இடுகைகள்

வார இதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளமையான குமுதம் வார இதழை வெற்றிபெறச் செய்த எடிட்டர் எஸ்ஏபி!

படம்
  எடிட்டர் எஸ்ஏபி ரா.கி.ரங்கராஜன் ஜ.ரா.சுந்தரேசன் புனிதன் குமுதம் இதழை தொடங்கி ஆசிரியராக நடத்தியவர், எஸ்.ஏ.பி. அண்ணாமலை. இவருக்கு உதவிய பதிப்பாளர் பார்த்தசாரதி. இருவரும் சேர்ந்துதான் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற கேப்ஷன் கொண்ட குமுதத்தை உருவாக்கினர்.  குமுதத்தின் அடிப்படையே புதுமைதான். இன்று குமுதம் இருபது ரூபாய் விலையில் விற்று வருகிறது. ப்ரியாகல்யாணராமன் அதனை பாகுபலியாக சுமந்து வருகிறார். அன்று நிலைமை அப்படியில்லை. எஸ்ஏபி இதற்கென மூவரை உதவி ஆசிரியர்களாக வைத்திருந்தார். அவர்கள்தான் எடிட்டர் எஸ்ஏபி நூலை எழுதியவர்கள்.  நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தவைதான். அதை தொகுத்தே மூவரும் தங்களின் தனிப்பட்ட அனுபவங்களாக தொகுத்துள்ளனர்.  எடிட்டர் எஸ்ஏபி, தான் வாழும் காலம் மட்டும் தன்னைப் பற்றி யாரும் புகழ்ந்து எழுத அனுமதிக்கவிலை. செட்டியார் அந்த மட்டுக்கு தெளிவாக வீண் புகழ்ச்சி, திறமையைக் கெடுக்கும் என உணர்ந்திருக்கிறார். ரா கி ரங்கராஜன் எழுத்தில் ஒருமுறை மட்டுமே ஒருவரது புகழ்ச்சியால் மயங்கியிருந்த நிகழ்வை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.