இடுகைகள்

படக்கதை- ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேக் இன் இந்தியா, மேட் இன் அல்வா!

படம்
போணியாகாத வாழை! ஒண்டிப்பூர் சின்னத்தம்பி வீட்டுத்தோட்டத்தில் ஆசையாக வாழைக்கன்றை நட்டு வளர்த்தார். பக்கத்து தோட்டக்காரரின் நீர், உரம் என பாகுபாடின்றி பயன்படுத்தி வாழையை வாடிவிடாமல் வளர்த்தார். ஆனால் பழம் கனிந்து வாழைத்தாரை வெட்டினார். பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் ரேஷன்கார்டில் தன் பெயருக்கு அடுத்தபடியாக உள்ள மனைவி, குழந்தைகளுக்கும் கொடுத்தாலும் யாரும் வாழைப்பழத்தை சாப்பிட விரும்பவில்லை. அதிர்ச்சியாகி பழத்தை என்ன செய்வது என திணறிப்போனார் சின்னத்தம்பி. வியாபாரிகள் பழத்தை வேண்டாம் என்றால் கூட சின்னத்தம்பி ஒத்துக்கொள்வார். புளிச்ச புண்ணாக்கு நீரைக் குடித்துவந்த தன் மாடுகள் கூட பழத்தை வேண்டாம் என்று புறக்கணித்து ஓடியதை சின்னத்தம்பியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்ன காரணம்? ஏனென்றால் பலரது வீட்டிலும் வாழை ஏராளமாக விளைந்திருந்ததுதான் காரணம். வீட்டிலேயே கொள்ளையாய் வாழைப்பழம் இருக்கு்ம்போது அதனை பக்கத்து வீட்டில் ஏன் வாங்கி சாப்பிடவேண்டும்? உடனே வாழ்நாளில் முதல்முறையாக தீவிரமாய் யோசனையில் ஆழ்ந்தார். தெளிவு பெற்றவராக பின் தன் தோட்டத்திற...