வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! - ரோக்ஸி மேத்யூ கோல்

 










ரோக்ஸி மேத்யூ கோல், ஜப்பானில் கடல் மற்றும் வானிலை இயக்கம் பற்றிய முனைவர் படிப்பை படித்தவர். தற்போது, இந்திய வெப்பமண்டல வானியல் கழகத்தில் சூழல் அறிவியலாளராக பணியாற்றி வருகிறார். புயல், வெப்பஅலை, கடல் சூழல் பற்றி ஆய்வுகளை செய்துவருகிறார். 

வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதே?

உலகளவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வேகம் குறைவாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் செயல்பாடுகளை உலகளவிலும், உள்ளூர் அளவிலும் சமச்சீராக செய்வது அவசியம். மக்களின் இனக்குழு மற்றும் கிராம பஞ்சாயத்துகள் காலநிலை மாற்ற மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பதோடு, அதனை செயல்படுத்தவும் முன் வரவேண்டும். 

இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிகரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது?

ஐ.நாவின் காலநிலை கௌன்சில்(IPCC), இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்பமடைந்து வருவதைக் கூறியிருக்கிறது. கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, இந்தியா முழுக்க பெய்த 3 மடங்கு அதீத மழைப்பொழிவு, புயல்களே முக்கியக் காரணம். நாம், கார்பன் வெளியீட்டை வேகமாக குறைக்காதபோது, தெற்காசியாவில் அதிக மக்கள் பாதிக்கப்படும் நாடாக இந்தியாவே இருக்கும். 

பயிர் விளைச்சல் பற்றி விவசாயிகள் புகார்களை சொல்லி வருகிறார்கள். நாம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாரா?

வானிலை முன்னறிப்பு செயல்பாடும், அபாயப்பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதும்  இந்தியாவில் பயன்தருகிறது. ஆனால் ஆண்டுதோறும் இதைப் பின்பற்ற முடியாது. இதன் மூலம் மக்களைக் காப்பாற்றினாலும், அவர்களின் வீடுகளைக் காப்பாற்ற முடியவில்லை. 


Future climate projections must determine our actions

https://www.newindianexpress.com/nation/2022/may/17/future-climate-projections-must-determine-our-actions
-2454497.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்