இடுகைகள்

ஆணவக்கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கௌரவமற்ற படுகொலைகள்

படம்
கௌரவமற்ற படுகொலைகள் - கர்நாடகத்தில் அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் கர்நாடகம் இந்திய மாநிலங்களில் முதலாக வெறுப்பு பேச்சுக்களை தடுக்கும் விதமாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதை வலதுசாரி பார்ப்பன பாசிச கட்சிக்ககு எதிரான நகர்வு என்று கூறலாம். எளிதாக மனித கீழ்மைகளை தட்டி எழுப்பி வாக்குகளாக மாற்றும் மதவாத கட்சிக்கு இப்படியான சட்டங்கள் பெரிய தடையல்ல. ஏனெனில் அவர்கள் எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை. அவர்களுடைய ஒரே சட்டம் முஸ்லீம், கிறித்தவர்கள், பட்டியல் இனத்தவர்கள் ஆகியோரை அடித்து உதைத்து உரிமைகளைப் பறித்து சொத்துகளை அபகரிப்பதுதான். அப்படித்தான் ஆரிய சம்பத்து இதுவரை செயல்பட்டிருக்கிறது.  2022-2023 ஆம் ஆண்டு வரை கர்நாடகத்தில் 13 ஆணவக்கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பனிரெண்டு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆம் நீங்கள் நினைத்தது சரிதான். இறந்தவர்கள் அனைவருமே மேல்சாதியைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பெண்கள். கொலை செய்தவர்கள் அந்நியர்களல்ல. அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  அடிப்படையில் மக்கள் பெண்களை சொத்தாக கருதுகிறார்கள். அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்தால், தங்களுக்கு ...

ஆணக்கொலைகளால் வணங்கப்படும் நிலைக்கு உயர்ந்த நாட்டார் தெய்வங்கள்- ஆ.கொ.சா. பெ.கொ.அ

படம்
  ஆணவக்கொலைச் சாமிகளும், பெருமித கொலை அம்மன்களும் ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் மின்னூல்   திருநெல்வேலி, தூத்துக்கடி, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள நாட்டார் தெய்வங்களின் பூர்விக வரலாறு பற்றி இந்த ஆய்வு நூல் பேசுகிறது. நூலின் தொடக்கத்திலேயே நாட்டார் தெய்வங்கள் எப்படி பெருந்தெய்வ வழிபாட்டின் ஓரங்கமாக மாற்றப்படுகிறது என்பதை விளக்கி இந்துத்துவ சக்திகள் செயல்படுவதை ஆசிரியர் விளக்கி விடுகிறார். ஆகவே, நாட்டார் தெய்வங்கள் என்பது வேறு. அதன் வழிபாட்டு முறைகளே வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதில் உயிர்ப்பலி, கறிச்சோற்று படையல், கொடை, முளைப்பாரி ஆகியவை உண்டு. பெருந்தெய்வ வழிபாட்டில் இவையெல்லாம் இருக்காது. நாட்டார் தெய்வங்கள் முன்னெப்போதோ நம் கூடவே வாழ்ந்து வந்தவர்கள்தான். அவர்கள் சக மனிதர்களால் சாதி பெருமிதம், பொறாமை, காதல், சொத்து, பாலியல் வன்முறை, குடும்ப கௌரவம் ஆகியவற்றுக்காக பலியானவர்கள்தான். இவர்கள் மீது பின்னாளில் ஏற்படும் குற்றவுணர்ச்சி காரணத்தால் இறந்து போனவர்களை கொன்ற குடும்பத்தினர், கொல்லப்பட்டவரின் உறவினர்கள் சுதை சிற்பமாக வடித்து வழிபடத் தொடங்கு...

ஆணவக்கொலையால் மீளமுடியாத கற்பனையில் சிக்கும் மனைவியை மீட்கும் கணவன்! அட்ரங்கி ரே - ஆனந்த் எல் ராய்

படம்
  அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் அட்ரங்கி ரே - கலாட்டா கல்யாணம் ஆனந்த் எல் ராய் ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்னி  கட்டாய கல்யாணம் செய்து வைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த விசு, தனது மனைவியை மெல்ல விரும்பத் தொடங்குகிறான். ஆனால் அவள் வேறு ஒருவரை விரும்புகிறாள். அதுயார், அந்த காதலை நிறைவேற்ற விசு உதவினானா என்பதுதான் படத்தின் கதை.  பீகார் பையன் வேண்டாம் வேறு யாராவது ஒரு பையனை பிடித்து வைத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடலாம் என குடும்பமே முடிவு செய்து ரிங்குவை தயார் செய்கிறார்கள். உணவில் மயக்க மருந்து கொடுத்து அவளை கல்யாணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளையாக மருத்துவ மாணவர் மதுசூதனை பார்க்கிறார்கள். ஆனால் இருட்டில் தவறுதலாக விசு(தனுஷ்) பிடித்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்விக்கிறார்கள். மணப்பெண்ணுக்கு மயக்க மருந்து என்றால் மாப்பிள்ளைக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கிறார்கள். இதனால அவர் சிரித்துக்கொண்டே வேறுவழியின்றி கல்யாணம் செய்கிறார்.  இன்னொரு விஷயம், மருத்துவ மாணவராக விசு தனது துறைத் தலைவரின் மகளை கல்யாணம் செய்யும் நிலையில் இருக்கிறார். இதற்கான நிச்சயம் ஒருவாரத்தில...