இடுகைகள்

கனடா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்து, தமிழ் ஆகிய கலாசாரங்களின் அழகிய பக்கங்களைக் காட்டுகிறேன் - சுந்தர் வி, தனிக்குரல் கலைஞர்

படம்
  சுந்தர் வி தனிக்குரல் கலைஞர் சுந்தர் வி கனடாவின் டொரண்டோ, லண்டன் என அலைந்து திரிந்து மக்களை தனது ஜோக்குகளால் மகிழ்வித்து வருபவர். வி.சுந்தர். சென்னையில் வந்து நிகழ்ச்சிகள் செய்யும்போது அவர் தவறாமல் பார்வையாளர்களிடம் கேட்கும் கேள்வி, என் தமிழ் விளங்குதா என்பதான். தொண்ணூறுகள், இரண்டாயிரத்தின் பாடல்களை அடிப்படையாக கொண்ட நகைச்சுவையை தனிக்குரல் நிகழ்ச்சியின் மையமாக கொண்டுள்ளார். இவர் பால்புதுமையினராவார். கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்துள்ளார் வி.சுந்தர். மும்பை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவரிடம் பேசினோம். இந்தியாவில் உங்களுடைய தனிக்குரல் நிகழ்ச்சி எப்படி செல்கிறது? நான் வேறுவகையான சூழல்களில் வளர்ந்து வந்தவன்.. ஆனால் தமிழ் இனக்குழுக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளை நான் நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறேன். அந்த ஒற்றுமைகள்தான் எங்களை ஒன்றாக இணைக்கிறது. இதனால்தான் கனடாவில் இருந்து வந்து பால்புதுமையினர்களை ஒன்றாக இணைத்துப் பார்த்து கருத்துகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் நிகழ்ச்சி செய்வது, அதற்கு வரும் எதிர்வினைகளை

கனடாவில் சூழல் விருது பெற்ற இரண்டு சூழலியலாளர்கள்!

படம்
  ஏமி லின் ஹெய்ன் விருது பெற்ற சூழலியலாளர்கள்! மேரி அசெல்ஸ்டின் ஸ்கொம்பெர்க், கனடா 35 ஆண்டுகளாக கிராம மக்களின் இனக்குழு சார்ந்து செயல்பட்டுவருகிறார். டஃப்ரின் மார்ஸ் அமைப்பைத் தோற்றுவித்த உறுப்பினர்கள் ஒருவர். இயற்கைச்சூழலைக் காப்பதற்கான பல்வேறு பிரசாரங்கள், செயல்பாடுகளை செய்து வருகிறார். இவருக்கு, ஸ்கோம்பெர்க் கிராமத்திலுள்ள பள்ளிக்குழந்தைகள் வைத்த செல்லப்பெயர், தவளை அத்தை. யார்க் பல்கலைக்கழகத்தில் புவியியல் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேரி அசெல்ஸ்டின். நடப்பு ஆண்டில் மேரி  செய்த பல்வேறு சூழல் பணிகளை பாராட்டி,  கனடா காட்டுயிர் கூட்டமைப்பு (CWF) சூழல் பணிகளுக்காக ரோலண்ட் மிச்னர் கன்சர்வேஷன் விருது (Roland Michner Conservation Award) வழங்கியுள்ளது.  ”இயற்கை மீதான நேசம் பற்றிய சிந்தனைகளை நான் பிறருக்கு பகிர்ந்து வருகிறேன். இயற்கை  வழங்கிய  ஆச்சரியமான அனுபவங்களே அதைப் பாதுகாக்கும் ஊக்கத்தை பிறருக்கு தரத்தூண்டியது ” ஏமி லின் ஹெய்ன் கல்காரி, கனடா தாவரங்களை ஓவியங்களாக வரையும் ஓவியக்கலைஞர். வரைவதற்கான இங்கையும் இயற்கையான பொருட்களிலிருந்து  தயாரித்து பயன்படுத்துகிறார். எ பின்ட் சைஸ்டு இ

உலகம் முதல் உள்ளூர் பிரச்னை வரை உட்கார்ந்து பேசுவோமா? - பிரேக் தி டிவைட் அமைப்பு பற்றி தெரிஞ்சுக்கோங்க

