து காதலியைக் கைபிடிப்பது என்பது நிறைய படங்களில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் அமைந்திருக்கிறது. வேறுபாடு ஒன்று உண்டு. அது நாயகனின் எடை. மன்னிக்கவும். நாயகனின் குண்டான உருவம். உருவக்கேலி சார்ந்த வசனங்களே படம் நெடுக நிறைந்திருக்கிறது. பங்குச்சந்தை விவரங்களில் புத்திசாலி, நன்றாக சமைப்பார், சமயோசித புத்தி, காதலி மீது மட்டுமல்ல பிறர் மீது காட்டும் அக்கறை என கார்த்திக் பாத்திரம், காதலியின் அப்பா, அவரது குடும்பத்தினரை விடவே பலமடங்கு மேலாக உள்ளது. ஆனாலும் படத்திலுள்ள பாத்திரங்கள் அனைவருமே கார்த்திக்கின் உடல் எட...

இனிக்கிற சர்க்கரை பொய்கள் - பெருநிறுவனங்கள் எப்படி குழந்தைகளை திட்டமிட்டு கொல்கின்றன?

படம்
  சர்க்கரையை மறைக்கும் சாமர்த்திய பொய்கள்! பீடியாஸ்யூர் உணவு கிரிட்ஸோ சூப்பர்மில்க் - தாய்ப்பாலுக்கு மாற்றான உணவு பெப்சி கோ நிறுவனத்தின் முன்னணி குளிர்பான பிராண்டின் பெயர் ஸ்டிங் எனர்ஜி. இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் பானத்தை குடித்தவர் வீசும் விசிறிக் காற்று, உடல் பருமனான முதலாளி ஒருவரை அப்படியே அந்தரத்தில் தூக்கி பின்னால் தள்ளி வீழ்த்தும். அந்தளவு ஆற்றல் ஸ்டிங்கில் பொதிந்து உள்ளது என கூறுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், பானத்தில் உள்ள அதிகளவு சர்க்கரைதான். ஆனால் அதை விளம்பரத்தில் கூறினால், ஸ்டிங்கை யார் வாங்குவார்கள்? எனவே, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குகிறது என சொல்லி விற்கிறார்கள். இருநூறு மில்லி பானத்தின் விலை ரூ.20. குழந்தைகள் குடிக்க கூடாது என சிறிய எழுத்தில் பாட்டிலில் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் அதை குடிக்க தடையாக இருப்பதில்லை. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என வாங்கிக் குடித்து வருகிறார்கள். மனதிற்கு ஊக்கம், உடலுக்கு சக்தி என்பதை மக்கள் அப்படியே நம்புகிறார்கள். இதை விளம்பரங்கள் மூலம் திரும்ப திரும்பச் சொல்லி பெருநிறுவனங்கள் மக்களை ...

அமெரிக்கர்களுக்கு ஏற்படும் உடல் பருமன் பாதிப்பு!

படம்
  உடல் பருமன் நேரடியாக சுற்றி வளைக்காமல் உண்மையைச் சொல்லவேண்டுமெனில், அமெரிக்காவில் உடல் பருமன் என்பது கட்டுப்பாட்டை மீறி சென்றுகொண்டிருக்கிறது. 2017-2020 காலகட்டத்தில் உடல் பருமன் அளவு 12 சதவீதமாக அதிகரித்துள்ளது என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும்   கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் தருகிறது. வயது வந்தோருக்கு ஏற்படும் உடல் பருமன் அளவு 4.5 சதவீத அளவாக உள்ளது. வெறும் கலோரிகளை மட்டும் அடையாளம் கண்டு அவற்றை எரிப்பது எனபது உடல் எடையைக் குறைப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. உணவுமுறை, உடற்பயிற்சி என இரண்டுக்கும் இடையில் அதிக இடைவெளி இருந்தது. இதனால், உடல் எடையை ஒருவர் குறைக்க முயன்றாலும் எதிர்பார்த்த அளவில் உடனே பயன் கிடைக்கவில்லை. உடலில் மூளையுடன் தகவல்தொடர்பு கொள்ளும் ஏராளமான உயிரியல் பொருட்கள் உள்ளன. உணவுமுறை மாறி, எடை குறைப்பிற்கு ஒருவர் தயாராகும்போது அவை பல்வேறு தாறுமாறான சமிக்ஞைகளை மூளைக்கு கொடுக்கின்றன. இதனால் ஒருவரின் உடல் செயல்பாடுகள் மாறுகின்றன. எடை குறைப்பிற்கு பல்வேறு உடற்பயிற்சிகளை ஒருவர் செய்தாலும் கூட, அவை பயனில்லாமல் போவது இப்படித்தான். உடலில் கொழுப்பை பல்வ...

