ஆதவற்றோரை கலைப்பாதையில் திருப்பும் கனடா நாட்டு பெண்மணி! - பைலிஸ் நோவக்

 


பைலிஸ் நோவக்






ஆதரவற்ற இளைஞர்களுக்கு கலைக்கல்வி இலவசம்! 


1984ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பைலிஸ் நோவக், வாலஸ்பர்க்கிலிருந்து டொரன்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அவருக்கு திரைப்பட நடிகராகும் ஆசை இருந்தது. ஆனால் நாடக மேடை அனுபவம் இல்லாததால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீடற்ற சிறுவர்கள் தங்கியிருக்கும் மையத்தில் தன்னார்வலராக பணிபுரியத் தொடங்கினார். அங்குள்ள சிறுவர்களுக்கு,  கலைத்திறன் பயிற்சிகளை வழங்கத் தொடங்கினார். இதுவே இன்று அவரது முக்கிய அடையாளமாகும். 

1996ஆம் ஆண்டு நோவக்கும், நாடக கலைஞரான சூ கோஹென் ஆகிய இருவரும் இணைந்து ஸ்கெட்ச் வொர்க்கிங் ஆர்ட்ஸ் (Sketch working arts) என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பு வீடற்ற சிறுவர்களுக்கு (16-29 வயது) கலைத்திறன் பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. 

”கிரியேட்டிவிட்டியான பயிற்சிகள், வீடற்ற சிறுவர்களுக்கு உலகில் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. கருத்தை சுதந்திரமாக கூற உதவும் கலைகள் தான் என்னை இயக்குகின்றன” என்றார் பைலிஸ் நோவக். இவர், பெருந்தொற்று காலத்திலும் ஆன்லைனில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கலைப் பயிற்சிகளை வழங்கியுள்ளார். 


Picture this -Phyllis novak (ali ahmad) 

reader digest canada may 2022 

https://novellamag.com/on-our-radar-phyllis-novak-founder-of-sketch/

https://www.sketch.ca/programs/special-projects/making-with-place/

கருத்துகள்