படம்
  அபய்சிங் சாச்சல் தனது சகோதரருடன்... உலக பிரச்னைகளை உட்கார்ந்து பேசும் பள்ளி மாணவர்கள்!  உலகில் ஏற்பட்டு வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டு. இதற்கு பிரச்னையை எதிர்கொள்ளும் தரப்புகள் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும். இந்த வகையில் உலக நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்கள், சமூகப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க உருவானதுதான் பிரேக் தி டிவைட் என்ற நிகழ்ச்சி. இதனை பிரேக் தி டிவைட் (Break the divide) என்ற தன்னார்வ அமைப்பு நடத்துகிறது. 2016ஆம் ஆண்டு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அபய்சிங் சாச்சல் என்ற பள்ளி மாணவர், இந்த அமைப்பைத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அபய்யின் சகோதரர் சுக்மீத், ஆர்க்டிக் பகுதிக்கு சென்றிருந்தார். அபய்சிங், தனது சகோதரர் சுக்மீத்துடன் வீடியோ அழைப்பு வழியாக பேசத் தொடங்கினார். இருவரும் தொடக்கத்தில் டிவி நிகழ்ச்சி, திரைப்படம் என்று தான் பேசினார்கள். பிறகு மெல்ல சமூகப் பிரச்னைகளைத் தீவிரமாகப் பேசி விவாதிக்கத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், படித்த சீகுவாம் பள்ளி மாணவர்களும் விவாதத்தில் இணைந்தனர். அவர்கள் ப

ஆதவற்றோரை கலைப்பாதையில் திருப்பும் கனடா நாட்டு பெண்மணி! - பைலிஸ் நோவக்

படம்
  பைலிஸ் நோவக் ஆதரவற்ற இளைஞர்களுக்கு கலைக்கல்வி இலவசம்!  1984ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பைலிஸ் நோவக், வாலஸ்பர்க்கிலிருந்து டொரன்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அவருக்கு திரைப்பட நடிகராகும் ஆசை இருந்தது. ஆனால் நாடக மேடை அனுபவம் இல்லாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீடற்ற சிறுவர்கள் தங்கியிருக்கும் மையத்தில் தன்னார்வலராக பணிபுரியத் தொடங்கினார். அங்குள்ள சிறுவர்களுக்கு,  கலைத்திறன் பயிற்சிகளை வழங்கத் தொடங்கினார். இதுவே இன்று அவரது முக்கிய அடையாளமாகும்.  1996ஆம் ஆண்டு நோவக்கும், நாடக கலைஞரான சூ கோஹென் ஆகிய இருவரும் இணைந்து ஸ்கெட்ச் வொர்க்கிங் ஆர்ட்ஸ் (Sketch working arts) என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பு வீடற்ற சிறுவர்களுக்கு (16-29 வயது) கலைத்திறன் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.  ”கிரியேட்டிவிட்டியான பயிற்சிகள், வீடற்ற சிறுவர்களுக்கு உலகில் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. கருத்தை சுதந்திரமாக கூற உதவும் கலைகள் தான் என்னை இயக்குகின்றன” என்றார் பைலிஸ் நோவக். இவர், பெருந்தொற்று காலத்திலும் ஆன்லைனில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கலைப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.  Picture this -Phyll

கனடாவில் பன்மைத்தன்மையைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் அமைப்பு!

படம்
  பாரம்பரிய விதைகளைக் காக்கும் விவசாயிகளின் குழு!  நூற்றாண்டுகளுக்கு முன்னர், தனித்துவமான பழங்கள், காய்கறிகளை எளிதாக பெறமுடியும்.  அன்று காய்கறி, பயிர் விதைகளை எளிதாக விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட முடியும். ஆனால் இன்று தொழில்துறை வேகமாக முன்னேறியுள்ளது. பணப்பயிர்களை அதிகம் விளைவிக்கும்  நிலையில், பாரம்பரிய விதைகளை காண்பது குறைந்துவிட்டது. உலகெங்கிலும் சிலர் பாரம்பரிய விதைகளைக் காக்க தங்களை அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.  வட அமெரிக்காவில் உள்ள 90 சதவீத பழங்கள், காய்கறிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன. உலகம் முழுக்க  75 சதவீத பயிர்களில் பன்மைத்தன்மை அழிந்துவிட்டது அறிவியல் உண்மை. விதைகளை காக்கும் பணியில்  இயற்கை பேரிடர்கள், பூச்சிகளின் தாக்குதல் என சில சவால்கள் உள்ளன. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் ஆகிய நகரங்களில் 1980களில் விவசாயிகள் ஒன்றுபட்டனர். பாரம்பரிய விதைகளை காக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.  இச்செயல்பாட்டில், தொடக்கத்தில் நூறு விவசாயிகள் பங்கேற்றனர்.  அக்காலகட்டத்தில் பெரு விவசாய நிறுவனங்கள், உள்நாட்டு விதை நிறுவனங்களை கையகப்படுத்தி வந்தன. அதன்மூலம், உள்நாட்டில் அதிக வில