குப்பை உணவுகளை அடையாளப்படுத்தும் இந்திய அரசு!

படம்
  குப்பை உணவுகளுக்கு ரெட் சிக்னல்  உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் கொண்ட பொருட்களை சிவப்பு நிற லேபிளில் அடையாளப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்(FSSAI), கடைகளில் விற்கும் உணவுப்பொருட்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. உணவு குறித்த கருத்தரங்கில் புதிய உணவுப்பொருட்களுக்கான விதிகளை எஃப்எஸ்எஸ்ஏஐ ஆலோசகர் அனில் அறிவித்தார்.  விதிகள் புதிது இதன்படி, உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்கள் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படும். இவ்விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவிருக்கின்றன.  தற்போது சந்தையில், விற்கப்படும் உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இனி கூடுதலாக அவற்றில் இடம்பெற்றுள்ள பகுதிப்பொருட்களைப் பொறுத்து அவற்றின் நிறமும் மாறுபடும்.  உடல்பருமன், வேதிப்பொருட்கள் ஆகியவை கொண்ட உணவுப்பொருட்களால் மக்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கலோரிஅட்டவணை கூட உணவுப்பொருள், மக்கள் உடல்நலனுக்கு ஏற்றதா என்று அடையாளம் காண உதவவில்லை. புதிய முறை, மோசமான உணவுப்பொருட்க...

ஸ்நாக்ஸ்கள்தான் எதிர்கால உணவா? மாண்டெல்ஸ் ஆய்வு முடிவுகள் வெளியீடு

ஸ்நாக்ஸ் சாப்பிடு சோற்றை கைவிடு இப்படி முடிவெடுத்தவர்கள் வேறு யாருமில்லை உலகளவில் இந்தியர்கள் இச்சாதனையைச் செய்திருக்கிறார்கள். உணவு நிறுவனமான மாண்டெல்ஸ் செய்த ஆய்வில் இந்தியர்கள் நொறுக்குத் தீனிக்கு முதன்மை இடம் கொடுத்து சோற்றையும், சப்பாத்தியையும் தள்ளி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேற்சொன்ன ஆய்வு பன்னிரண்டு நாடுகளிலுள்ள ஆறாயிரம் பேர்களிடம் நடத்தப்பட்டது. அதில் 75 சதவீத இந்தியர்கள் அதுதாங்க எங்க வாழ்க்கை எதிர்கால உணவு கூட என்று சத்தியம் செய்திருக்கிறார்கள். 53 சதவீத ஆட்கள் உலகளவில் இதே சத்தியத்தை சிலுவை வைத்து சொல்லியிருக்கிறார்கள். இந்தியர்கள் நாள் முழுக்க சிறிது சிறிதாக ஏதேனும் கொறித்துக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக சாப்பாட்டுக்கு முன்னதாக அவர்கள் ஏதேனும் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறார்கள் என தங்கள் கம்பெனிக்கான பிடிமானத்தை மாண்டெல்ஸ் கண்டுபிடித்துவிட்டது. தற்போது உலகளவில் உப்பு பிஸ்கெட்டுகளுக்கான சந்தை 60 ஆயிரம் கோடியாக உள்ளது. விரையில் இந்த எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. நன்றி - இடி

தாய்ப்பால் அருந்தினால் உடல் பருமனை தடுக்கலாமா?

படம்
தாய்ப்பால் கொடுப்பது உடல் பருமனைத் தடுக்குமா? நிச்சயம் தடுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். போர்ச்சுக்கல் தேசிய சுகாதார நிறுவனமும், உலக சுகாதார நிறுவனமும் ஒன்று சேர்ந்து செய்த ஆராய்ச்சியில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் அருந்தாத 22 சதவீத குழந்தைகள் உடல் பருமன் பிரச்னைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஒபேசிட்டி ஃபேக்ட்ஸ் எனும் இதழில் செய்தி வெளிவந்துள்ளது. 22 நாடுகளிலுள்ள 30 ஆயிரம் சிறுவர்களை சோதித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பதினாறு ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்கும். தாய்ப்பால் கொடுப்பது இன்றைய பொருளாதார சூழலில் தவிர்க்கப்பட்டு வருகிறது. காரணம், பெண்களும் வேலைக்கு செல்லும் சூழல்தான். குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறுமாதம் தாய்ப்பால் தருவது அவசியம். இந்த காலகட்டத்தின் அளவு குறைந்தால் அவர்கள் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் மாற்றாக பசுவின் பாலை அருந்துகிறார்கள். இதிலுள்ள புரதம் உடலின் கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும் இன்சுலின் சுரப்பை மறைமுகமாக தூண்டுகிறது. தாய்ப்பால் அருந்தாத குழந்த...