இடுகைகள்

சென்னை சீக்ரெட்ஸ்- பிகே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிகே எழுதும் சென்னை சீக்ரெட்ஸ் - நிறைவுப்பகுதி

படம்
சென்னை சீக்ரெட்ஸ்!- பிகே 1792 ஆம் ஆண்டு ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உள்ளாட்சி சட்டம் வழிகாட்ட, மேயரும் , நகர்மன்ற உறுப்பினர்களும் இல்லாமலேயே மெட்ராஸ் நகராட்சி சிறப்பாக செயல்படத் தொடங்கியது. இதன்படி நகரங்களில் , ‘ அமைதி நடுவர்கள் ’ நியமிக்கப்பட்டு தெருக்களின் பராமரிப்பு பற்றி முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இந்த அமைதி நடுவர்களுக்கு மதுபானங்களின் விற்பனை மீது வரி விதித்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இ வர்கள் நகரின் நீதி நிர்வாக விஷயங்களையும் கவனித்து வந்தனர்.   1856 ம் ஆண்டில் அமைதிக் காவலர் முறை விலக்கப்பட்டு மூன்று ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். நகரத்தைப் பராமரிக்கவும் , அதற்கு சில வரிகள் வசூலிக்கவும் ஆணையர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ‘‘ நிலவரி அதிகமாக விதித்துக் கொள்ள சட்டம் இயற்றப்பட்டதால் வீட்டு வரி நூற்றுக்கு 5 சதவீதம் என்பதிலிருந்து ஏழரை சத விகி தமாக உயர்ந்தது. வண்டிகளுக்கும் , மாடுகளுக்கும் வரி போட்டது. 1863 ல் வர்த்தக வரி , உத்தியோக வரி , சுங்கவரி முதலியன போட்டுக் கொள்ளவும் சட்டம் இடம் தந்தது. அது வரையில் நகராட

சென்னை சீக்ரெட்ஸ்! - மேயர் பதவி நீக்கப்பட்டது!

படம்
சென்னை சீக்ரெட்ஸ் - பிகே நீக்கப்பட்ட மேயர் பதவி ! மெட்ராஸின் முதல் மேயராக இருந்த நத்தானியேல் ஹிக்கின்சனே எலிஹு யேலுக்கு பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் , நகரின் சுத்தத்திற்கும் , பாதுகாப்புக்கும் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பின்னர் , 1721ல் நகராட்சி மேயர் , உறுப்பினர் போன்றவர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டன. பின்னர் 1726ம் ஆண்டு நடைபெற்ற மெட்ராஸ் நகராட்சியின் மறுசீரமைப் பினால் நகராட்சிக்கும் , மேயரின் நீதிமன்றத்திற்கும் கூடுதல் அதிகாரம் கிடைத்தது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை நிர்வாக ம் சாசனம் மூலம் உறுதிப்படுத்திய இ வ்வ திகாரத்தை தனது புதிய சாசனம் மூலமும் உறுதிபடுத்தினார் முதலாம் ஜார்ஜ் மன்னர். 1727ஆ ம் ஆண்டு புதிய மேயரும் , உறுப்பினர்களும் பெத்தநாயக்கன்பேட்டையில் இருந்த கம்பெனியின் தோட்ட இல்லத்தில் ப தவியேற்று கவர்ன ரின் தடபுடல் விருந்தில் பங்கேற்று மகிழ்ந்தனர். பின்னர் மன்னர் வெளியிட்ட சாசனப் பட்டியல் , ‘ மெட்ராஸ் பட்டிணத்தின் முதல் நவீன ேமயராக ரிச்சர்ட் ஹிக்கின்சன் நியமிக்கப்பட்டுள்ளார் ’ என அறிவித்

சென்னை சீக்ரெட்ஸ்! நானா, நீயா?

படம்
சென்னை சீக்ரெட்ஸ்- 14- அதிகாரச்சண்டைகளின் தொடக்கம்! நகர்மன்றத் திட்டத்தை முன்மொழிந்த கிழக்கிந்திய கம்பெனியின் போர்டு தலைவர் சர் ஜோசையா சைல்ட் , " நகர்மன்ற அமைப்பு இந்தியர்களும் , ஆங்கிலேயர்களும் கலந்ததாக இருக்க வலியுறுத்தி கம்பெனிக்கு கடிதம் எழுதினார். மேயர் , நகர்மன்ற உறுப்பினர் , வழக்கு விசாரணை நடுவர் , கிளார்க் போன்ற பதவிக ளுக்கு அ திகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதில் , ‘‘ இந்தியர்களுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், நகர்மன்றம் ஆங்கிலேயரின் அதிகாரத்தின் கீழ்தான் செயல்படும் ’’ என்ற சைல்டின் வாக்குறுதி கம்பெனிக்கு தெம்பு தந்தது. சைல்டின் சீர்திருத்தத்தால் நகர்மன்றக் கட்டடம் , சிறைக் கூடம் , சிறைக்காவலர்கள் நியமனம், உள்ளூர் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை கற்பிக்கும் பள்ளிக ள் தொடங்க வரிகள் வசூலிக்கலாம் என்ற சூழல் உருவானது. மாநகராட்சி உறுப்பினர்கள் 12 பேரில் ஆங்கிேலயர்கள் மூன்றுக்கு மிகாமலும், ஏழு உறுப்பினர்கள் முகலாயர்களாகவும் , இந்துகளுக்காகவும் கலந்து இரு ப்பது விதியானது. ஆங்கிலத்தில் பராமரிக்கப்பட்ட நகர்மன்றத்தின் பதிவேடுக ளை பராமரிக்க

சென்னை சீக்ரெட்ஸ்! - நகராட்சி மேயர் பதவி

படம்
சென்னை சீக்ரெட்ஸ்!-பிகே     நகராட்சி மேயர்! மெட்ராஸில் 1678ம் ஆண்டு முதல் வீட்டு வரி அமுலுக்கு வந்தது. தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் 75 வீடுகளும் , வெள்ளையர் குடியேறியிருந்த பாகத்தில் 115 வீடுகளும் இருப்பதாகக் கணக்கிட்டு , வீடு ஒன்றுக்குக் காலணா முதல் ஒரு பணம் வரை வரி விதிக்க முடிவானது. இதை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்ய தொடங்கினர். முதலில் பயந்த ஆட்சியாளர்கள் அத்திட்டத்தை சிறிது காலம் கழித்து நடைமுறை ப்படுத்தினர். . அங்கீகாரம் பெற்ற மதுக்கடைக ளுக்கான ஓராண்டுக்கான உரிமம் 205 பகோடாக்கள் எனக் கட்டணம் வசூலித்தனர். ஆனாலும் , நகராண்மைச் செலவுகளுக்கு வரி ப் பணம் போதவில்லை. மக்கள்தொகையும் உயர , லண்டனிலுள்ள தலைமையகத்துக்கு சென்னை ஆளுநர் கடிதம் எழுதினார். பதிலுக்கு கம்பெனியின் இயக்குநர்கள் , ‘‘ வரி சம்பாத்தியத்தை கைவிடக்கூடாது’’ என அறிவுறுத்தினர். உடனே கம்பெனியின் மேலாளர்கள் மெட்ராஸ்பட்டிணம் ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென முடிவெடுத்தனர். 1687ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் நாள் மெட்ராஸ் நகருக்கான மேயரும் , நகர்மன்ற உறுப்பினர்களையும் உருவாக்க ஆளுநரும் , க