இடுகைகள்

இந்தியா- மும்பை தாக்குதல்(2008) லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மும்பை தாக்குதல்: நடந்தது என்ன?

படம்
துயரத்திற்கு வயது 10! 2008 ஆம் ஆண்டு நவ.26 ஆம் தேதி. பாகிஸ்தானிலிருந்து மும்பையில் ஊடுருவிய பத்து தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 பேர் பலியாயினர். 60 மணிநேரத்தில் நடந்த இப்பயங்கர தாக்குதலில் 300 பேர்களுக்கு மேல் படுகாயமுற்றதும், மக்களுக்கு அரசு மீது அவநம்பிக்கை ஏற்பட்டதும் தனிக்கதை. நவ.26 பத்து தீவிரவாதிகள் மும்பையை நண்பகல் 1 மணிக்கு அடைகின்றனர். இரவு 9.30க்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முதல் தாக்குதலை நடத்துகின்றனர். பல்வேறு இடங்களி லும் தாக்குதல்கள் நடைபெற்றன. நவ.29 என்எஸ்ஜி கமாண்டோ மூன்று இடங்களிலுள்ள தீவிரவாதிகளை கொல்கிறது. டிச.2 அன்று பாகிஸ்தானிலிருந்த லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் முகமது சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார். ஜன.6 இந்தியா பாகிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய தகவலை பாக்.அரசுக்கு தெரிவித்தது. அடுத்தநாள், தீவிரவாதி அஜ்மல் கசாப், பாகிஸ்தானி என்று ஒப்புக்கொண்டார் பாக்.ஐடி அமைச்சர் ஷெரி ரஹ்மான்.  26/11 தாக்குதலுக்கு பாகிஸ்தானில் திட்டமிட்டதை பாக்.அரசு இந்திய அரசின் கேள்விகளின் பின்னணியில் ஏற்றது. அஜ்மல் கசாப், 2012 ஆம் ஆண்டு ஏர்வ