இடுகைகள்

கமல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்பமாக மகிழ்ந்திருக்க வாசிக்கலாம்! - லுங்கி - யுவகிருஷ்ணா - கட்டுரைகள்

படம்
  லுங்கி  யுவகிருஷ்ணா யுவகிருஷ்ணா, தனது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் முன்னர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.  நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள்.  இதனை வாசிக்கும் யாரும் புன்னகைக்காமல் படிக்கவே முடியாது. அந்தளவு வரிக்குவரி பகடி, நையாண்டி என தனது சிறுவயது வாழ்க்கை, சினிமா அனுபவங்கள், காதலர்தினத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டம் செய்யும் கோமாளித்தனங்கள், கண்ணில் பட்ட செய்திகள் என அனைத்தையும் ஜாலியாக கேலி செய்து எழுதியிருக்கிறார்.  உல்லாசம் கட்டுரையில் செய்தியை எப்படி எழுதுவது என தந்தி நிருபர்களின் திறமையை போற்றுவது போல தோன்றும் ஆனால் படித்த பிறகுதான் அந்த கதையில் உள்ள ஓட்டைகள் பெரிதாக தெரியும். அந்தளவு நக்கலும் நையாண்டியுமாக எழுதியிருக்கிறார். ராமசாமியை இனி யாரும் ஊர் உலகத்தில் மறக்கவே முடியாது. அவர் தனது மனைவி மற்றும் என்ஜினியரிடம் அப்படியொரு சோதனையை செய்து பார்த்திருக்கிறார்.  தாலியக் கட்டு கட்டுரையைக் கூட நாம் சிரித்தபடியே வாசிக்கமுடியும். அதன் இறுதி வரியை நிச்சயம் படிப்பவர்கள் புன்னகைக்காமல் கடக்க முடியாது. வலைப்பதிவராக இருந்து பத்திரிக்கையாளராக மாறிய யுவகிருஷ்ணா, நையாண்டி செய்வ

நான் உண்மையைச் சொன்னால் விபத்தில் கொல்லப்படுவேன்! - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு

படம்
              சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்ய வேட்பாளர் , வேளச்சேரி இவர் மாநில அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாரத் நெட் திட்டத்தில் செய்த முறைகேடுகளை தட்டிக்கேடார் . அரசு எப்போதும் போல பாபுவுக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுத்தது . இதனால் தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு , கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துவிட்டார் . அவரிடம் பேசினோம் . அரசு பணியை விட்டு நீங்கள் விலக காரணம் என்ன ? ஊழலுக்கு எதிரான கோபம்தான் அரசுப்பணியை விட்டு விலக வைத்தது . உலகளவில் தரம் கொண்ட தமிழ்நாடு , அரசு அமைப்பு நிர்வாகத்தில் எப்படி சீர்குலைவுக்குள்ளானது என்பதை நீங்களே பார்க்கலாம் . கடந்த இருபத்தைந்து ஆண்டுளளாக எந்த ஒரு அமைச்சரும் தனது துறைசார்ந்து திட்டம் சார்ந்து எந்தவொரு கேள்வியையும் என்னிடம் கேட்டதில்லை . அவர்களுக்கு அக்கறை ஏலம் மற்றும் பணிமாற்றம்தான் . தேசிய சிறந்த நிர்வாக கட்சி என்ற அமைப்பை 2026 இல் தொடங்க திட்டமிட்டிருந்தேன் . ஆனால் அதற்குள் பாரத் நெட் பிரச்னை ஏற்பட்டுவிட்டது . எனவே நான் அரசுபணியை விட்டு விலகி அரசியலுக்கு வர நேரிட்டது . ஊழலுக்கு எதிரான