பேராசிரியர் சுசி தாரு நேர்காணல்

உரையாடல் ஒன்றின் தொடக்கம் இந்தியாவில் முதல்முறையாக பால் வேறுபாடு குறித்த கல்விப்பாடம் ஒன்றினை ஹைதராபாத் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப கல்வி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து மற்ற கல்வி நிறுவனங்கள் கவனிக்கின்றனவா? ஆங்கிலத்தில்: எஸ்.பி. விஜயா மேரி தமிழில்: எம்.டி. ரிச்சர்ட் இந்த பாடப்புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களில் ஒருவரான சுசி தாரு அவர்களிடம் பேசினோம். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புத்தகத்திற்கு என்ன மாதிரியான விளைவு உள்ளது? நான் இவ்வளவு ஒருமித்த கருத்துகள் இருக்கும் இந்த விஷயத்துக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாடப்புத்தகம் மக்களின் மனநிலையை மாற்றிவிடுமா? நான் இந்தக்கேள்வியை எனக்குள்ளேயே திரும்ப திரும்ப கேட்டுக்கொள்வதுதான். உண்மை இதுதான். ஒரு புத்தகம் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிட முடியாது. நாம் ம