இடுகைகள்

இந லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசத்தும் பாப்ஸ்டார் அமித் திரிவேதி!

படம்
  யூட்யூபில் எப்போது உலாவி வருபவர்கள் அமித் திரிவேதியின் ஏடி ஆசாத் சேனலை பார்க்காமல் இருக்க முடியாது. இதில் பெரும்பாலும் அனைத்து வீடியோக்களிலும் அமித் பாடி ஆடுகிறார். நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்கிறார்.  சினிமா பாடல்களின் தன்மை இல்லாமலேயே யூட்யூபில் இருபது பாடல்களை வெளியிட்டு விட்டார். பெரும்பாலும் வீடியோக்களில் வெட்கப்படும் அமித், இப்போது தைரியமாக பாடுவதோடு  குழுவாக நடனக் கலைஞர்களோடு சேர்ந்து ஆடுகிறார். எப்படி இந்த மாற்றம் என்று கேட்டோம். முதலில் எனக்கு இசையை உருவாக்கினால் போதும் என்று தோன்றியது. ஆனால் இப்போது இசையமைப்பாளர் என்பவர், தனக்கென தனி சேனல், இசை அமைப்பது, வீடியோக்கள், நேர்காணல் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுவது முக்கியம். இன்றைய காலத்தில் இது நமக்கு அழுத்தம் கொடுக்கிறதாக மாறியுள்ளது என்கிறார்.  2010 முதல் 2015 ஆண்டு வரையில் ஏராளமான ஆல்பங்களை ஹிட் கொடுத்தவர் அமித் திரிவேதி. தேவ் டி, பாம்பே வெல்வெட், உடான் , இஷ்க்ஜாடே, குயின் ஆகிய படங்களின் பாடல்கள் புகழ்பெற்றவை. தற்போதும் இந்தி படங்களுக்கும் தென்னிந்திய படங்களுக்குமான இசையையும் வழங்குகிறார். தெலுங்கில் சைரா நரசிம்மரெட

கோவாக்ஸின் தயாரித்த உள்நாட்டு சாதனை நிறுவனம்! - பாரத் பயோடெக்கின் கதை

படம்
  கிருஷ்ணா எல்லா உள்நாட்டில் தடுப்பூசியைத் தயாரித்த சாதனை நிறுவனம்!  தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தவரான கிருஷ்ணா எல்லா, தனது பாரத்பயோடெக் நிறுவனம் மூலம் கோவிட்-19க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளார்.  கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை எட்டுமாத போராட்டங்களுக்குப் பிறகு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது.  இந்நிறுவனத்தின் கோவாக்ஸின் என்ற தடுப்பூசி மருந்தை அவசரநிலை காரணமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 1996இல் தொடங்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தில் தற்போது வரை 1,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 140 மருந்துகளின் காப்புரிமைகளை வைத்துள்ள கிருஷ்ணா எல்லா, 120 நாடுகளுக்கு நூறு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்துவருகிறார்.  விவசாய அறிவியலில் பட்டம் பெற்ற கிருஷ்ணா, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சில ஆண்டுகள், சவுத் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளார். பாரத் பயோடெக்கின் ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்தை, உலக நாடுகள் பலவும் வாங்கிப் பயன