இயற்கையுடனான மனிதர்களின் தொடர்பு வரலாற்று ரீதியானது! - கிரெச்சன் காரா டெய்லி

 













நேர்காணல் 

கிரெச்சன் காரா டெய்லி (Gretchen cara daily)

சூழலியல் அறிவியலாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

நீங்கள் செய்துவரும் நேச்சுரல் கேபிடல் புராஜெக்ட் பற்றி கூறுங்கள்.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகளை வெளிச்சமிட்டு காட்டுவதுதான் எனது திட்ட நோக்கம். நம் அனைவருக்குள்ளும் தனித்துவமான இயற்கைத்தொடர்பு இருந்தாலும் அதை மறைந்திருக்கிறது. எனவே, நாம் மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை கைகளால் தொடுவதற்கான உந்துதல் கொண்டுள்ளோம். இப்படி தொடுவது மனிதர்களின் உடல், மனம் இரண்டிற்கும் பயன்களைத் தருகிறது. நமக்கு பயன்தரும் இயற்கையை அறிந்துகொள்ள உதவும் கொள்கை, திட்டம், முதலீடு தேவைப்படுகிறது. 

இயற்கை அனுபவம் மனிதர்களின் அறிவாற்றலை மேம்படுத்துகிறதா?

இன்று ஆராய்ச்சி செய்யப்படும் முக்கியமான துறை இதுதான். அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே சோதனை ஒன்று செய்யப்பட்டது. இதில், இரு வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், இயற்கை காட்சிகளை பார்க்கும்படியும், மற்றவர்களுக்கு அந்த வசதி இல்லாமலும் வகுப்புகளை அமைத்தனர். இறுதியில், இயற்கை காட்சிகளை பார்த்த மாணவர்கள் கற்பதில் முன்னேற்றமும், மன அழுத்தமும் குறைந்திருந்தது தெரிய வந்தது.  

இயற்கைக்கும் மனிதர்களுக்குமான இணைப்பு பற்றி கூறுங்கள். 

இயற்கையுடனான மனிதர்களின் தொடர்பு வரலாற்று ரீதியானது. பறவைகளின் பாடல், இரவில் தவளைகளின் சத்தம் ஆகியவற்றைக் கேட்பது மனிதர்களின் மனம், உடல் என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், மனநல குறைபாடுகள், மனச்சோர்வு ஆகியவை நகர மனிதர்களுக்கு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், நாம் இயற்கையிலிருந்து பிரிக்கப்பட்டதுதான். 


nature affects human cognition -the impact of separating us from  nature are powerful

https://ccb.stanford.edu/people/gretchen-c-daily

https://www.expo-cosmos.or.jp/english/cosmos/jyusyou/2009.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்