மனிதனின் நல்லியல்புகளை மறுக்கும் உலகம்! - லியோடால்ஸ்டாயின் ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு
லியோ டால்ஸ்டாய் கதைகள் -
மூன்று கேள்விகள், ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு
ரேவதி கேசவமணி
இதில், மூன்று கேள்விகள் என்பது குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் போன்றது. ஆனால் எழுப்பும் கேள்வியும் அதன் தாக்கமும் அபாரமானது. ஒரு விஷயத்தை செய்வதற்கான சரியான நேரம், அதை அடையாளம் காண்பது எப்படி, சரியான மனிதனுக்கு உதவி செய்வது எப்படி என்பதை மன்னர் அடையாளம் காண்பதுதான் கதை.
நூலின் பக்கம் மொத்தம் 25 தான். மன்னர் பலரிடமும் கேள்விகளைக் கேட்கிறார். ஆனால் இறுதியில் அவருக்கான விடை எங்கு யாரிடம் கேட்கிறது என்பதே முக்கியமான இறுதிப்பகுதி.
நாம் எப்போதுமே பல்வேறு விஷயங்களை யோசிக்கிறோம். ஆனால் இதனால் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். இதைப்பற்றி துறவி தனது செயல்பாட்டின் வழியாக மன்னனுக்கு சொல்லித் தருகிறார்.
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு, ஒருவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே வந்து வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கூறுகிறது.
நல்ல செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவரின் வாழ்க்கையும் அவரை விட கீழான நிலையில் உள்ளவர்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து கதை நகர்கிறது.
இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகள், சிலரின் மோசமான குணத்தை தட்டிக்கேட்க முடியாத ஒருவரின் இயலாமை என பல்வேறு விஷயங்களை ஒருவரின் மனதைத் தாக்க அவர் என்ன ஆனார் என்பதையே இந்த சிறு நாவல் கூறுகிறது. உண்மையில் பைத்தியம் என்பது பகடியான முறையில் கூறப்படுகிறது. பிறரின் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளைப் பார்த்து அதை தன்னுடைய வலியாக உணரும் மெல்லியல்பு கொண்டவராகவே கதை நாயகன் இருக்கிறார்.
குழந்தைகள் மீதான வன்முறை, பொருளாதார அழுத்தம் திணிக்கும் குடும்பம், பொருளாதாரம் சேர்க்கும் வேகத்தில் ஒருவர் இழக்கும் நல்லியல்புகள் என பலதையும் சிறு நாவல் அழகாக கூறிச்செல்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக